Feb 2, 2010

கோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்

இணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும்.

அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது எப்படி? என்று இணைய புதியவர்கள் பின்னூட்டத்திலும், ஈமெயில் மூலமாகவும் நீண்ட நாட்களாகவே கேட்டு வருகிறார்கள். அதனைப் பற்றி மற்ற பதிவர்களின் சுட்டிகளுடன் இந்த இடுகையில் பார்ப்போம்.

டோரன்ட் என்பது உங்களிடம் உள்ள கோப்புகளை உன்லகெங்கும் மற்றவர்களிடையே பகிர்ந்து கொள்ளும் வசதி. சாதாரணமாக தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கும் போது அந்த கோப்புகளை ஏற்தாவது ஒரு இணைய வழங்கியில் (Web Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கிருந்து நீங்கள் அவற்றை பெறுவீர்கள்.

ஆனால் டோரன்ட்களில் உலகெங்கும் நீங்கள் தரவிறக்கும் கோப்புகளை கொண்டுள்ள கணினிகள் இணைய இணைப்பில் இருக்கும் போது இணைக்கப் பட்டிருக்கும். நீங்கள் மற்றவர் கணினியில் இருந்து அந்த கோப்பினை தரவிறக்கி கொண்டிருப்பீர்கள். உங்கள் கணினியில் உள்ள அந்த கோப்பின் பகுதிகள் மற்றவர்கள் தரவிறக்க உங்கள் கணினியில் இருந்து அனுப்பப் பட்டு கொண்டிருக்கும்.

இந்த அருமையான தொழிநுட்பம் மூலம் அதிக செலவு பிடிக்கும் இணைய வழங்கியின் தேவை இன்றி பயனர்களே தங்கள் கணினிகளை கோப்பினை மற்றவருக்கு பகிரும் வழங்கி ஆகவும், தரவிறக்கும் பயனராகவும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.

டோரன்ட்களின் தொழில்நுட்பம் பற்றி அறிந்து இருந்தாலும் அதனை தமிழில் புரியும்படி விளக்குவது எனக்கு பெரிய சவாலாகவே இருந்தது. பதிவர் சுடுதண்ணி டோரன்ட் குறித்து எளிமையாக அனைவருக்கும் புரியும்படி மூன்று இடுகைகள் எழுதி உள்ளார். டோரன்ட் பற்றி தமிழில் இதை விட சிறப்பாக யாரும் எழுத முடியாது எனும் வண்ணம் அந்த இடுகைகள் உள்ளன. டோரன்ட் பற்றி புரிந்து கொள்ள அந்த இடுகைகளை கண்டிப்பாக படியுங்கள். இடுகை1, இடுகை2, இடுகை3.

படிச்சாச்சா? இந்த இடுகையில் பிரபலமான UTorrent செயலி பயன்படுத்தி டோரன்ட் மூலம் கோப்புகளை தரவிறக்குவது எப்படி? என்று பார்ப்போம். டோரன்ட் மூலம் தரவிறக்க பல்வேறு செயலிகள் உதவினாலும் மிகச் சிறப்பானதாக யுடோரன்ட் செயலி விளங்குகிறது.

இதனை யுடோரன்ட் தளத்திற்கு சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவிய பின் யுடோர்ரன்ட் டாஸ்க் பாரில் வலது மூலையில் வால்யூம் கண்ட்ரோலுக்கு அருகில் அமர்ந்து இருக்கும். இனி டோரன்ட் தளங்களில் நீங்கள் தரவிறக்கும் டோரன்ட் கோப்புகள் (.torrent) யுடோரன்ட் மூலம் திறக்கப்பட்டு தரவிறக்கம் ஆரம்பமாகும். உங்கள் கணியில் ஏற்கனவே தரவிறங்கி உள்ள கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு (Upload)  கொண்டிருக்கும்.


முக்கியமாக உங்கள் தரவிறக்கம் முடிந்த பின்பும் உங்களிடம் தரவிரங்கிய கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு கொண்டிருக்கும். உங்களிடம் Unlimitted Bandwidth இணைய இணைப்பு இருந்தால் பரவாயில்லை. Limitted Bandwidth இணைய இணைப்பு உள்ளவர்களாக இருந்தால் உங்களை அறியாமலேயே உங்கள் இன்டர்நெட் பில் எகிறி விடலாம். எனவே தரவிறக்கம் முடிந்தவுடன் உங்கள் யூடோர்றேன்ட் செயலியை நிறுத்தி விடுவது அல்லது மூடி விடுவது நல்லது.

ஏற்கனவே பல பதிவர்கள் இது குறித்து தமிழில் எழுதி உள்ளார்கள். அவற்றையும் படிக்கவும். உங்களுக்கு முழுமையான விளக்கம் கிடைக்கும்.

http://pkp.blogspot.com/2008/11/blog-post_11.html
http://velang.blogspot.com/2009/12/u-torrent.html
http://browseall.blogspot.com/2009/11/mininovademonoid.html
http://rvkrishnakumar.blogspot.com/2009/10/blog-post_07.html
http://sagacomputer.blogspot.com/2009/03/2008-torrent.html

தொடர்புடைய இடுகைகள்

3 comments:

  1. உங்களைப் பற்றி தலைவர் பிகேபி அவர்கள் தனது பதிவில் வாழ்த்தியுள்ளார். அதை நான் வழிமொழிகிறேன். உங்கள் எழுத்துப்பணியை தொடர்ந்து வழங்குவீராக.

    ReplyDelete
  2. பார்த்தேன் தமிழ்நெஞ்சம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    உங்கள் தொடர் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு மிக்க நன்றி :D.. சும்மா பகிர்ந்துக்காம, கன்னாபின்னான்னு கூசுற அளவுக்கு சொல்லிருக்கீங்க.. அதுக்கு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete