என்னைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால், கணினி மேல் காதல் கொண்டவன். தமிழ் மொழியின் மீது ஆர்வம் உண்டு. தாய்மொழியில் கூட முழுமையாக எழுத முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி எனக்குண்டு. எழுவது என்பது எனக்கு புதிய வேலைதான். எழுத முடியுமா? என்ற குழப்ப நிலையில் இந்த பிளாக்கை ஆரம்பிக்கிறேன். எந்த அளவு செல்கிறது என்று பார்ப்போம்.
நான் எழுதுபவற்றில் உங்களுக்கு குழப்பமோ, சந்தேகமோ இருந்தால் தயங்காமல் கேளுங்கள். முடிந்தவரை நிவர்த்தி செய்கிறேன்.
தன் எழுத்துகள் மூலம் என்னை எழுத தூண்டிய, வலைப்பதிவில் முன்னோடிகளாய் இருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் என் நன்றிகள்.
- டிவிஎஸ்50
மேலும் வாசிக்க!

