யூடியுப் வீடியோவிலிருந்து ஒலியை MP3 ஆக சேமிக்க

யூடியுப் புகழ் பெற்ற வீடியோ தளமாகும். அதில் உள்ள வீடியோக்களை தரவிறக்குவதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம்.

சில சமயங்களில் யூடியுப் வீடியோவில் உள்ள ஒலி வடிவம் (வசனம், பாடல், இசை) உங்களுக்கு mp3 வடிவில் தேவை படலாம். அந்நேரங்களில் நீங்கள் அந்த வீடியோவை தரவிறக்கி அதனை MP3 ஆக மற்ற ஒரு மென்பொருளை தேட வேண்டி இருக்கும்.

Youtube Fisher என்ற இலவச மென்பொருள் யூடியுப் வீடியோவை MP3 ஆகவே பெறும் வசதியை அளிக்கிறது. இந்த மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க!

McAfee Antivirus ஒரு வருடத்திற்கு இலவசமாக பெற

கணினியில் தகவல்களை பாதுகாக்க ஆண்டிவைரஸ்களில் பணி முக்கியமானது. எனவே நல்ல ஆண்டிவைரஸ் மென்பொருள்களை விலை கொடுத்து வாங்கி கணினியில் பயன்படுத்துவது நல்லது. தவறான முறையில் Crack மூலம் உடைத்து உபயோகிக்க படும் பாதுகாப்பு மென்பொருள்கள் எப்போதும் முழு பாதுகாப்பு அளிக்குமா என்பது சந்தேகமே.

பிரபல பாதுகாப்பு மென்பொருள் நிறுவனங்கள், சில நேரங்களில் சலுகையில் தனது மென்பொருள்களை வெளியிடும். இது போன்று தற்போது Mcafee நிறுவனம் தனது VirusScan® Plus என்ற மென்பொருளை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குகிறது. மேலும் வாசிக்க!

பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட

பெரும்பாலும் நமது பிளாக்கிற்கு புதிதாக வருபவர்கள் தேடல் தளங்கள், திரட்டிகள், புக்மார்க் தளங்கள் மூலமாகத்தான் வருவார்கள். இடுகையை வாசித்து முடிந்ததும் கிளம்பி விடுவார்கள்.

உங்கள் பிளாக்கில் மேலும் சிறப்பான அவர்களை கவரும் பக்கங்கள் இருக்கலாம். அவற்றையும் வாசித்தால் உங்கள் பிளாக் அவர்களுக்கு மிகவும் பிடித்து போகலாம். அப்படி பிடித்து போனால் அவர்கள் உங்கள் பிளாக்கை விருப்ப தளமாக தனது கணினியில் புக்மார்க் செய்து கொள்வார்கள் அல்லது ஈமெயில் மூலம் சந்ததாராகி விடுவர், தொடர்பவராகவும் மாறுவர். தொடர்ந்து வாசிக்க வருவார்கள்.
மேலும் வாசிக்க!

தமிழ் வாசிக்க தெரியாத, பேச தெரிந்தவர்கள் தமிழ் தளங்களை வாசிக்க

தமிழகத்தில் உள்ள சுதந்திர கல்வி திட்டம் தமிழில் எழுத்துகளை வாசிக்க சிரமப்படுகிற மக்களை உருவாக்கி உள்ளது. இவர்கள் யார் எனில் பள்ளி கல்வியில் முதல் மொழியாக ஹிந்தியையும், விருப்ப மொழியாக பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளை தேர்ந்து எடுத்து பயின்றவர்கள்.

அனைவரும் தமிழ் மொழியில் பேசுவதால் இவர்களும் தமிழ் மொழியில் சரளமாக பேசுவார்கள். தமிழ் திரைப்படங்களை பார்த்து பரவசம் அடைவார்கள். தமிழ் தொலைக்காட்சிகளை பார்ப்பார்கள். இவர்களும் தமிழர்கள்தான். ஆனால் என்ன இவர்களால் தமிழ் மொழி எழுத்துகளை வாசிக்க இயலாது.
மேலும் வாசிக்க!

