தரவிறக்கங்களை நிர்வகிக்க இலவச மென்பொருள்

பின்னூட்டத்தில் கணேஷ்பாபு குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புகளில் கோப்புகளை தடையின்றி தரவிறக்குவதற்கு மென்பொருள் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார். பெரும்பாலானோருக்கு இது போன்ற மென்பொருள்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இணையத்தில் புதிதாக நுழைபவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

இணையம், தகவல் தளங்களை பார்ப்பதற்கு மட்டுமன்றி அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள மென்பொருள், பாடல், வீடியோ என்று அனைத்துவிதமான கோப்புகளையும் தரவிறக்க பெரிதும் உபயோகப்படுத்த படுகிறது.இணையத்தில் கோப்புகளை தரவிரக்குவோர் பொதுவாக எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பார்ப்போம்.

கோப்புகளை தரவிறக்கி கொண்டு இருக்கும் போது மின்சாரம் போய் விட்டாலோ / இணைய இணைப்பு தடை பட்டாலோ மீண்டும் முதலில் இருந்து அந்த கோப்பை தரவிறக்க வேண்டும். விடுபட்ட இடத்தில் இருந்து தொடர முடியாது.

வேகம் குறைந்த இணைய இணைப்புகளில் தரவிரக்கத்தில் முழு வேகம் இருக்காது. வேகத்தை முடுக்க வேண்டியது அவசியம்.

பெரிய கோப்புகளை தரவிறக்கும் போது அவற்றை தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் தரவிறக்குவதற்கு பதிலாக அதனை நிறுத்தி (Pause) வைத்து பின்பு நமக்கு வசதிப்படும் நேரத்தில் தொடருவது (Resume) இயலாது.

கோப்புகளை தரவிரக்குவதில் டோர்ரன்ட் (Torrent) என்று ஒரு முறை உண்டு. அதற்கென்று தனி மென்பொருளை உன்பயோகிக்காமல் எல்லா வித தரவிறக்கங்களை ஒரே மென்பொருளில் நிர்வகிக்க முடிந்தால் நல்லது.


போன்ற வீடியோ தளங்கள் பெருகி உள்ள நிலையில் அவற்றில் உள்ள வீடியோ க்களை தரவிறக்க அந்த தளங்கள் வசதி தருவதில்லை. வேகம் குறைந்த இணைய இணைப்புகளில் வீடியோக்களை அந்த தளங்களில் காண்பதை விட தரவிறக்கி கணினியில் பார்ப்பது எளிதாக இருக்கும்.

வீடியோக்கள், திரைப்படங்களை தரவிறக்கும் போது அவை முழுவதுமாக தரவிறக்கிய பின்பே பொறுத்திருந்து பார்க்க வேண்டி இருக்கும். அதற்க்கு பதிலாக வீடியோ தரவிறக்கி கொண்டிருக்கும் போதே அதனை பார்க்க முடிந்தால் நேரம் மிச்சம்.

எண்ணிக்கையில் அதிகமான கோப்புகளை தரவிறக்கும் போது அவை எந்தெந்த நேரத்தில் தரவிறக்க வேண்டும் என்று கால அட்டவணை அமைத்து மேலாண்மை செய்யும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.

சுருக்கப்பட்ட ZIP கோப்புகளை சில தளங்கள் வழங்குவார்கள். முழுதும்
தரவிறக்கிய பின்பே அதனுள் என்னென்ன கோப்புகள் உள்ளன என்று அறிய முடியும். மாறாக தரவிறக்க ஆரம்பத்திலேயே அந்த ZIP கோப்பின் உள்ளே என்னென்ன கோப்புகள் உள்ளடங்கி உள்ளன என்பதை அறிந்தால், தேவை இல்லாத கோப்புகளை தரவிறக்குவதை தவிர்க்கலாம்.

இணையத்தில் தளங்களை பார்த்து கொண்டிருக்கும் போது ஏதேனும் தரவிறக்கி கொண்டு இருந்தால் இணைய தளங்களை பார்ப்பது மிகவும் மெதுவாக இருக்கும். காரணம் கோப்பு தரவிறக்கம் அதிக வேகத்தை எடுத்து கொள்ளுவது தான். இணைய பக்கங்களை பார்க்கும் போது அதற்கு முன்னுரிமை கொடுத்து தரவிறக்க வேகத்தை குறைத்து வைக்கும் வசதி இருந்தால் நல்லது.

நம்மிடம் உள்ள ஒரு கோப்பை மற்றொருவருடன் இணையத்தில் பகிர விரும்பினால் சுத்தி வளைக்காமல் எளிதில் தரவேற்றி (Upload) செய்து அடுத்தவருடன் பகிரும் வசதி.

மேலே கூறி உள்ள சிக்கல்களை சிலவற்றை தீர்க்க தனித்தனி மென்பொருள்கள் இருந்தாலும் பணம் கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இலவசமாக இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

ஆமாங்க! மேலே கூறியுள்ள எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல சிறப்பான மென்பொருள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

இலவச டவுன்லோட் மேனேஜர் (Free Download Manager)


தரவிறக்கம் தொடர்பாக வணிக ரீதியில் விற்கப்படும் பிற மென்பொருள்களை விட இந்த இலவச மென்பொருள் மிக நன்றாக உள்ளது. இந்த பக்கத்திற்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

பல நிறுவனங்களின் விருதுகளை பெற்றுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ் உள்ளிட்ட இணைய உலாவிகளில் ஒருங்கிணைந்து செயல்படும்படி இந்த மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. தரவிறக்க பிரச்சினைகளை தீர்க்க/ தரவிறக்கத்தை மேம்படுத்த வல்ல மென்பொருள். நிச்சயம் உபயோகமாய் இருக்கும்.

கோப்பு = File , தரவிறக்கம் = Download

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

8 comments:

நிகழ்காலத்தில்... said...

dap, fdm ஐ நல்லாயிருக்குமா

Tech Shankar said...

I am using FDM for more than 2 years. It is great. But while downloading Torrent, I was not able to set the seeding speed.

Means, in bittorrent, I can set the seeding speed to very very low - Download speed unlimited with seeding speed to 1K.

But I tried to find this option in FDM, not able. Please tell me if u know the answer.

thanks
TN

லொல்லு சபா said...

நல்ல தகவல். நன்றி டிவிஎஸ்ஐம்பது

ரெண்டு said...

ரொம்ப நல்லயிருக்குங்க,

அப்படியே torrents பத்தியும் எழுதுங்களேன்.

கிரி said...

பயனுள்ள தகவல்ங்க ..நான் முயற்சித்து பார்த்து கூறுகிறேன்

கிரி said...

// லொல்லு சபா said...
டிவிஎஸ்ஐம்பது//

:-)

Anonymous said...

நன்றிகள் நண்பரே.
எனது தெரிவு orbit downloader நிறைய காலமாக. இலவசம். முன்னர் IDM பாவித்தேன். இப்ப இது.

கிருஷ்ணா (Krishna) said...

நன்றி.
டவுன்லோட் செய்வது போல் அப்லோட் செய்வதற்கும் இதே மாதிரி எதாவது இருந்தால் கூறுங்கள்.
Skydrive வில் அப்லோட் செய்யும் போது இணையம் தடைப்பட்டால் நின்று விடுகிறது.
பிட் டோர்றேன்ட் போல் எதாவது மேன்தொகுப்பு Folder synchronisation etc., இருந்தால் கூறுங்கள்.
நன்றி.