வோடாபோன் விளம்பரங்களில் 'வெள்ளான்களின்' அட்டகாசம்

புதிய வோடபோன் விளம்பரங்களில் வெள்ளான்கள் செய்யும் அட்டகாசங்கள் குறித்த பதிவு இது.

தொலைகாட்சி நிகழ்ச்சிகள் கவருகிறதோ இல்லையோ, இடையிடையே வருகிற விளம்பரங்கள் சில நம் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும். சொல்ல வருகிற விஷயத்தை ஹைக்கூ போன்று கிடைக்கின்ற 20 முதல் 30 வினாடிகளுக்குள் சொல்வது என்பது அரிய கலை. அதில் பலர் கை தேர்ந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் பெயர் நமக்கு தெரியாமல் போவது வருத்தமான விசயம்தான்.

நமக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் சிவாஜி முகம்தான் நினைவுக்கு வரும். அது போல் விளம்பரங்களில்
'வாசிங் பவுடர்' என்றால் 'வாஷிங் பவுடர் நிர்மா...' , நரசுஸ் காபி என்றால் "பேஷ் பேஷ்.... ரொம்ப நன்னா இருக்கு.." என்று உசிலைமணி முகமும் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாது மனதில் பதிந்து விட்டது. அது போன்று "Hutch" என்றால் அந்த குட்டி நாய் மனதில் தோன்றும். சில நேரம் விளம்பர இடைவெளிகளில் நாம் எதிர்பார்க்கும் விளம்பரங்கள் போட மாட்டார்களா என்று காத்திருப்பதும் உண்டு.

ஹட்ச் நிறுவனம் வோடோபோனுக்கு கைமாறிய போது அந்த நாய்க்கு என்ன ஆகுமோ என்று வருந்தியவர்களில் நானும் ