தொ.நு.செ.5 : பயர்பாக்ஸ், மொப்ளின், படா, நோக்கியா மெஸ்செஜிங், கூகிள் கோ

 தொழில்நுட்ப செய்திகள் ஐந்து : 12-11-2009

இணைய உலாவிகள் உலகிலும் போட்டிகள் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். பயர்பாக்ஸ் இணைய உலாவியின் 3.6b2 பீட்டா பதிப்பு இரண்டு வெளியாகி உள்ளது. பீட்டா ஒன்று பதிப்பில் இருந்த 190 பிழைகளை நீக்கி இருப்பதாக கூறி உள்ளார்கள். சோதித்து பார்க்க விரும்புவோர் இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.


மொப்ளின் லினக்ஸ் (Moblin Linux) , மற்ற இயங்கு தளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு  இன்டெல் அடோம் ப்ராசசரால் இயங்கும் நெட்புக் கணினிகளில் சிறப்பாக இயங்கும்படியான இயங்குதளமாக வெளி வந்துள்ளது. பாட்டரி சக்தியை சிக்கனமாக உபயோகித்து மற்ற இயங்குதளங்களை விட நெட் புக் கணினிகளில் சிறப்பாக இயங்கும் என்று அறிவித்து உள்ளார்கள். இது குறித்து அறிய தரவிறக்க இங்கு செல்லவும். இது குறித்த வீடியோ காண இங்கு செல்லவும்.

அதிக மொபைல் போன்களை தயாரிப்பதில் இரண்டாம் இடம் வகிக்கும் சேம்சங் நிறுவனம், தனது மொபைல் போன்களுக்கென பிரத்தியேகமான இயங்குதளத்தை தயாரிக்கும் வேலையில் இறங்கி உள்ளது. இது வரை இவர்கள் சிம்பியன், விண்டோஸ் மொபைல், கூகிள் ஆண்டிராயிட் போன்ற இயங்குதளங்களை தங்கள் மொபைலில் உபயோகித்து வந்தனர். தனது சொந்த புதிய மொபைல் இயங்கு தளத்திற்கு 'படா' (கொரிய மொழியில் கடல் என்று அர்த்தமாம் ) என்று பெயரிட்டு உள்ளனர். ஆங்கிலத்தில் செய்தி இங்கே.

நோக்கியா நிறுவனம், http://messaging.nokia.com/ எனும் தனது புதிய இணைய தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தளத்தை உங்கள் கணினியில் இருந்தும், மொபைல் மூலமாகவும் அணுகலாம். ஈமெயில், சாட்டிங், சோசியல் நெட்வொர்கிங் என செய்திகளை பரிமாறிக்கொள்ள உதவும் மொபைலில் உபயோகப்படுத்த கூடிய அனைத்து விதமான மென்பொருள்களும் இங்கு உள்ளன. உங்கள் மொபைல் போன் மாடலை தேர்ந்தெடுத்து கொண்டு அதற்கேற்ற மென்பொருள்களை பெற்று கொள்ளுங்கள்.


கூகிள் நிறுவனம் 10 நவம்பர் 2009 அன்று Go என்ற ப்ரோக்ராமிங் மொழியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது போன்ற மொழிகளில் எனக்கு ஆழ்ந்த அறிவு இல்லாததால் சரியாக புரியவில்லை :(. இது குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இது தொடர்பான கூகுளின் அறிவிப்பை இங்கு சென்று பாருங்கள். இந்த மொழி தொடர்பான அதிகார பூர்வ தளம். இது தொடர்பான வீடியோ. Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

2 comments:

கடைக்குட்டி said...

U R BACK :-)


சூப்பர்ங்க.,, நல்ல தகவல்கள்..

mail subscripe பண்ணி இருக்குறதால அங்கயே படிச்சுட்டேன்...

நன்றி சொல்லவே இங்கு என் வரவு :-)

டிவிஎஸ்50 said...

வாங்க கடைக்குட்டி. நன்றி .