
உங்கள் பிளாக்கில் மேலும் சிறப்பான அவர்களை கவரும் பக்கங்கள் இருக்கலாம். அவற்றையும் வாசித்தால் உங்கள் பிளாக் அவர்களுக்கு மிகவும் பிடித்து போகலாம். அப்படி பிடித்து போனால் அவர்கள் உங்கள் பிளாக்கை விருப்ப தளமாக தனது கணினியில் புக்மார்க் செய்து கொள்வார்கள் அல்லது ஈமெயில் மூலம் சந்ததாராகி விடுவர், தொடர்பவராகவும் மாறுவர். தொடர்ந்து வாசிக்க வருவார்கள்.
அவர்கள் வாசிக்க அவர்கள் விரும்பும் இடுகைக்கு தொடர்புடைய இடுகைகளை பிரித்து அவர்களுக்கு தனியே பட்டியலிட்டு உதவுவது நம் பிளாக்கிற்கு பொலிவை தரும். உதாரணத்திற்கு நீங்கள் இந்த இடுகையை வாசித்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் பிளாக்கர் தொடர்பாக விசயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர் என்பது புரிகிறது.
ஆனால் இந்த பிளாக்கில் பிளாக்கர் பற்றிய தகவல்களுடன் மென்பொருள்கள், வீடியோ, தொழில்நுட்ப செய்திகள் போன்ற பல விடயங்களையும் பதிவிட்டு வருகிறேன். ஆனால் உங்களுக்கு இவற்றில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். பிளாக்கர் தொடர்பான விசயங்களில் நீங்கள் ஆர்வம் உள்ளவர் எனில் உங்களுக்கு அது தொடர்பான இடுகைகளை தனியே பிரித்து பட்டியலிட்டு காட்டினால் உங்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்தானே? எளிதாக வாசித்து கொள்ள முடியும்.

இதை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம். நீங்கள் பிளாக்கில் எவற்றை பற்றி எழுதுகிறீர்களோ அவற்றிற்கான பொதுவான குறி சொற்களை தேர்ந்தெடுத்து வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் பிளாக்கில் 'வீடியோ, நகைச்சுவை , திரை விமர்சனம், கதை, கவிதை' போன்றவற்றை பெரும்பாலும் எழுதுபவராக இருந்தால் நீங்கள் எழுதும் அனைத்து இடுகைகளிலும் 'Labels for this post:' என்ற பகுதியில் அதற்கு ஏற்ற குறி சொற்களை தவறாது கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் எழுதும் அனைத்து கதை இடுகைகளிலும் அந்த இடுகை எழுதும் போது 'Labels for this post:' என்ற இடத்தில் 'கதை' என்ற குறிச்சொல் தவறாது இடம் பெறுமாறு பார்த்து கொள்ள வேண்டும். அந்த இடுகை நகைச்சுவை கதை என்றால் 'கதை, நகைச்சுவை ' என்று கமா(,) மூலம் பிரித்து கொடுக்கவும்.

உங்கள் பிளாக்கரின் 'Dashboard' உள் நுழைந்து கொண்டு 'Layout' --> 'Edit HTML' என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள். உங்கள் வார்பபுருவை 'Download Full Template' கிளிக் செய்து தவறாது பேக்கப் எடுத்து கொள்ளவும். அடுத்து 'Expand Widget Templates' என்பதனை தேர்வு செய்து கொள்ளவும்.

<data:post.body/>என்பதனை தேடவும். அதன் கீழ் என்ற நிரலை
<div id='related_posts'/>காப்பி செய்து பேஸ்ட் மூலம் இணைக்கவும்.

</body></html>என்ற வரிகளை தேடவும். அதன் மேலே கீழ்காணும் நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
<script src='http://www.google.com/jsapi'/> <script type="text/javascript"> window.brps_options = { "title": "<h2>தொடர்புடைய இடுகைகள்</h2>", "max_results": 10 } </script> <script src='http://brps.appspot.com/brps.js' type='text/javascript'/>

7 comments:
நிரம்ப நன்றி. எனது வலைப்பதிவுக்கு சேர்த்துவிட்டேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
ரொம்ப பயனுள்ள பதிவு அண்ணே. எனது தளத்திலும் இணைத்து விட்டேன்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
ரெட்மகி,
கிராமத்து பையன்
( http://gramathan.blogspot.com)
நன்றி ரெட்மகி, மது
ரொம்ப நன்றி தல. பயனுள்ளதாக இருந்தது. என் தளத்திலும் நிறுவி விட்டேன்.
நீங்க நல்லா இருக்கோனும் :-) வாழ்த்துக்கள்.
உங்களுக்கு பயன்பட்டதில் மகிழ்ச்சி ரொஸ்விக்
மிக அருமை நண்பரே. என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு இது போன்ற பதிவுகள் மிகவும் உதவியாக இருக்கிறது.
நட்புடன்
நவீனன்
உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை என் அலுவலகத்தில் ப்ளாக்ஸ் தடைசெய்துள்ளதால் feedல் படிக்கிறேன். தெரட்டும் உங்கள் பணி
Post a Comment