Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Device Drivers, கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு ஹார்டுவேருக்கும் இது போன்று தனித்தனி CD என்று பெருகி விடும். அந்த Device Driver CD க்களை பாதுகாத்து வைத்து கொள்ளுதல் அவசியம்.

நமது கணினியில் இயங்குதளத்தை Reinstall செய்யும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைத்து இருப்போம். CD க்கள் பழுதாகி வேலை செய்யாமல் தொந்தரவு கொடுக்கும். இணையத்தில் சரியான Device Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. நமது ஹார்டுவேர் நிரந்தரமாக வேலை செய்யாமல் போகலாம்.

இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஹார்டுவேர் பொருட்களின் Device Driver களையும் நீங்கள் Backup எடுத்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை இயங்குதளத்தை Reinstall செய்யும் போது அந்த Backup ல் உள்ள அனைத்து Device Driver களையும் எளிதான முறையில் உபயோகித்து கொள்ள முடியும். Device Driver ருக்காக ஒவ்வொரு CD யாக தேடி அலைய வேண்டியதில்லை.

அந்த மென்பொருளின் பெயர் Double Driver . இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.

அதில் "Scan" பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியில் உள்ள ஹர்டுவேர்களுக்கான அனைத்து Device Driver களும் தோன்றும்.


Backup கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமித்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைத்துள்ளவற்றை தேவைப்படும் போது Restore செய்ய விரும்பினால் Backup ல் dd.exe என்ற ஃபைல் இருக்கும்.


அதனை ஓபன் செய்து Restore அழுத்தவும். அதில் தோன்றும் Device Driver களில் தேவையானவற்றை நிறுவி கொள்ளவும்

இந்த மென்பொருள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். சந்தேகங்கள் ஏதும் இருந்தால் தயங்காமல் கேட்கவும். வேறேதும் மென்பொருள், கணினி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்றாலும் பின்னூட்டத்தில் கேட்கவும். உதவ முயல்கிறேன். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

10 comments:

Anonymous said...

tanq

Anonymous said...

really very useful link...keep on dng...

na.jothi said...

பயன்படும் பதிவு

PVS said...

really..very very useful..
i have a query..in my hp pavilion laptop, (vista-home edition),ie8 is not working..twice i downloaded and installed and removed..

டிவிஎஸ்50 said...

என் நண்பர் ஒருவருக்கு IE8 நிறுவி கொடுத்தேன். எந்த பிரச்சினையும் இன்றி வேலை செய்கிறது. அவரும் விஸ்டா ஹோம் வைத்துள்ளார். மைக்ரோசாப்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் http://www.microsoft.com/windows/Internet-explorer/default.aspxஇருந்து தரவிறக்கி நிறுவி பார்க்கவும். ஏதேனும் பிழை செய்தி வந்தால் அதனை இங்கு தரவும் பிரச்சினையை தீர்க்க முயல்கிறேன்.

Arivazhagan said...

Thanks for the useful information. I hope this software is safe to use.
I need help in solving the following: I am using a HP C4483 printer. But after installing the software, i am getting a error msg every time I switch the printer on-- "Exception processing message C0000013 parameters 75bbbf7c 75bbbf7c".
I have tried reinstalling the printer, it didn't help. Can you help me pl.

டிவிஎஸ்50 said...

@Arivazhagan

இந்த மென்பொருள் பாதுகாப்பானதுதான். நான் உபயோகித்து வருகிறேன். எந்த பிரச்சினையும் தரவில்லை.

உங்களுடைய Operating System என்ன? இந்த Double Driver மென்பொருளை நீக்கினால் உங்கள் பிரிண்டர் சரியாக வேலை செய்கிறதா?

இந்த இணைய பக்கத்தில் உள்ள தீர்வுகளை முயன்று பார்க்கவும்.

http://forums.techguy.org/business-applications/561879-windows-no-disk-exception-processing.htmlசரியாகவில்லை என்றால் பதிலளிக்கவும். வேறு வழிமுறைகளை தேடி தருகிறேன்.

Arivazhagan said...

Thank you. Im using XP.SP3. Let me try the link you have suggested. I shall let you know. Thank you once again.

Anonymous said...

This software will definitely be very useful.
Thanks for the wonderful post.

G.R said...

அருமையான தகவல்... மிக்க நன்றி..