மைக்ரோசாப்ட்டின் இணைய & டெஸ்க்டாப் தமிழ் எழுதி

சில வருடங்களுக்கு முன்பு கணினியில் தமிழை தட்டச்சுவது என்பது சற்றே கடினமான வேலையாகத்தான் இருந்தது. அழகி, ஈகலப்பை, என்எச்எம் என்று தன்னார்வத்தில் பலர் தமிழ் எழுதிகளை அறிமுகப்படுத்தினர். தற்போது பெரிய மென்பொருள் நிறுவனங்களும் இந்திய மொழிகளில் கணினியில் தட்டச்சுவதற்கு மென்பொருள்களை அறிமுகப்படுத்த துவங்கி விட்டனர்.

இன்று காலை கூகிளின் தமிழ் எழுதி குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தேன். இணையத்தில் உலவிய போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதற்காக ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளதை அறிய முடிந்தது.

இந்த வசதியை மைக்ரோசாப்ட் இணைய பதிப்பு, டெஸ்க்டாப் பதிப்பு என்று இரண்டு வடிவங்களில் வெளியீட்டு உள்ளது. இதன் மூலம் நீங்கள் கணினி, இணையம் என்று எல்லா இடங்களிலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ள முடியும். தமிழ் எழுதியை போன்றே நீங்கள் தட்டச்சு செய்யும் வார்த்தைகளை தானாக நிறைவு செய்யும் வசதியுடன் வருகிறது. இதனால் தமிழில் நாம் தட்டச்சு செய்யும் போது வரும் பிழைகளை தவிர்க்க இயலும்.கூகிள் தமிழ் எழுதியை நிறுவியதை போன்றே இதனை நீங்கள் நிறுவ வேண்டும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய, புக்மார்க்லெட்டாக நிறுவி கொள்ள இங்கே சென்று வழிமுறைகளை பார்க்கவும். புக்மார்க்லெட்டாக இணைய உலாவிகளில் நிறுவி கொண்டால் இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சலாம். இதற்கு இணைய இணைப்பு தொடர்ச்சியாக அவசியம்.


இணைய இணைப்பு இன்றி கணினியில் எங்கு வேண்டுமானாலும் தட்டச்சு செய்து கொள்ள இதன் டெஸ்க்டாப் பதிப்பை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இதனை தரவிறக்க இங்கே செல்லுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7லில் எப்படி நிறுவுவது என்பதனை விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். படங்களுடன் புரியும்படி விளக்கி உள்ளனர்.


கூகிள் தமிழ் எழுதியா? மைக்ரோசாப்ட் தமிழ் எழுதியா? என்று கேட்டால் சட்டென்று சொல்ல இயலவில்லை. இரண்டுமே எளிதாகத்தான் உள்ளது. சில நாட்கள் உபயோகப்படுத்தி பார்த்து விட்டு முடிவு செய்யலாம்.

நன்றி : டெக்சங்கர்

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

6 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

தகவலைத் தமிழில் தந்ததற்கு நன்றி தலைவா.

Marippan said...

Buggy!

I could not type properly in excel.
The earlier version they had through bhasha india also had same problem.

The only new feature i see is autocomplete as in Google Indic Transliteration.But for a long usage, one cannot use a tool which has some other methodology than key-character mapping.

Way to go for Microsoft and Google in understanding and kepping in phase with regional language users.

I am very much comfortable with NHM Writer as for now.

Also, the phonetic keyboard is unique and not following the standards set by NHM Writer, ekalappai or murasu anjal

அபுல் பசர் said...

மைக்ரோ சாஃப்டின் இணைய எழுதி பற்றி தெளிவாக இடுகை எழுதி உள்ளீர்கள்.
பயனுள்ள தகவல்.
நன்றி:
அபுல் பசார்.

அன்புடன் அருணா said...

அட!

vellinila said...

dear friend, i would like to talk with you, can you send your mobile number to vellinila@gmail.com?

PRAKASH said...

கூகிள் தமிழ் எழுதியையும், மைக்ரோசொப்ட் தமிழ் எழுதியையும் எனது கணனியில் மாற்றி மாற்றி பயன்படுத்தி பார்த்ததில் கூகிள் தமிழ் எழுதி சிறப்பாக செயல்படுகின்றது. மைக்ரோசொப்ட் இன்னும் மேம்படுத்தப்படவேண்டியுள்ளது. மைக்ரோசொப்ட் தமிழ் எழுதியில் எழுதும் போது லகர ளகர ழகர எழுத்துக்களில் சிறு குழப்பம் உண்டாகின்றது. மேற்குறிப்பிட்ட எழுத்துக்களில் மூன்றாவது எழுத்து கிடைக்கவில்லை.