பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க என்று Feedburner பற்றி எழுதிய இருந்த இடுகை அதிக வரவேற்பை பெற்றது. பெரும்பாலானோர் உபயோகப்படுத்த ஆரம்பித்தனர்.ஆனால் பின்னூட்டத்தில் பதிவர்கள் சுரேஷ்கண்ணன், முத்துராமலிங்கம் ஆகியோர் இந்த மாற்றத்தால் தமிழ்மணம் திரட்டியில் இடுகைகளை இணைப்பதில் பிரச்சினைகள் தோன்றுவதாக தெரிவித்தனர். அதனை ஆராய்ந்ததில் பிரச்சினைகளுக்கு காரணம் என்ன? , தீர்வும் கண்டறிய முடிந்தது. அதனை இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
பிரச்சினைகள் என்ன?
வலைப்பதிவின் RSS Feed செயல்பாடுகளை Feedburner க்கு மாற்றி விட்ட பிறகு. தமிழ்மணத்தில் இடுகைகளை இணைப்பதில் பிரச்சினைகள். இடுகை தமிழ்மணத்தில் இணைந்தாலும் இடுகையில் தோன்றும் கருவி பட்டையில் வாக்களிக்கும் வசதி தோன்றாமல் முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தோன்றும். பின்பு எத்தனை முறை "அனுப்பு" என்பதை அழுத்தினாலும் "புதிய இடுகைகள் காணப்பட வில்லை" என்றே வரும்.
தமிழ்மணத்தில் இடுகையின் பின்னூட்டங்கள் திரட்டப்பட மாட்டது. இந்த பிரச்சினை தமிழ்மணம் அழித்து வந்த சிறப்பு சேவைகளில் Feedburner உபயோகிப்பவர்களுக்கு பின்னடைவை தந்தது.பிரச்சினையின் காரணம் என்ன?
Feedburner -ல் நீங்கள் புதிய feed உருவாக்கும் போது Item Views, Item Link Clicks போன்றவற்றை கண்டறியும் பொருட்டு Feedburner உங்கள் வலைப்பதிவின் இடுகைக்கான URL - ஐ புதிதாக மாற்றி விடுகிறது. தமிழ்மணம் போன்ற திரட்டிகள் உங்கள் RSS Feed போன்றவற்றை அடிப்படையாக வைத்து இயங்குகின்றன. Feedburner உங்கள் இடுகையின் URL-ஐ மாற்றும் போது தவறுகள் நிகழுகின்றன.
உதாரணத்திற்கு பதிவர் ஆ.முத்துராமலிங்கம் அவர்களின் பென்சில் என்ற வலைப்பதிவை எடுத்து கொள்வோம். அவர் உருவாகிய Feedburner RSS Feed URL : http://feeds.feedburner.com/asuda5posts . அந்த RSS Feed -ல் முதல் இடுகை மீன் தொட்டி. >மூன்று கவிதைகள் க்கான URL http://asuda5.blogspot.com/2009/06/blog-post_25.html என்று இருக்க வேண்டும். ஆனால் http://feedproxy.google.com/~r/asuda5posts/~3/DwobOyYKGaM/blog-post_25.html என்று வருகிறது.
உங்கள் இடுகை RSS Feed -ல் எத்தனை முறை கிளிக் (Item Click) செய்யப்பட்டது என்பதை கணக்கிட Feedburner உங்கள் URL ஐ மாற்றி விட்டது. தமிழ்மணத்தில் இந்த URL பகிரப்படும் போது சிக்கல்கள் உண்டாகிறது. பிரச்சினைக்கு இதுதான் காரணம்.இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன?
Feedburner -ல் உள்ள வசதிகளான Item Views, Item Link Clicks போன்ற வசதிகளை நீக்குவதன் மூலம் சரி செய்ய முடியும்.
Feedburner தளத்துக்கு சென்று Feed ஐ செலக்ட் செய்து கொண்டு அதில் Configure Stats என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
அடுத்து தோன்றும் பக்கத்தில் Item Views, Item Link Clicks , Item enclosure downloads போன்ற ஆப்சன்கள் செலக்ட் ஆகி இருந்தால் அவற்றை எடுத்து விட்டு Save செய்து கொள்ளவும். இனி RSS Feed -ல் உங்கள் URL கள் பழைய Default URL களாக மாறி இருக்கும்.
அடுத்து Feedburner RSS Feed URL (உ.தா http://feeds.feedburner.com/asuda5posts) ஐ திறந்து பார்க்கவும். இடுகைகளுக்கான URL http://feedproxy.google.com/~r/ என்று ஆரம்பிக்காது. உங்கள் வலைப்பதிவின் URL லோடு ( உ.தா. http://asuda5.blogspot.com/2009/ ) ஆரம்பிக்கும் . உடனடியாக மாற்றம் தெரியவில்லை என்றால் பொறுத்திருக்கவும். இது அப்டேட் ஆக சில நிமிடங்கள் ஆகலாம்.
அடுத்து பழைய இடுகையில் சொல்லி இருந்தபடி இதனை உங்கள் வலைப்பதிவின் நிரந்தரமான RSS Feed URL ஆக மாற்ற வேண்டும். இதற்கு உங்கள் பிளாக்கர் Dashboard -ல் Settings --> Site Feed --> Post Feed Direct URL என்பதில் உங்கள் புதிய Feedburner RSS Feed Url அளித்து சேமிக்கவும். இனி உங்கள் வலைப்பதிவுக்கான RSS Feeds வசதியை FeedBurner கவனித்து கொள்ளும்.

இப்போது மீண்டும் உங்கள் இடுகைகளை தமிழ்மணத்தில் இணைத்து பாருங்கள். சிக்கல் இல்லாமல் இணையும். பின்னூட்டங்கள் திரட்டப்படும். இதனால் உங்கள் RSS Feed Readers கணக்கிடுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.
இத்தனை செயல்படுத்தி பார்க்கவும். மேலும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் தயங்காமல் கூறவும் தீர்வு தர முயல்கிறேன். பிரச்சினைகள் இருப்போர் உங்கள் Feedburner RSS Feed உரல் ஐ பின்னூட்டத்தில் தரும்படி கேட்டு கொள்கிறேன்.
மேலும் வாசிக்க!


பிற்சேர்கை (18-01-2010) : இந்த இடுகை தமிழ்மணம் திரட்டியின் 2009 -ம் ஆண்டிற்கான சிறந்த இடுகை என்று முதல் பரிசை 'தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்' என்ற பிரிவின் கீழ் பெற்றுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்ளுகிறேன். வாக்களித்த, ஆதரித்த அனைவருக்கும் எனது நன்றிகள். விருதினை வழங்கி ஊக்குவிக்கும் தமிழ்மணம் குழுமத்திற்கு நன்றி.




