FeedBurner Vs தமிழ்மணம் சிக்கல்களுக்கு தீர்வு

பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க என்று Feedburner பற்றி எழுதிய இருந்த இடுகை அதிக வரவேற்பை பெற்றது. பெரும்பாலானோர் உபயோகப்படுத்த ஆரம்பித்தனர்.

ஆனால் பின்னூட்டத்தில் பதிவர்கள் சுரேஷ்கண்ணன், முத்துராமலிங்கம் ஆகியோர் இந்த மாற்றத்தால் தமிழ்மணம் திரட்டியில் இடுகைகளை இணைப்பதில் பிரச்சினைகள் தோன்றுவதாக தெரிவித்தனர். அதனை ஆராய்ந்ததில் பிரச்சினைகளுக்கு காரணம் என்ன? , தீர்வும் கண்டறிய முடிந்தது. அதனை இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

பிரச்சினைகள் என்ன?

வலைப்பதிவின் RSS Feed செயல்பாடுகளை Feedburner க்கு மாற்றி விட்ட பிறகு. தமிழ்மணத்தில் இடுகைகளை இணைப்பதில் பிரச்சினைகள். இடுகை தமிழ்மணத்தில் இணைந்தாலும் இடுகையில் தோன்றும் கருவி பட்டையில் வாக்களிக்கும் வசதி தோன்றாமல் முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தோன்றும். பின்பு எத்தனை முறை "அனுப்பு" என்பதை அழுத்தினாலும் "புதிய இடுகைகள் காணப்பட வில்லை" என்றே வரும்.

தமிழ்மணத்தில் இடுகையின் பின்னூட்டங்கள் திரட்டப்பட மாட்டது. இந்த பிரச்சினை தமிழ்மணம் அழித்து வந்த சிறப்பு சேவைகளில் Feedburner உபயோகிப்பவர்களுக்கு பின்னடைவை தந்தது.


பிரச்சினையின் காரணம் என்ன?

Feedburner -ல் நீங்கள் புதிய feed உருவாக்கும் போது Item Views, Item Link Clicks போன்றவற்றை கண்டறியும் பொருட்டு Feedburner உங்கள் வலைப்பதிவின் இடுகைக்கான URL - ஐ புதிதாக மாற்றி விடுகிறது. தமிழ்மணம் போன்ற திரட்டிகள் உங்கள் RSS Feed போன்றவற்றை அடிப்படையாக வைத்து இயங்குகின்றன. Feedburner உங்கள் இடுகையின் URL-ஐ மாற்றும் போது தவறுகள் நிகழுகின்றன.

உதாரணத்திற்கு பதிவர் ஆ.முத்துராமலிங்கம் அவர்களின் பென்சில் என்ற வலைப்பதிவை எடுத்து கொள்வோம். அவர் உருவாகிய Feedburner RSS Feed URL : http://feeds.feedburner.com/asuda5posts . அந்த RSS Feed -ல் முதல் இடுகை மீன் தொட்டி. >மூன்று கவிதைகள் க்கான URL http://asuda5.blogspot.com/2009/06/blog-post_25.html என்று இருக்க வேண்டும். ஆனால் http://feedproxy.google.com/~r/asuda5posts/~3/DwobOyYKGaM/blog-post_25.html என்று வருகிறது.

உங்கள் இடுகை RSS Feed -ல் எத்தனை முறை கிளிக் (Item Click) செய்யப்பட்டது என்பதை கணக்கிட Feedburner உங்கள் URL ஐ மாற்றி விட்டது. தமிழ்மணத்தில் இந்த URL பகிரப்படும் போது சிக்கல்கள் உண்டாகிறது. பிரச்சினைக்கு இதுதான் காரணம்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன?

