அதிரடியாக கணினிக்கான கூகுளின் தமிழ் எழுதி

கணினியில் தமிழில் எழுத்து பல்வேறு தமிழ் எழுதிகள் இருந்தாலும் கூகுளின் தமிழ் எழுதி வரவேற்பை பெற்றுள்ளது. கூகிள் தமிழ் எழுதி குறித்து ஏற்கனவே பல இடுகைகள் எழுதி உள்ளேன். கூகிள் தமிழ் எழுதியின் பெரிய பின்னடைவு இணைய தொடர் இணைப்பின்றி அதனை உபயோகிக்க இயலாது. Notepad, Word போன்றவற்றில் கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இயலாது.

இப்போது இந்த பின்னடைவும் நீக்கப்பட்டு உள்ளது. இனி கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. உங்கள் கணினியில் வேண்டுமென்ற இடத்தில் கூகிள் தமிழ் எழுதி மூலம் தமிழில் தட்டச்சலாம்.

இதற்கு கூகுளின் ஐஎம்ஈ(IME) எனும் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டால் போதுமானது. இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7   இயங்குதளங்களில் வேலை செய்யும். 

இதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். 'Choose your IME Language' என்பதில் தமிழ் என்பதனை தேர்வு செய்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
அடுத்து உங்கள் கணினியில் 'Start' மெனுவை கிளிக் செய்து Control Panel சென்று கொள்ளுங்கள். அங்கு Region and Language என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

தோன்றும் விண்டோவில் Keyboards and Languages என்பதில் Change Keyboards என்பதை கிளிக் செய்து கொண்டு Google Tamil Input என்பதனை தேர்வு செய்து கொள்ளவும். விளக்கத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


அவ்வளவுதான் இனி நீங்கள் கணினியில் இனி எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ளலாம். ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ள F12 விசையை (F12 Key) அழுத்தி கொள்ளவும்.

இனி நீங்கள் தமிழில் தட்டச்சும் போது எல்லாம் தொடர்ந்து இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கூகுளுக்கு நன்றி.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

14 comments:

கிருஷ்ணா (Krishna) said...

நல்ல செய்தி.

மிக்க்க நன்றி.

வெற்றி said...

நன்றி...பயனுள்ள பதிவு......

வெற்றி said...

//இதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். 'Choose your IME Language' என்பதில் தமிழ் என்பதனை தேர்வு செய்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.//

u didnt give any link...

sarathy said...

சுட்டியை காணவில்லை...

டிவிஎஸ்50 said...

மன்னிக்கவும் நண்பர்களே. அவசரத்தில் சுட்டியை கவனிக்க மறந்து விட்டேன். இப்போது சரி செய்யப்பட்டு விட்டது.

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

I tried to submit this post in Tamilish. But it has gone to Discarded section. I dont know what happened?

There may be some filter mechanism in their application.

கிரி said...

தகவலுக்கு நன்றி TVS50. முயற்சித்து பார்க்கிறேன்

DR said...

மிக்க நன்றி தங்களுக்கு... இந்த பின்னூட்டதை நீங்கள் சொன்ன கூகிள் தமிழ் உபயோகித்து தான் அடிக்கிறேன்
இதை என்னால கூகிள் சாட் இல் கூல்டா உபயோகிக்க முடிகிறது என்பது தான் மிக மிக மகிழ்ச்சி.

கோடான கோடி நன்றிகள்...
தினேஷ் பாபு

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கைத்தொலைபேசிகளில் தமிழ் உள்ளிட முடியுமா?
ஏதாவது மென்பொருள் இருக்கிறதா?

கண்மணி/kanmani said...

நல்ல மிகப் பயனுள்ள தகவல்.பின்னூட்டம் போடாத ரெகுலர் வாசகி நான்.

யூர்கன் க்ருகியர் said...

//இதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். 'Choose your IME Language' என்பதில் தமிழ் என்பதனை தேர்வு செய்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.//


நண்பரே,, இந்த சுட்டியின் மூலம் பதிவிறக்கப்பட்ட கோப்பின் அளவு 550KB.
இந்த கோப்பின் மூலம் இணைய இணைப்பு அற்ற கணினியில் நிறுவ முடியவில்லை.
ஆக..இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இதை நிறுவ முடியும் என தோன்றுகிறது மேலும் User Login இல் நிறுவ இயலாது Administrator Log in இல் மட்டுமே முடிகிறது.


இணைய இணைப்பு இல்லாத கணினியில் " Google Transliteration IME " நிறுவ இயலவில்லை என்பதே எனக்குண்டான அனுபவம்... இதைப்பற்றிய தகவல்கள் இருப்பின் எனக்கு உதவியாய் இருக்கும்
நன்றி

Prathap Kumar S. said...

சூப்பர் மேட்டர் தலைவா...

Unknown said...

hai i have dell inspiron 1545 விண்டோஸ் 7 but its not working in my computor what i do please give me amy other iedia i downlode properly even desent work thanks

Unknown said...

என் கணினில் சரியான முறையில் தரவிறக்கம் செய்துவிட்டேன் ஆனாள் வேலை செய்யவில்லை எனிடம் dell inspiron 1545 windos 7 உள்ளது வளி சொல்லுங்களேன் நன்றி