பெரிய படங்களின் அளவையும் அதன் கோப்பு அளவையும் (File Size) இலவச மென்பொருள் மூலம் மிக எளிதான முறையில் குறைப்பது எப்படி என்பதை விளக்கும் பதிவு இது.
டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கும் போது MB கணக்கில் அவை அளவில் பெரியதாக இருக்கும். அவற்றை ஈமெயில் மூலமாக அனுப்பும் போது அதிக நேரம் பிடிக்கும். பெரிய படங்களை மைக்ரோசாப்ட் வோர்ட் , பவர்பாய்ண்ட் போன்றவற்றில் உபயோகிக்கும் போதும் அதிக இடம் பிடித்து கொள்ளும். இது போன்ற சமயங்களில் படங்களின் அளவை குறைக்க வேண்டி இருக்கும். சாதாரணமாக இதனை செய்ய போடோஷோப் , பெயிண்ட் போன்ற மென்பொருள்கள் மூலம் படத்தை திறந்து, படத்தின் அளவை குறைத்து மீண்டும் புதிய பெயரில் சேமிப்போம். நேரம் அதிகம் விரயம் ஆகும்.
தற்போது திறக்காமலே வலது கிளிக் மூலம் அந்த படத்தை சிறிதாக்க முடியும். இதற்கான இலவச மென்பொருளை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இனி நீங்கள் படத்தை உபயோக படுத்தும் போது அந்த படத்தின் Thumbnail மீது வலது கிளிக் செய்தால் தோன்றும் மெனுவில் "Resize Pictures" என்ற புதிய ஆப்சன் இருக்கும்.
அதனை கிளிக் செய்தால் வரும் விண்டோவில் small (640 x 480 pixels), medium (800 x 600 pixels), large (1024 x 768 pixels) and Handheld PC (240 x 320 pixels) தோன்றும் அளவுகளில் உங்கள் தேவையை அளித்து OK கிளிக் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவு குறைந்த புதிய படம் கிடைத்துவிடும்.
எடுத்துகாட்டாக என்னிடம் உள்ள man.jpg , 3008x2000 என்ற அளவில் 2.5 MB கோப்பளவு (File Size) கொண்ட படம். அதனை நான் 640x480 அளவு கொண்ட படமாக சுருக்கி கொண்டேன். man(small).jpg என்ற பெயரில் சேமிக்கப்பட்டு விட்டது. அதன் கோப்பளவு (File Size) 92.2 KB மட்டுமே. அதிக சேமிப்பு. ஈமெயில் மூலம் அனுப்ப விரும்பினால் மிக எளிதாக அனுப்பி விடலாம்.
புதிய பெயரில் சேமிக்காமல் , ஒரிஜினல் படத்தில் பெயரிலேயே சேமிக்க விரும்பினால் "Resize the original pictures (don't create copies)" என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ளவும். இப்போது உங்கள் ஒரிஜினல் படமே அளவு குறைவுள்ளதாக மாறி இருக்கும்.
நிறைய படங்களை ஒரே நேரத்தில் அளவை குறைக்க விரும்பினால், படங்கள் உள்ள போல்டரை ஓபன் செய்து வேண்டுமென்ற படங்களை செலக்ட் செய்து கொண்டு வலது கிளிக் மூலம் "Resize Pictures" கொடுக்கவும்.
பின்னூட்டத்தில் வடுவூர் குமார் அவர்கள் அளவு குறைக்கப்பட்ட பின்பு படத்தின் தெளிவு பற்றி கேட்டிருந்தார். அளவு குறைக்கப்பட்ட பின்பு படத்தின் தெளிவில் பெரிய மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. நன்றாகவே உள்ளது. உதாரணத்திற்கு இந்த விவரங்களை பாருங்கள்
1. 4368x2912 ஒரிஜினல் படம் - 1.21 MB
2. 640x426 அளவில் சுருக்கப்பட்ட படம் - 55.6 KB
3. 800x533 அளவில் சுருக்கப்பட்ட படம் - 71.0 KB
4. 1024x682 அளவில் சுருக்கப்பட்ட படம் - 95.8 KB
படத்திற்கு நன்றி ajithfans.com
இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இதை விட ஏதேனும் எளிய மென்பொருள் இந்த வேலைக்கு இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். உங்கள் நண்பர்களுக்கு இந்த பிளாக்கை அறிமுக படுத்தவும்
நன்றி.
11 comments:
Thanks machiee
Thanks for the info.
Normally i do use Zapgrap
இந்த பதிவுக்கு மிக்க நன்றி ஜயா.
பயனுள்ள தகவல்.
நன்றி 50!
always posting what I am searching for!!!!!!!
thanks
Keep posting
நல்ல மென்பொருள் தான் போல் இருக்கு,அளவு மாற்றிய பிறகு நகர்படத்தின் தெளிவு எப்படி இருக்கு?
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே... உங்களுக்கு உபயோகமாக இருந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
@வடுவூர் குமார்
அளவு மாற்றிய பிறகு தெளிவில் மிகப்பெரிய மாற்றம் இல்லை. விரிவாக பதிவிலேயே படங்களுக்கான லிங்க்குகளை அவற்றின் அளவுடன் சேர்த்துள்ளேன். பார்க்கவும்.
Dear Friend,
i use to do the cntl+A(select all images)right click,send to select mail recipient,select a medium option and pick attach,it will prepare the large size images to less size image,and in your out look express will open,a new mail message window will show all attached images,you can get clear pictures with very less sizes.
again cntl+A,cntl+c(copy)and cntl+A(paste)in new destination.try it.you take my word,its easy.
Thank you karthikeyan for your useful tips. I will try
விகடன் மூலமாக இன்றுதான் உங்கள் வலைக்குள் வர முடிந்தது. வாழ்த்துக்கள். எளிய தமிழில் சொல்கிற முயற்சி வெற்றி அடையும்.
பெரிய அளவு படங்களை மின் அஞ்சலில் அனுப்புவது மட்டுமே தேவை என்றால் இவ்வளவுகூட வேண்டாம். இணையத்தில் shrinkpic எனத் தேடிப் பார்த்து இறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். ஸிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்ளும். அதன்பின் உங்கள் வேலை மின் அஞ்சலில் இணைக்க படம் தேர்வு செய்து இணைப்பது மட்டும்தான். அசல் படத்தில் எந்த மாற்றமும் செய்யாது, படத்தை சுருக்கி இணைத்துவிடும் அதுவும் ஒரே நொடியில். 6 அல்லது 7 எம.பி. கோப்புகளை யான் அனுப்புகையில் அவை 100 கே.பிக்குள் சுருக்கப் பட்டு அனுப்பப் படுகின்றன. இது இலவசம்.
உங்களுடைய தொடர்ச்சியான பதிவுகள் மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளது. நன்றி.
போட்டோ எடிட்டிங் சம்பந்தமாக மேலும் தகவல்கள் தேவையாகவுள்ளது. முக்கிய நிகழ்ச்சிகளின் படங்களை ஒன்றிலே தொகுப்புக்களாக விரும்பிய கோணங்களில் விரும்பிய அளவுகளில் அதற்கு அழகான போடர்களை இடக்கூடிய வசதிகளைக் கொண்ட இலவச மென்பொருள் இருந்தால் அறியத் தரவும்.
Post a Comment