Feedburner -ல் உள்ள வசதிகளான Item Views, Item Link Clicks போன்ற வசதிகளை நீக்குவதன் மூலம் சரி செய்ய முடியும்.

Feedburner தளத்துக்கு சென்று Feed ஐ செலக்ட் செய்து கொண்டு அதில் Configure Stats என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

அடுத்து தோன்றும் பக்கத்தில் Item Views, Item Link Clicks , Item enclosure downloads போன்ற ஆப்சன்கள் செலக்ட் ஆகி இருந்தால் அவற்றை எடுத்து விட்டு Save செய்து கொள்ளவும். இனி RSS Feed -ல் உங்கள் URL கள் பழைய Default URL களாக மாறி இருக்கும்.

அடுத்து Feedburner RSS Feed URL (உ.தா http://feeds.feedburner.com/asuda5posts) ஐ திறந்து பார்க்கவும். இடுகைகளுக்கான URL http://feedproxy.google.com/~r/ என்று ஆரம்பிக்காது. உங்கள் வலைப்பதிவின் URL லோடு ( உ.தா. http://asuda5.blogspot.com/2009/ ) ஆரம்பிக்கும் . உடனடியாக மாற்றம் தெரியவில்லை என்றால் பொறுத்திருக்கவும். இது அப்டேட் ஆக சில நிமிடங்கள் ஆகலாம்.

அடுத்து பழைய இடுகையில் சொல்லி இருந்தபடி இதனை உங்கள் வலைப்பதிவின் நிரந்தரமான RSS Feed URL ஆக மாற்ற வேண்டும். இதற்கு உங்கள் பிளாக்கர் Dashboard -ல் Settings --> Site Feed --> Post Feed Direct URL என்பதில் உங்கள் புதிய Feedburner RSS Feed Url அளித்து சேமிக்கவும். இனி உங்கள் வலைப்பதிவுக்கான RSS Feeds வசதியை FeedBurner கவனித்து கொள்ளும்.


இப்போது மீண்டும் உங்கள் இடுகைகளை தமிழ்மணத்தில் இணைத்து பாருங்கள். சிக்கல் இல்லாமல் இணையும். பின்னூட்டங்கள் திரட்டப்படும். இதனால் உங்கள் RSS Feed Readers கணக்கிடுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.

இத்தனை செயல்படுத்தி பார்க்கவும். மேலும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் தயங்காமல் கூறவும் தீர்வு தர முயல்கிறேன். பிரச்சினைகள் இருப்போர் உங்கள் Feedburner RSS Feed உரல் ஐ பின்னூட்டத்தில் தரும்படி கேட்டு கொள்கிறேன்.
மேலும் வாசிக்க!

ஹார்ட்டிஸ்க் இட பற்றாகுறை - பெரிய கோப்புகளை கண்டறிய

கணினி வாங்கும் பொழுது நீங்கள் போதுமான கொள்ளளவு கொண்ட ஹார்ட்டிஸ்க் வாங்கி இருப்போம். பெரும்பாலானோர் வீடியோ , மென்பொருள்களை தரவிறக்கி உபயோகித்து விட்டு அவற்றை அளிக்க மறந்து இருப்போம். நாளடைவில் பாடல்கள், வீடியோ கோப்புகள், மென்பொருள்கள் என்று பெரிய கோப்புகளால் ஹார்ட்டிஸ்க் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும்.

அதிக இடம் எடுத்து கொண்டுள்ள கோப்புகள் எங்கு சேமித்து வைத்தோம் என்று மறந்து இருப்போம். அந்நேரங்களில் உங்கள் கணினியும் வேலை செய்ய திணறும். "Low Disk Space" என்று எச்சரிக்கை செய்தி தரும்.

