டிவைஸ் டிரைவர்களை புதுப்பிக்க டிவைஸ் டாக்டர்

கணினியில் உள்ள வன்பொருட்கள் (Hardware) செம்மையாக வேலை செய்ய சரியான டிவைஸ் டிரைவர்கள் தேவை. டிவைஸ் டிரைவர்கள் பரியும் அவற்றை பேக்கப் எடுத்து வைத்து கொள்வது பற்றியும் ஏற்கனவே  Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன்.

கணினி இயங்குதளங்கள் புதிதாக வர வர வன்பொருள் நிறுவனங்கள் அதற்கான டேவிஸ் டிரைவர்களை மேம்படுத்தி புதிதாக வெளியிட்டு கொண்டு இருக்கும். அவற்றை அடிக்கடி சோதித்து நமது கணினியில் நிறுவி கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது கணினி சிக்கலின்றி வேலை செய்யும்.

உங்கள் கணினியில் பல நிறுவனங்களின் வன்பொருட்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றாக பார்த்து அவற்றின் இணைய தளங்களுக்கு சென்று டிவைஸ் டிரைவர்களை கண்டுபிடித்து அவற்றை கணினியில் நிறுவுவது அதிக வேலை பிடிக்கும். இந்த வேலையை எளிதாக்க ஒரு மென்பொருள் உள்ளது.

டிரைவர் டாக்டர் என்பதுதான் அந்த மென்பொருளின் பெயர். அதனை வைத்து உங்கள் கணினியை ஸ்கேன்(Scan) செய்து கொண்டால், உங்கள் கணினியில் அப்டேட் செய்ய வேண்டிய டிவைஸ் டிரைவர்கள் பட்டியலை தரும். அதை தரவிறக்க தேவையான சுட்டிகளையும் தரும். அதன் மூலம் புதிய டிவைஸ் டிரைவர்களை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளாம்.இந்த இலவச மென்பொருளை இந்த சுட்டியை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 போன்றவற்றில் நன்றாக வேலை செய்கிறது. இந்த மென்பொருளின் போர்டபிள் வடிவத்தை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளலாம்.

தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

6 comments:

கடைக்குட்டி said...

உங்கள் இடுகைகள் மெயிலில் தினமும் படித்து விடுகிறேன்..

கூகிள் பத்தியெல்லாம் பின்றீங்க..

இன்னும் நெறயா எழுதுங்க.. LAMP server ல ஒர்க் பண்ணனும்ங்க.. அத பத்தியும் முடிஞ்சா எழுதுங்க..

சேவை தொடர வாழ்த்துக்கள் :-)

apr said...

சேவை தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

Hello Friend..!
I am reading your all posts Regularly.
Actually, I forgot MY PC's Administrator Password. So, I can't install any software. Can you tell How Can i Got that..? Please.

RAJESH said...

நண்பரே எனது வலைபூவில்
முதல் பக்கத்தி பதிவுகள் அனைத்தும் முழுதக காண்பிக்கின்றது புதிய பதிவை மட்டும் காண்பிப்பது எவ்வாறு என்று கூறவும் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அறுமை நன்றி

மோகனன் said...

அன்புத் தோழரே...

இணையத்தில் கிடைக்கும் சில MP3 பாடல்களை தரவிறக்கம் செய்ய முடிவதில்லை... அவர்கள் அதற்கு பணம் கேட்கிறார்கள்...

பணமில்லாமல் அவர்களிடமிருந்து அப்பாடலைப் பெறுவது எப்படி... விபரங்களை விவரமாக ஒரு பதிவினை இடவும்...

கடைக்குட்டி said...

i cannot access my blog.. it s showing that malware detected....

i dn knw y... pl help or mail asap..

alwaysarafath@gmail.com

i ve deleted al external party codes.. thn also it s lik tht..
pls suggest