கூகிள் தேடல் முடிவுகளை ஜிமெயிலில் இணைக்க

இந்த இடுகை ஜிமெயிலில் உள்ள ஒரு கூடுதல் வசதி பற்றியது. நீங்கள் மின்னஞ்சல் உபயோகிக்கும் போது ஏதாவது தகவலை தேட வேண்டும் என்றால் தனி பக்கத்தில் கூகுளை திறந்து தேவையானவற்றை தேடி கொண்டிருந்திருப்பீர்கள்.

தேடலில் உள்ள குறிப்பிட்ட முடிவை மின்னஞ்சலில் இணைக்க காப்பி செய்து மின்னஞ்சல் உள்ளே பேஸ்ட் செய்ய வேண்டி இருக்க வேண்டும். ஜிமெயிலில் ஒரு வசதி இந்த வேலையை மிகவும் எளிதாக்குகிறது. இந்த வசதியை உயிர்ப்பித்துக் கொள்ள உங்கள் ஜிமெயிலில் வலது மூலையில் உள்ள 'Settings' லிங்கை கிளிக் செய்து 'Labs' பகுதிக்கு சென்று கொள்ளுங்கள்.


லேப்ஸ் பகுதியில் கீழே வாருங்கள். 'Google Search' என்ற வசதியை கண்டுபிடித்து 'Enable' கிளிக் செய்து கொள்ளவும். அடுத்து 'Save Changes' கிளிக் செய்து சேமித்து கொள்ளுங்கள். உங்கள் ஜிமெயில் தானாக மீள் துவக்கப்படும். இப்போது இடது புறத்தில் Chat -க்கு கீழே Google Search வசதி தோன்றி இருக்கும்.


நீங்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கும் போது ஈமெயில் டூல்பாரில் புதிதாக ஒரு கூகிள் பட்டனை காணலாம். அதனை கிளிக் செய்து வேண்டியவற்றை ஜிமெயில் உள்ளேயே நீங்கள் தேடிக்கொள்ள முடியும். அதன் முடிவுகளில் உங்களுக்கு தேவையானவற்றை 'Send by email' என்பதனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சலில் எளிதாக இணைத்துக் கொள்ள முடியும்.

இனி மேல் உங்களுக்கு தேவையான விசயங்களை ஜிமெயில் உள்ளேயே தேடிக்கொள்ளுங்கள். ஜிமெயிலில் இந்த கூடுதல் வசதி சிலருக்கு பயன்படும்.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

1 comments:

krish48 said...

your blog is fine. I became a follower of ur blog