இத்தருணங்களில் கணினியில் தேங்கி உள்ள கோப்புகளை தேடி கண்டுபிடித்து அளிக்க வேண்டும்.ஹார்ட்டிஸ்கில் எங்கு பெரிய அளவு கொண்ட கோப்புகள் இருக்கின்றன என்பதை கண்டறிவது கடினமான விஷயம். இந்த பெரிய கோப்புகளை அழித்தாலே பெரும்பாலான இடத்தை காலியாக வைத்து கொள்ளலாம்.

இதனை செய்ய Primitive File Size Chart என்ற இலவச மென்பொருள் உதவுகிறது. இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை. தரவிறக்கிய கோப்பை திறந்தாலே போதுமானது.


இது விண்டோஸ் 2000/2003/XP/Vista/7 இயங்குதளங்களில் இயங்கும். இதன்
மூலம் நீங்கள் பெரிய கோப்புகளை , அவை உள்ள போல்டர்களை கண்டறியலாம். பின்பு அந்த போல்டர்களுக்கு சென்று அந்த கோப்புகளை அழித்து கணினியின் ஹார்ட்டிஸ்க் இடத்தை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க!

பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க

பிற்சேர்கை (18-01-2010) : இந்த இடுகை தமிழ்மணம் திரட்டியின் 2009 -ம் ஆண்டிற்கான சிறந்த இடுகை என்று முதல் பரிசை 'தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்' என்ற பிரிவின் கீழ் பெற்றுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்ளுகிறேன். வாக்களித்த, ஆதரித்த அனைவருக்கும் எனது நன்றிகள். விருதினை வழங்கி ஊக்குவிக்கும் தமிழ்மணம் குழுமத்திற்கு நன்றி.

பதிவுலகில் வலைப்பதிவு எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனி காரணம் உண்டு. சிலர் பொழுதுபோக்கிற்காக எழுதுவோர். சிலர் தன் வாழ்வின் தடயங்களை பதிய எழுதுகின்றனர். சமூகம் குறித்தும், திரைத்துறை குறித்தும் தங்கள் பார்வையை பதிவிடுகிறார்கள். என் போன்று சில பதிவர்கள் கற்று கொண்ட விசயங்களை மற்றவர்களுடன் பகிர்வதற்காக வலைப்பதிவை உபயோகித்து வருகிறோம்.

ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் அவரவர் விருப்பம் சார்ந்து வாசகர் வட்டம் உண்டு. தொடர்ந்து அந்த வலைப்பதிவை வாசித்து வருவார்கள். நமது வலைப்பதிவுக்கு தினசரி புது வாசகர்கள் திரட்டிகள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ வருகிறார்கள். வருபவர்கள் தொடர்ச்சியாக நம் வலைப்பதிவுக்கு மீண்டும் வருவார்கள் என்று உறுதி கூற முடியாது.

தமிழ் வலைப்பதிவுகளில் வருமானத்திற்கு வழி குறைவு என்பதால் வலைப்பதிவு எழுதுவதை யாரும் முழு நேர தொழிலாக செய்வதில்லை. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறார்கள். வலைப்பதிவை வாசிக்க வாசகர்கள் தினசரி வரும் போது புது பதிவு இல்லை என்றால் வருபவர்கள் அதிருப்தி கொள்கின்றனர். மீண்டும் அந்த வலைப்பதிவுக்கு வருவதை குறைத்து கொள்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். மீண்டும் திரட்டிகளில் கண்ணில் தென்பட்டால்தான் வருகிறார்கள்.

தினமும் பதிவு எழுதுவது இயலாத காரியம்தான். இந்த சூழ்நிலையில் நம் வலைப்பதிவுக்கு வரும் வாசகர்களை தக்க வைத்து கொள்வது முக்கியம். அதற்கு சில வசதிகள் உள்ளன. RSS Feeds , Follower என்ற வசதிகள் அவை.Follower வசதி வலைப்பதிவு வைத்து உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது குறித்து மற்றொரு இடுகையில் விரிவாக பார்க்கலாம்.

