விண்டோசுடன் இலவசமாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010

விண்டோஸ் கணினிகளுடன் மைக்ரோசாப்ட் வொர்க்ஸ் (Microsoft Works) எனும் மென்பொருளை இலவசமாக மைக்ரோசாப்ட் வழங்கி வந்தது. எதிர்காலத்தில் விண்டோசுடன் வாங்கப்படும் கணினிகளுடன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 ஸ்டார்ட்டர் மென்பொருளை இலவசமாக வழங்க போவதாக அறிவித்து உள்ளது. இவை விளம்பரங்களை உள்ளடக்கி வரலாம்.  ஆபீஸ் 2010 ஸ்டார்ட்டர் மைக்ரோசாப்ட் வோர்ட் , எக்ஸ்செல் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
மேலும் வாசிக்க!

உயர் தர 1080p HD வீடியோக்கள் யூடியுப்பில்

HD டிவி , HD வீடியோ போன்ற வார்த்தைகளை நீங்கள் கேள்விப்பட்டு இருக்க கூடும்.  HD (High Definition) என்பது வழக்கமாக உள்ள வீடியோ resoultion களில் இருந்து மாறுபட்டு அதிக resoultion களில் வரும் வீடியோக்கள் ஆகும். இவை மிகவும் துல்லியமாக இருக்கும். HD வீடியோக்கள் பெரும்பாலும் 1280×720 pixels (720p) அல்லது 1920×1080 pixels (1080p) resolution களில் வருகின்றன.

யூடியுப்பில் HD வீடியோக்களை தரவேற்றும் வசதி இருந்தாலும் 1080p உயர்தர HD வீடியோக்களை தரவேற்ற முடியாது. இனி அதி துல்லிய 1080p HD வீடியோக்களை தரவேற்றி கொள்ள முடியும். இன்று முதல் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. உங்களிடம் HD கேமரா இருந்தால் வீடியோக்கள் எடுத்து யூடுபில் தரவேற்றுங்கள். கேமரா இல்லாதவர்கள் உயர்தர வீடியோக்களை பார்க்க தயாராகுங்கள். இனி 1080p வீடியோக்கள் யூடுபில் அதிகம் தென்பட ஆரம்பிக்கும்.
மேலும் வாசிக்க!

தொ.நு.செ.5 : பயர்பாக்ஸ், மொப்ளின், படா, நோக்கியா மெஸ்செஜிங், கூகிள் கோ

 தொழில்நுட்ப செய்திகள் ஐந்து : 12-11-2009

இணைய உலாவிகள் உலகிலும் போட்டிகள் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். பயர்பாக்ஸ் இணைய உலாவியின் 3.6b2 பீட்டா பதிப்பு இரண்டு வெளியாகி உள்ளது. பீட்டா ஒன்று பதிப்பில் இருந்த 190 பிழைகளை நீக்கி இருப்பதாக கூறி உள்ளார்கள். சோதித்து பார்க்க விரும்புவோர் இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க!

எந்த தியேட்டர்ல என்ன சினிமா ஓடுது? கூகிள்ல பாருங்க!

முன்பெல்லாம் நம்ம ஊர்ல எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பேப்பர் பத்து தெரிஞ்சுக்கலாம். ஊரெங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர் பாத்து தெரிஞ்சுக்கலாம். இப்ப நம்ம கூகிள் தயவால இணையத்துலேயே தெரிஞ்சுக்கலாம்.

http://google.com/movies என்ற முகவரிக்கு போங்க. எந்த சினிமாவை தேட வேண்டுமோ அதை கொடுங்கள். 'Change Location' என்பதில் எந்த ஊரில் தேட வேண்டுமோ அதை கொடுங்கள். எண்டரை தட்டுங்கள்.
மேலும் வாசிக்க!

இணையத்தில் கோப்புகளை சேமிக்க விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ்

இப்போது டிஜிட்டல் கேமரா வந்த பிறகு ஒரு குடும்ப நிகழ்ச்சி என்றா நூறு இருநூறு என்று புகைப்படங்களை எடுத்து தள்ளி விடுகின்றனர். நாம் எவ்வளவுதான் பாதுகாப்பாக கணினியில் படங்கள், வீடியோ, ஆடியோ உள்ளிட்ட கோப்புகளை வைத்து இருந்தாலும், அவை பாதுகாப்பாக காலம் முழுமைக்கும் இருக்குமா என்றால் சந்தேகம் தான்.

DVD, USB போன்றவற்றில் பேக்கப்பாக வைத்து கொள்ளலாம் என்றால் நம் நினைவுகளை தாங்கிய கோப்புகளை உள்ளடக்கிய DVD, USB தொலைத்து போனாலோ, சேதாரம் அடைந்தாலோ எல்லாவற்றையும் இழக்க வேண்டியதுதான். கணினியை பொறுத்தவரை அது எந்நேரமும் Corrupt ஆகி அனைத்தும் இழக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம். இது போன்று பலர் காலம் காலமாக தமது நினைவுகளை மீது எடுத்க்கும் விதமாக எடுத்து வைத்திருந்த புகைப்பட தொகுப்புகளை இழந்ததுண்டு.
மேலும் வாசிக்க!

கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம்

கோடிக்கணக்கில் குவிந்துள்ள மென்பொருள் உலகின் நாம் தினமும் நிறையமென்பொருள்கள் பற்றி கேள்வி படுகிறோம். நம் தேவைக்கு ஏற்ப நமதுகணினியில் நிறுவியும் கொள்கிறோம். இந்த பிளாக்கில் கூட நான் இலவச மென்பொருள்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். பெரும்பாலும் அவற்றை உபயோகித்து பார்த்து இருப்பீர்கள்.

அவை அனைத்தும் உங்கள் கணினியில் குறிப்பிட தகுந்த இடம் பிடித்து கொண்டுஇருக்கும். சில மென்பொருள்களை சோதித்து பார்க்கும் வண்ணம் நிறுவி நீக்கமறந்து இருப்போம்.
மேலும் வாசிக்க!

விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட

கோப்புகளை சேமித்த இடம் தெரியாமல் தேடுவது வழக்கமான ஒன்றுதான். விண்டோஸ்சில் இது எளிதான வேலை அல்ல. நீண்ட நேரம் பிடிக்கும். ஆனாலும் தெளிவான முடிவுகளை தருமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

விண்டோஸ்சில் கோப்புகளை தேடுவதற்கு என்று ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது. சில நொடிகளில் சரியான முடிவுகளை தந்து விடும். நன்றாக வேலை செய்கிறது. மேம்படுத்த பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதால் கண் இமைக்கும் நேரத்தில் முடிவுகளை தருவதாக அதை வடிவமைத்தவர் தெரிவிக்கிறார்.
மேலும் வாசிக்க!