என்டிடிவி ஹிண்டுவில் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள்

முன்பெல்லாம் தமிழில் கணினி தொழில் நுட்பம் தொடர்பாக பிகேபி, தமிழ்நெஞ்சம் உள்ளிட்ட  ஓரிரு வலைப்பூக்களே இருந்தன. ஆனால் கால மற்றம், தமிழ் பதிவுலக வளர்ச்சி தமிழில் பல வலைப்பூக்கள் கணினி தொழில் நுட்பம் பற்றி எழுதப்படுகின்றன.

இதனை மேன்மேலும் வளர்க்க பின்புலத்தில் சத்தமின்றி பலர் உழைத்து வருகிறார்கள். இதில் தொடர்ந்து தொழிநுட்பம் பற்றி எழுதி வரும் பதிவர்களுக்கு முக்கிய பங்குண்டு. ஆர்வத்தினால் எழுதும் போது சில நேரம் சோர்ந்து போவதுண்டு. அந்நேரங்களில் சிலரின் ஊக்குவிப்பு தொடர்ந்து இயங்க வைக்கும்.

இது போன்ற ஊக்குவிப்புகளை வழங்குவதில் பதிவர் ஷிரிடி சாய்தாசனும் ஒருவர். என் பதிவுகளுக்கு அதிக பின்னூடங்கள் இடாவிட்டாலும் அடிக்கடி மின்மடல் மூலம் ஊக்குவித்து உசுப்பேத்தி கொண்டு இருப்பார். மாதம் தோறும் அலெக்சா மதிப்பு அடிப்படையில் வலைப்பூகளை வரிசைப்படுத்தி தொழில்நுட்ப பதிவர்களை ஊக்குவித்து வருகிறார். தமிழில் தொழில் நுட்ப வலைப்பூக்களை வளர்ப்பது எப்படி? என்ற சிந்தனை எப்போதும் உள்ளவர். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டும் வருகிறார்.

தமிழ் தொழில்நுட்ப தளங்களின் வளர்ச்சி தொலைகாட்சி ஊடகங்கள் பார்வையில் பட்டிருப்பது மகிழ்ச்சியான விசயமாக உள்ளது. என்டிடிவி ஹிந்து தொலைக்காட்சி தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் பற்றி Byte It என்ற நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பு வருவதாக ஷிரிடி சாய்தாசன் தனது
வலைப்பூவில் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

இண்டர்நெட்டே வேதம் என்று முழங்கி தினம் தொழில்நுட்ப செய்திகளை சுவாரசியமாக தருவதில் கை தேர்ந்தவர் பதிவர் சைபர் சிம்மன். சளைக்காமல் தினமும் தொழில் நுட்ப செய்திகளை அடுக்கி ஆச்சரிய பட வைக்கிறார். தமிழ் தொழில்நுட்ப பதிவர்களில் இவரும் முக்கியமானவர். என்டிடிவி ஹிண்டு தொலைகாட்சி நிகழ்ச்சியில் இவரது பேட்டியும் இடம் பெறுகிறது.

நான் பதிவெழுத ஆரம்பித்த நேரத்தில் ஆர். வடிவேலன் என்ற நண்பர் அடிக்கடி பின்னூட்டங்கள் இட்டு தட்டி கொடுப்பார். பதிவெழுத வருவதற்கு முன்பே கவுதம்இன்போடெக் என்ற வலைப்பதிவை படிப்பதுண்டு. ஆனால் நீண்ட நாட்கள் கழித்துதான் ஆர். வடிவேலன்தான் அதை எழுதி வருகிறார் என்பது தெரிய வந்தது. முன்பிருந்ததை விட தற்சமயம் அசுர வேகத்தில் எழுதி வருகிறார். ஒரே இடுகையில் பல அருமையான மென்பொருள்களுக்கு அறிமுகம் கொடுப்பதில்
இவர் கில்லாடி. தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்களில் இவரும் முக்கிய பங்களிப்பாளர். இவர் இந்த தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கெடுப்பது மகிழ்ச்சி அளிக்கும் விசயமாகும்.

