லினக்ஸ் மின்ட் - சிறந்த லினக்ஸ் இயங்குதள வடிவம்

கணினி இயங்குதள உலகில் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஜாம்பாவனாக இருந்து வருகிறது. லினக்ஸ் பதிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டாலும் அவற்றை உபயோகிப்பதில் தயக்கம் நிலவுகிறது.

நானும் உபுண்டு, பெடோரா, பப்பி லினக்ஸ் என்று பெரும்பாலான லினக்ஸ் இயங்குதளங்களை முயற்சித்து பார்த்து இருக்கிறேன். இருந்தாலும் லினக்ஸ்க்கு முழுமையாக மாற முடியவில்லை. காரணமாக நான் கருதுவது இன்னும் லினக்ஸ் விண்டோஸ் அளவுக்கு எளிமையாக இல்லை. லினக்ஸ்சை ஒப்பிடுகையில் விண்டோஸ் பல விதங்களில் எளிமையான அனுபவத்தை தருகிறது.

விண்டோஸ் ஸையே பயன்படுத்தி பழக்கப்பட்ட நாம் லினக்ஸ் என்ற புதிய விஷயத்தை கற்றுக்கொள்ளுவது சில காலம் பிடிக்கும். ஆனால் முன்பை விட லினக்ஸ் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வருகிறது. விண்டோஸ் , லினக்ஸ் என்று Dual Boot மூலம் இரண்டு இயங்குதளங்களையும் பயன்படுத்திவரும் பலரை தற்போது காண முடிகிறது. இணையத்தின் வளர்ச்சியால் லினக்ஸ் இயங்குதளம் மக்களை எளிதில் சென்றடைய முடிந்திருக்கிறது. லினக்ஸ் தொடர்பான உதவி பக்கங்கள் இணையத்தில் பெருகி கிடக்கின்றன.

ஏன் தமிழில் கூட பல நண்பர்கள் லினக்ஸ் பற்றி பதிந்து வருகிறார்கள். விரைவில் வெளிவர போகும் கூகிள் குரோம் ஓஎஸ் கூட லினக்ஸ் அடிப்படையில் தான் உருவாக்க படுகிறது. விரைவில் லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளங்கள் அதிக அளவில் பயன்படுத்த படலாம்.

சராசரி கணினி உபயோகிப்பாளருக்கு லினக்ஸ் என்றால் உபுண்டு என்ற பெயர்தான் நியாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு உபுண்டு என்ற பெயரை மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளனர். நானும் உபுண்டு உபயோகப்படுத்தி பார்த்து உள்ளேன். ஏனோ தெரியவில்லை உபுண்டு என் மனதை கவரவில்லை. நானே என்னை வலுகட்டாயமாக உபுண்டு பயன்படுத்த நிர்பந்த படுத்தி கொண்டாலும் அது ஒரு வித சலிப்பை தந்தது. ஒவ்வொரு புதிய பதிப்பு வரும் போதும் சில நாட்கள் உபயோகிப்பதோடு சரி. பிறகு மீண்டும் விண்டோஸ்க்கு மாறி விடுவேன். ஆனால் உபுண்டு கவர்ந்த இயங்குதளமாக பலரால் உபயோகப்படுத்த பட்டு வருகிறது.

ஏதச்சையாக லினக்ஸ் மின்ட் (Linux Mint) என்ற இயங்குதளத்தை இணையத்தில் காண நேரிட்டது. தரவிறக்கி உபயோகப்படுத்தி பார்த்தேன். இது உபுண்டுவை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இயங்குதளம். உபுண்டுவை விட உபயோகிக்க எளிமையாக உள்ளது. முதல் பயன்பாட்டிலேயே கவர்ந்து விட்டது உண்மை.  இது பற்றி மேலும் அறிய மற்றும் ஸ்க்ரீன் ஷாட்கள் பார்க்க லினக்ஸ் மின்ட் இணையதளத்திற்கு செல்லவும்.


விண்டோஸ் உபயோகிப்பது உங்களுக்கு போரடிக்கிறதா? நீங்கள் லினக்ஸ் உபயோகிப்பதில் ஆர்வம் உள்ளவரா? உபுண்டு உபயோகிப்பாளரா? நன்கு வடிவமைக்க பட லினக்ஸ் பதிப்பு தேடுகிறீர்களா? கண்டிப்பாக நீங்கள் லினக்ஸ் மின்ட் உபயோகித்து பார்க்கலாம். இது உங்களை கண்டிப்பாக கவரும் என்று நம்புகிறேன்.

லினக்ஸ் மின்ட் ஹெலேனா (Linux Mint 8 Helena ) எனும் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. இதனை தரவிறக்க இந்த சுட்டியை கிளிக் செய்யுங்கள். ISO கோப்பாக தரவிறக்கத்திற்கு கிடைக்கும். தரவிறக்கி CD யில் எழுதி கொண்டு நிறுவி கொள்ளுங்கள்.

CD/DVD யை நீங்கள் வீணாக்க வேண்டாம் என்று நினைத்தால் USB மூலம் லினக்ஸ் பதிப்புகளை சோதிப்பது எப்படி? என்ற இடுகை ஏற்கனவே எழுதி உள்ளேன். அதன் மூலம் நீங்கள் தரவிறக்கிய ISO கோப்பை USB யில் எழுதி கொண்டு சோதித்து பாருங்கள்.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

6 comments:

கிருஷ்ணா (Krishna) said...

ஆமாம், நானும் பல லினக்ஸ் ஐ சோதித்த பின்னர் லினக்ஸ் மின்ட் எளிதாகவும், எல்லாருக்கும் ஏற்றதாகவும் இருந்தது.

லினக்ஸ் மின்ட் மற்றும் லினக்ஸ் சம்மந்தப்பட்ட எனது பதிவுகளையும் பார்க்கவும்.

நன்றி.

அன்புடன்

கிருஷ்ணா

http://rvkrishnakumar.blogspot.com/

Vinoth said...

Yes... so far Linux mint is the best linux distro. very user friendly and professional.

Thanks for your posts in tamil.

arulmozhi r said...

லின்க்ஸ் பர்றி எழுதியிருப்பதற்க்கு நன்றி. ஆனாலும் விண்டோஸ் எளிமையானது என்பத ஏற்க இயலாது. சின்ன சின்ன மாற்ரங்களை தவிர லினக்ஸ் எளிமையானதுதான். உதாரனமாக விண்டோச் எக்ஸல் எடுத்துகோள்வோம்.அதில் =sumல் range குறிப்பிட '.' பயன்படுத்துவோம். ஆனால் openofficeல் அதே range ஐ குறிப்பிட ':'ஐ பயன்படுத்தவேண்டும். எனவே லினக்ஸ் பயன்படுத்த தயக்கம் தேவையில்லை.லினக்ஸ் எளிமையானது மற்றும் வலிமையானது ஆகும்.ஆரம்பத்தில் கடினமாக தோன்றினாலும் பயன்படுத்த பார்க்கையில் எளிமையானதுதான்.

Unknown said...

How to i type tamil font il linux mint 8 please send solution to my email id : nijambarakath@yahoo.com

Nijam said...

how can i type tamil font in linux mint 8 ?.........
please send the solution to my email id : nijambarakath@yahoo.com

இவன் said...

நான் Ubuntu 9.10, Windows Vista & Mac OS X 10.6.2 ஆகிய இயங்குதளங்களை பயன்படுத்தி வருகின்றேன். இவற்றில் Ubuntu 9.10 வே மிகவும் எளியதாகவும், வேகமான செயல்படும் தன்மை உடையதாகவும் உணர்கின்றேன்.