இப்போது RSS Feeds பற்றி பார்ப்போம். RSS Feeds பார்வையாளர்களுக்கு எந்த அளவில் உபயோகமாக இருக்கும் என்பதை ஏற்கனவே RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம் என்ற இடுகையில் விரிவாக எழுதி இருந்தேன்.

வலைப்பதிவு வைத்து இருக்கும் நாம், பார்வையாளர்களுக்கு RSS Feeds வசதிகள் அளிப்பது நமக்கு எந்த அளவில் உபயோகப்படும் என்று பார்ப்போம். நான் முன்னர் கூறி உள்ளபடி நமது வலைப்பதிவுக்கு வரும் புதிய வாசகர்களை நம் பதிவின் நிரந்தர வாசகராக மாற்றுவது இருவருக்கும் நன்மை பயக்கும். அதற்கான வசதிதான் RSS Feeds.

நாம் புதிய இடுகைகள் இடும் போது வாசகர் உபயோகிக்கும் Feed Reader ல் நமது புதிய இடுகைகள் புதுப்பிக்கப்பட்டு விடும். அவர் உங்கள் எழுத்துக்களை எளிய முறையில் தொடர்ச்சியாக வாசித்து கொள்வார்.

பிளாகரில் (blogger.com) வலைப்பதிவு வைத்து இருப்பவர்களுக்கு அவர்கள் வலைப்பதிவின் RSS Feeds URL பொதுவாக இப்படி இருக்கும். http://YOURBLOGNAME.blogspot.com/feeds/posts/default/ . இதனை Feed Reader -ல் இணைப்பதன் மூலம் இடுகைகளை வாசித்து கொள்ள முடியும்.

Feed Reader உபயோகிப்பதற்கு ஓரளவாவது இணையம் சார்ந்த அறிவு வேண்டும். அவர்கள் பிளாக்கர் அளிக்கும் இந்த RSS வசதியை உபயோகித்து கொள்வார்கள். ஆனால் புதியவர்கள் சிலர் ஈமெயில் மட்டும் உபயோகிக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு RSS Feed , Reader என்பன குழப்பத்தை தரலாம். அவர்களுக்கும் உங்கள் எழுத்துகளை கொண்டு சென்று சேர்க்க வசதி உள்ளது.

RSS Feeds பொறுத்தவரை FeedBurner.com தளம் மேம்படுத்தப்பட்ட வசதிகளை அளிக்கிறது. பிரபலமான அந்த தளம் கூகிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு மேலும் பிரபலமாகி உள்ளது.

Feedburner.com சென்று கூகிள் கணக்கு மூலம் லாகின் செய்து கொள்ளுங்கள். அங்கு உங்கள் பிளாக்கின் URL கொடுத்து புதிய RSS Feed உருவாக்கி கொள்ளுங்கள்.
அங்கு கேட்கப்படும் தகவல்களை அளிக்கும் போது உங்களுக்கு புதிய RSS Feed முகவரியை அளிக்கும். உதாரணத்திற்கு இப்படி இருக்கும். http://feeds.feedburner.com/tvs50posts .


இதனை உங்கள் வலைப்பதிவின் நிரந்தரமான RSS Feed URL ஆக மாற்ற வேண்டும். இதற்கு உங்கள் பிளாக்கர் Dashboard -ல் Settings --> Site Feed --> Post Feed Direct URL என்பதில் உங்கள் புதிய Feedburner RSS Feed Url அளித்து சேமிக்கவும். இனி உங்கள் வலைப்பதிவுக்கான RSS Feeds வசதியை FeedBurner கவனித்து கொள்ளும்.