நானும் பார்க்க ஆவலாக உள்ளேன். இந்த நிகழ்ச்சி இன்று (04-12-2009) வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு என்டிடிவி ஹிண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அனைவரும் கண்டிப்பாக பாருங்கள். தமிழ் தொழில்நுட்ப பதிவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து நிகழ்ச்சியை தரும் என்டிடிவிக்கு மிக்க நன்றி.

இது குறித்து

பதிவர் ஷிரிடி சாய்தாசனின் அறிவிப்பு 
பதிவர் சைபர் சிம்மனின் அறிவிப்பு 
பதிவர் ஆர்.வடிவேலனின் அறிவிப்பு
பதிவர் வால்பையனின் அறிவிப்பு Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

11 comments:

Anonymous said...

உங்கள் பதிவுக்கு நன்றி. இதன் மூலமாக இந்த செய்தி மேலும் பலரை சரியான நேரத்தில் சென்று அடையும். ”நான்தான் அதில் இல்லையே. மற்றவர்கள்தானே வருகிறார்கள்” என்று ஒரு குறுகிய சிந்தனை ஓட்டத்தில் சிக்காமல், மக்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த பதிவை போட்டு இருக்கிறீர்கள். உங்கள் உயர்வான எண்ணத்திற்கு ஆயிரம் நன்றிகள்.

JKR said...

இவ்வளவு இன்றியமையாத கணிணித் தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி paandiyuraanjeya.blogspot.com

வடிவேலன் ஆர். said...

உங்கள் பதிவுக்கு நன்றி தலைவரே நானும் சிறு தொண்டு செய்து வருகிறேன் என்னுடைய வலைப்பூ http://gouthaminfotech.blogspot.com அத்துடன் இந்நிகழ்ச்சியில் என்னுடைய சிறு பங்களிப்பும் உள்ளது.

டிவிஎஸ்50 said...

@shirdi.saidasan
நண்பரே... இதில் நன்றி கூற ஒன்றும் இல்லை. தமிழ் தொழில் நுட்ப வலைப்பூக்களுக்கு அங்கீகாரம் க்டியித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதை மேலும் சிலரிடம் கொண்டு சேர்ப்பது கடமை.

@வடிவேலன். ஆர்.
மன்னிக்கவும் நண்பரே. நீங்கள் பங்கெடுப்பது எனக்கு தெரியாது. அதனால் தான் உங்கள் பெயர் விடுபட்டு விட்டடது. இப்போது சேர்த்து விட்டேன்.

@JKR
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

வால்பையன் said...

என் அறிவிப்பையும் சேர்த்துகோங்க!

TechShankar said...

பங்குகொண்ட தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.

டிவிஎஸ்50 said...

@வால்பையன்
நன்றி .. சேர்த்தாச்சு

@techshankar

மிக்க நன்றி.

கிரி said...

என்னங்க திடீர்னு ஏகப்பட்ட பதிவு போட்டு திணற (நிஜமாவே) வைக்கறீங்க..அப்புறம் காணாம போய்டறீங்க..

இடைவெளி விட்டு பதிவிட்டால் அனைத்தையும் படிக்கவும் முடியும் நீண்ட இடைவெளி வராமல் தவிர்க்க முடியும்..

niruban said...

how to download torrents file sir

டிவிஎஸ்50 said...

@கிரி

பணியிடத்தில் பல தளங்களை தடை செய்து விட்டனர். அதனால் தான் அதிக இடைவெளி விழுந்து விடுகிறது. கிடைக்கும் நேரங்களில் பதிவுகளை போட்டு தாக்கி விடுகிறேன்.

இனி பிளாக்கரில் உள்ள Schedule முறை மூலம் தினமும் ஒரு பதிவாக வரும்படி வைக்கிறேன்.

inarisjani said...

thanks frnd