தமிழ்நுட்ப டிவிட்டுகள் 01-02-2010 முதல் 07-02-2010 வரை

சென்ற வாரத்தில் ட்விட்டரில் நான் பகிர்வதை, குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை ஒரு இடுகையாக இந்த வலைப்பதிவில் பகிர போவதாக கூறி இருந்தேன். நான் டிவிட்டுவது பெரும்பாலும் ஆங்கில சுட்டிகளுடன் கூடிய தகவலாகத்தான் இருக்கும். எனவே வரவேற்பை பெறுமா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் ட்விட்டர் பரிட்சயம் இல்லாத நண்பர்கள் இந்த முறையை அதிகம் வரவேற்றனர். சென்ற வாரம் வேலைப்பளுவால் இணையத்தில் அதிகம் வாசிக்க முடியவில்லை. குறைவாகவே டிவிட்ட முடிந்தது. அந்த சில டிவிட்டுகள் இதோ.
மேலும் வாசிக்க!

பிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசதி

நமது வலைப்பதிவு வேகமாக திறக்கும்படி அமைத்து இருந்தால்தான் வாசிப்பவர்கள் விரும்புவர். சில வலைப்பதிவுகள் திறக்க நேரம் பிடிக்கும் போது அவற்றை வாசிக்காமல் / தொடர்ந்து செல்லாமல் விட்டு விடுவதுண்டு. அணுகுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும்.

நாம் எவ்வளவுதான் சிறப்பாக எழுதி வந்தாலும் நமது வலைப்பதிவின் வடிவமைப்பு சரியில்லாமல் இருந்தால் / திறக்க அதிக நேரம் பிடித்தால் வாசிப்பவர் நமது தளத்திற்கு தொடர்ந்து வருவதை விரும்ப மாட்டார். RSS செய்தியோடை போன்ற மாற்று வழிகளில் வாசிப்பார். அல்லது வாசிப்பதை நிறுத்தி விடுவார்.
மேலும் வாசிக்க!

இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க

சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.

அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை கொடுத்து லாகின் செய்து கொள்ள முடியும்.
மேலும் வாசிக்க!

கோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்

இணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும்.

அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது எப்படி? என்று இணைய புதியவர்கள் பின்னூட்டத்திலும், ஈமெயில் மூலமாகவும் நீண்ட நாட்களாகவே கேட்டு வருகிறார்கள். அதனைப் பற்றி மற்ற பதிவர்களின் சுட்டிகளுடன் இந்த இடுகையில் பார்ப்போம்.
மேலும் வாசிக்க!

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண

கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன. தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.

இது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை.
மேலும் வாசிக்க!

நல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி

நீங்கள் கேமரா அல்லது கேமரா வசதி உள்ள மொபைல் வாங்கப்போவதாக வைத்துக் கொள்ளுவோம். அந்த கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்.

உங்கள் நண்பர்கள் அந்த கேமரா வைத்து இருந்தால் நீங்க அவற்றை உபயோகித்து பார்த்து அவற்றின் புகைப்படங்களின் துல்லியத்தை அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்தில் பல்வேறு கேமராக்களில் எடுத்த புகைப்படங்களின் மாதிரிகளை சிலர் தரவேற்றி இருப்பர். அவையும் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன.
மேலும் வாசிக்க!

கூகிள் தேடல் முடிவுகளை ஜிமெயிலில் இணைக்க

இந்த இடுகை ஜிமெயிலில் உள்ள ஒரு கூடுதல் வசதி பற்றியது. நீங்கள் மின்னஞ்சல் உபயோகிக்கும் போது ஏதாவது தகவலை தேட வேண்டும் என்றால் தனி பக்கத்தில் கூகுளை திறந்து தேவையானவற்றை தேடி கொண்டிருந்திருப்பீர்கள்.

தேடலில் உள்ள குறிப்பிட்ட முடிவை மின்னஞ்சலில் இணைக்க காப்பி செய்து மின்னஞ்சல் உள்ளே பேஸ்ட் செய்ய வேண்டி இருக்க வேண்டும். ஜிமெயிலில் ஒரு வசதி இந்த வேலையை மிகவும் எளிதாக்குகிறது. இந்த வசதியை உயிர்ப்பித்துக் கொள்ள உங்கள் ஜிமெயிலில் வலது மூலையில் உள்ள 'Settings' லிங்கை கிளிக் செய்து 'Labs' பகுதிக்கு சென்று கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க!