இதில் முக்கிய வசதியான ஈமெயில் மூலம் சந்தாதாரர் (Subscribe) பற்றி பார்க்கலாம். மற்ற வசதிகளை பற்றி பின்பு தனி இடுகைகளாக எழுதுகிறேன்.
ஈமெயில் சந்தாதாரர் வசதியை பெற Feedburner சென்று Publicize --> Email Subscriptions கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யவும்.
சந்தாதாரர் வசதி அளிப்பதற்கு Code கொடுப்பார்கள். அதை உங்கள் வலைப்பதிவில் வேண்டுமென்ற இடத்தில் பேஸ்ட் செய்தால் போதுமானது. அல்லது பிளாக்கரில் எளிதாக இணைக்கும் வசதியையும் கொடுத்து உள்ளார்கள். அதனை உபயோக படுத்துங்கள். அங்கே Feed Count என்ற வசதியும் உண்டு. அதன் மூலம் உங்கள் வலைப்பதிவை தினமும் எத்தனை பேர் RSS Feeds மூலம் படிக்கிறார்கள் என்பதனை உங்கள் வலைப்பதிவில் காட்டலாம்.

பிளாக்கரில் Feedburner உபயோகப்படுத்துவது குறித்த இந்த செய்முறை வீடியோ கொஞ்சம் வளா வளா என்று இருந்தாலும் புரியும் படி உள்ளது. பார்க்கவும்.


இனி உங்கள் வலைப்பதிவில் வாசகர்கள் ஈமெயில் மூலமும் சந்தாதாரர் ஆகி கொள்ளலாம். நீங்கள் இடும் புதிய இடுகைகள் சந்தாதாரரை ஈமெயில் மூலம் சென்றடைந்து விடும். அவர் உங்கள் தளத்துக்கு வர தேவை இல்லை. உங்கள் பார்வையாளர்களை RSS Feeds உபயோகிக்க ஊக்கப்படுத்துங்கள். இந்த எளிய முறை மூலம் உங்கள் வாசகர்கள் பெருகி கொண்டு செல்வார்கள்.
இப்போதெல்லாம் வைரஸ் போன்ற பிரச்சினைகளால் வலைப்பதிவுகள் காணாமல் போகின்றன. மேலும் சிலர் பதிவு எழுதுவதை சில காலம் நிறுத்தி விட்டு மீண்டும் துவங்குகிறார்கள். நீங்கள் பதிவு எழுதுவதை நிறுத்தி விட்டு ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுதினாலும் நீங்கள் தக்க வைத்து கொண்டுள்ள வாசகர்களுக்கு உங்கள் படைப்புகளை கொண்டு செல்ல முடியும்.

அல்லது புதிய வலைப்பதிவு எழுதினாலும் Edit Feed Details மூலம் புதிய Feed மாற்றி அளித்து அங்கும் இவர்களுக்கு நம் படைப்புகள் கொண்டு செய்ய வைக்க முடியும். இது போன்ற வசதிகள் நம் வாசகர்களை இழக்காமல் வைத்து கொள்ள உதவும்.

இதன் மூலம் வாசகர்கள் பெருகும் போது நாம் எழுதுவதை நம்மால் எடை போட்டு கொள்ள முடியும். அதிகரித்தால் துணிச்சலாக எழுதலாம் :) . எழுதும் போதும் நம்மை நம்பி சந்தாதாரர் ஆகி உள்ளவர்களுக்காக எழுதுகிறோம் என்று உற்சாகம் பிறக்கும்.

RSS Feed வசதி அளிப்பதால் வாசகர்கள் நம் தளத்திற்கு வர மாட்டார்கள். Feed Reader , ஈமெயில் மூலம் வாசித்து இருந்து விடுவார்கள் என்ற தவறான குற்றசாட்டு உண்டு. தளத்திற்கு வந்து படிப்பவர்களை இது பாதிப்பதில்லை. ஒன்றுமில்லாமல் போவதற்கு பதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாசகர்களையாவது கையில் வைத்து கொள்ளலாமே. Feedburner உங்கள் வாசகர் வட்டத்தை அதிகப்படுத்தும். கண்டிப்பாக உபயோகியுங்கள்.
மேலும் வாசிக்க!