மைக்ரோசாப்ட்டின் இணைய & டெஸ்க்டாப் தமிழ் எழுதி

சில வருடங்களுக்கு முன்பு கணினியில் தமிழை தட்டச்சுவது என்பது சற்றே கடினமான வேலையாகத்தான் இருந்தது. அழகி, ஈகலப்பை, என்எச்எம் என்று தன்னார்வத்தில் பலர் தமிழ் எழுதிகளை அறிமுகப்படுத்தினர். தற்போது பெரிய மென்பொருள் நிறுவனங்களும் இந்திய மொழிகளில் கணினியில் தட்டச்சுவதற்கு மென்பொருள்களை அறிமுகப்படுத்த துவங்கி விட்டனர்.

இன்று காலை கூகிளின் தமிழ் எழுதி குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தேன். இணையத்தில் உலவிய போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதற்காக ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளதை அறிய முடிந்தது.
மேலும் வாசிக்க!

அதிரடியாக கணினிக்கான கூகுளின் தமிழ் எழுதி

கணினியில் தமிழில் எழுத்து பல்வேறு தமிழ் எழுதிகள் இருந்தாலும் கூகுளின் தமிழ் எழுதி வரவேற்பை பெற்றுள்ளது. கூகிள் தமிழ் எழுதி குறித்து ஏற்கனவே பல இடுகைகள் எழுதி உள்ளேன். கூகிள் தமிழ் எழுதியின் பெரிய பின்னடைவு இணைய தொடர் இணைப்பின்றி அதனை உபயோகிக்க இயலாது. Notepad, Word போன்றவற்றில் கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இயலாது.

இப்போது இந்த பின்னடைவும் நீக்கப்பட்டு உள்ளது. இனி கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. உங்கள் கணினியில் வேண்டுமென்ற இடத்தில் கூகிள் தமிழ் எழுதி மூலம் தமிழில் தட்டச்சலாம்.
மேலும் வாசிக்க!

லினக்ஸ் மின்ட் - சிறந்த லினக்ஸ் இயங்குதள வடிவம்

கணினி இயங்குதள உலகில் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஜாம்பாவனாக இருந்து வருகிறது. லினக்ஸ் பதிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டாலும் அவற்றை உபயோகிப்பதில் தயக்கம் நிலவுகிறது.

நானும் உபுண்டு, பெடோரா, பப்பி லினக்ஸ் என்று பெரும்பாலான லினக்ஸ் இயங்குதளங்களை முயற்சித்து பார்த்து இருக்கிறேன். இருந்தாலும் லினக்ஸ்க்கு முழுமையாக மாற முடியவில்லை. காரணமாக நான் கருதுவது இன்னும் லினக்ஸ் விண்டோஸ் அளவுக்கு எளிமையாக இல்லை. லினக்ஸ்சை ஒப்பிடுகையில் விண்டோஸ் பல விதங்களில் எளிமையான அனுபவத்தை தருகிறது.
மேலும் வாசிக்க!

லினக்ஸ் பதிப்புகளை USB மூலம் சோதிக்க/நிறுவ

லினக்ஸ் திறந்த மூல இயங்குதள மென்பொருள் என்பதால் பல வடிவங்களில் இணையத்தில் தரவிறக்க கிடைக்கின்றன. அவற்றில் Ubuntu, Suse, Debian, Slackware, Fedora, Mandriva, Knoppix, Gentoo, Mepis, Xandros, Linux Mint உள்ளிட்டவை பிரபலமாக இருக்கின்றன.

இவை பெரும்பாலும் இணையத்தில் ISO கோப்புகளாக தரவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. இவற்றை நீங்கள் தரவிறக்கி CD அல்லது DVD யில் எழுதி கணினியில் நிறுவுவதற்கோ , சோதித்து பார்ப்பதற்கோ உபயோகப்படுத்த வேண்டி இருக்கும். இதனால் பல CD/DVD கள் வீணாவது தவிர்க்க இயலாதது. இவ்வாறு அல்லாமல் எப்படி USB யில் லினக்ஸ் பதிப்புகளை நிறுவி Live USB யாக பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
மேலும் வாசிக்க!

என்டிடிவி ஹிண்டுவில் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள்

முன்பெல்லாம் தமிழில் கணினி தொழில் நுட்பம் தொடர்பாக பிகேபி, தமிழ்நெஞ்சம் உள்ளிட்ட  ஓரிரு வலைப்பூக்களே இருந்தன. ஆனால் கால மற்றம், தமிழ் பதிவுலக வளர்ச்சி தமிழில் பல வலைப்பூக்கள் கணினி தொழில் நுட்பம் பற்றி எழுதப்படுகின்றன.

இதனை மேன்மேலும் வளர்க்க பின்புலத்தில் சத்தமின்றி பலர் உழைத்து வருகிறார்கள். இதில் தொடர்ந்து தொழிநுட்பம் பற்றி எழுதி வரும் பதிவர்களுக்கு முக்கிய பங்குண்டு. ஆர்வத்தினால் எழுதும் போது சில நேரம் சோர்ந்து போவதுண்டு. அந்நேரங்களில் சிலரின் ஊக்குவிப்பு தொடர்ந்து இயங்க வைக்கும்.
மேலும் வாசிக்க!

டிவைஸ் டிரைவர்களை புதுப்பிக்க டிவைஸ் டாக்டர்

கணினியில் உள்ள வன்பொருட்கள் (Hardware) செம்மையாக வேலை செய்ய சரியான டிவைஸ் டிரைவர்கள் தேவை. டிவைஸ் டிரைவர்கள் பரியும் அவற்றை பேக்கப் எடுத்து வைத்து கொள்வது பற்றியும் ஏற்கனவே  Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன்.

கணினி இயங்குதளங்கள் புதிதாக வர வர வன்பொருள் நிறுவனங்கள் அதற்கான டேவிஸ் டிரைவர்களை மேம்படுத்தி புதிதாக வெளியிட்டு கொண்டு இருக்கும். அவற்றை அடிக்கடி சோதித்து நமது கணினியில் நிறுவி கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது கணினி சிக்கலின்றி வேலை செய்யும்.
மேலும் வாசிக்க!

அர்மோர் ப்ரீமியம் பயர்வால் ஓராண்டுக்கு இலவசமாக

பெரும்பாலானோர் AVG, Avira, Avast இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்களையே உபயோகித்து வருவீர்கள். நன்றாக இயங்கினாலும் அவை இணையத்தில் உபயோகிக்கும் கணினிக்கு தேவையான பயர்வாலுடன் வருவதில்லை.

எனவே பெரும்பாலும் விண்டோஸ்சின் பயர்வாலைத்தான் உபயோகித்து வருவோம். இதன் மூலம் பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்விக்குறிதான்.  ஹேக்கர்கள் மற்றும் இணைய திருடர்களிடம் இருந்து நம் கணினியை பாதுகாத்து கொள்ள நல்ல பயர்வாலின் தேவை அதிகமாகிறது. Matousec Proactive Security Challenge ஜில் நம்பர் ஒன் பயர்வாலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்லைன் அர்மோர் ப்ரீமியம் பயர்வால் ஓராண்டுக்கு இலவசமாக கிடைக்கிறது.
மேலும் வாசிக்க!