ஹார்ட்டிஸ்க் இட பற்றாகுறை - பெரிய கோப்புகளை கண்டறிய

கணினி வாங்கும் பொழுது நீங்கள் போதுமான கொள்ளளவு கொண்ட ஹார்ட்டிஸ்க் வாங்கி இருப்போம். பெரும்பாலானோர் வீடியோ , மென்பொருள்களை தரவிறக்கி உபயோகித்து விட்டு அவற்றை அளிக்க மறந்து இருப்போம். நாளடைவில் பாடல்கள், வீடியோ கோப்புகள், மென்பொருள்கள் என்று பெரிய கோப்புகளால் ஹார்ட்டிஸ்க் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும்.

அதிக இடம் எடுத்து கொண்டுள்ள கோப்புகள் எங்கு சேமித்து வைத்தோம் என்று மறந்து இருப்போம். அந்நேரங்களில் உங்கள் கணினியும் வேலை செய்ய திணறும். "Low Disk Space" என்று எச்சரிக்கை செய்தி தரும்.

இத்தருணங்களில் கணினியில் தேங்கி உள்ள கோப்புகளை தேடி கண்டுபிடித்து அளிக்க வேண்டும்.ஹார்ட்டிஸ்கில் எங்கு பெரிய அளவு கொண்ட கோப்புகள் இருக்கின்றன என்பதை கண்டறிவது கடினமான விஷயம். இந்த பெரிய கோப்புகளை அழித்தாலே பெரும்பாலான இடத்தை காலியாக வைத்து கொள்ளலாம்.

இதனை செய்ய Primitive File Size Chart என்ற இலவச மென்பொருள் உதவுகிறது. இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை. தரவிறக்கிய கோப்பை திறந்தாலே போதுமானது.


இது விண்டோஸ் 2000/2003/XP/Vista/7 இயங்குதளங்களில் இயங்கும். இதன்
மூலம் நீங்கள் பெரிய கோப்புகளை , அவை உள்ள போல்டர்களை கண்டறியலாம். பின்பு அந்த போல்டர்களுக்கு சென்று அந்த கோப்புகளை அழித்து கணினியின் ஹார்ட்டிஸ்க் இடத்தை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள்.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

12 comments:

கடைக்குட்டி said...

ஜூப்பரு :-)

கடைக்குட்டி said...

இப்பிடி முத்து முத்தா எழுதிறீங்க.. ஆனா ஒரு மொற பாத்த இடுகைய திருப்பியும் கொஞ்ச நாள் களிச்சு தேட கஷ்டமா இருக்கு...

உதாரணமா.. ப்ளாக்குகள் உள்ளேயே படங்கள் திறக்குன்னு ஒன்னு போட்டீங்க இல்ல.. அத திருப்பியும் எடுக்க ரொம்ப நேரமாச்சு அதான்..

நல்லா எழுதுறீங்க.. வேற டெம்ப்ளேட் போடலாமா.. இல்லா பதிவர்களுக்கு கணினி சம்பந்தமாகன்னு வகை வகையா பிரிக்கலாமான்னு நீங்க பத்து செய்யுங்க..

இன்னும் அனவருக்கும் பயன்படவேண்டுமே என்ற எண்ணத்தால் வந்த யோசனை :-)

டிவிஎஸ்50 said...

கடைக்குட்டி வாழ்த்துக்களுக்கு நன்றி. தேடுதல் என்பது பிளாக்கில் கஷ்டம்தான். அதற்காகத்தான் அனைத்து இடுகைகளையும் தனியா பட்டியலிட்டு உள்ளேன்

http://tvs50.blogspot.com/2009/05/browse-all-posts.html

//நல்லா எழுதுறீங்க.. வேற டெம்ப்ளேட் போடலாமா.. இல்லா பதிவர்களுக்கு கணினி சம்பந்தமாகன்னு வகை வகையா பிரிக்கலாமான்னு நீங்க பத்து செய்யுங்க..//

இது நல்ல யோசனை. தனியே வகைப்படுத்தி வைப்பது நல்லது.

மீண்டும் மிக்க நன்றி

தமிழ்நெஞ்சம் said...

Great Dear Buddy. Classic Idea


//தேடுதல் என்பது பிளாக்கில் கஷ்டம்தான். அதற்காகத்தான் அனைத்து இடுகைகளையும் தனியா பட்டியலிட்டு உள்ளேன்

Suresh said...

Suresh Here

Even i faced the same issue, i searched in gmail then got the post of urs regarding the image.

Please try to label it and categorize which may surely help many readers like us :-)

Cheers

டிவிஎஸ்50 said...

நன்றி சுரேஷ்,

முக்கியமாக தீர்க்க வேண்டிய குறையை சுட்டி காட்டியதற்கு .

இந்த வார இறுதியில் இந்த வேலையை முடித்து விட வேண்டியதுதான் . :)

தொடர்ந்து படித்து என் வலைப்பதிவை செம்மைபடுத்துவதற்கு நன்றி .

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல தகவல்

முருகன் said...

It is really very nice tool. I used the s/w in my computer , find the big size folder and delete the unwanted files. I need the tools to backup the files periodically and stored into some location. இருந்தா எழுதுங்கோ

saravanan12july said...

http://www.uderzo.it/main_products/space_sniffer/files/spacesniffer_1_0_4_0.zip

Subash said...

நல்லதொரு தகவல்.

Samn said...

நல்ல பதிவு தல.. தொடர்ந்து எழுதுங்க

Anonymous said...

your blogs are very good. I like http://www.uderzo.it/main_products/space_sniffer/index.html