யூடியுப் வீடியோவிலிருந்து ஒலியை MP3 ஆக சேமிக்க

யூடியுப் புகழ் பெற்ற வீடியோ தளமாகும். அதில் உள்ள வீடியோக்களை தரவிறக்குவதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம்.

சில சமயங்களில் யூடியுப் வீடியோவில் உள்ள ஒலி வடிவம் (வசனம், பாடல், இசை) உங்களுக்கு mp3 வடிவில் தேவை படலாம். அந்நேரங்களில் நீங்கள் அந்த வீடியோவை தரவிறக்கி அதனை MP3 ஆக மற்ற ஒரு மென்பொருளை தேட வேண்டி இருக்கும்.

Youtube Fisher என்ற இலவச மென்பொருள் யூடியுப் வீடியோவை MP3 ஆகவே பெறும் வசதியை அளிக்கிறது. இந்த மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.


அதை திறந்து கொண்டு அதில் 'youtube video url' என்பதில் நீங்கள் MP3 ஆக மற்ற விரும்புகிற யூடியுப் வீடியோவின் URL (உ.தா. http://www.youtube.com/watch?v=g6l6EcP6xq0) கொடுக்கவும். 'Extract Audio' கிளிக் செய்தால் ஆடியோ மட்டும் MP3 வடிவில் கோப்பாக உங்கள் கணினியில் சேமிக்கப் பட்டு விடும். வீடியோ முழுதும் தேவை பட்டால் 'download video' என்பதனை கிளிக் செய்யவும். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

0 comments: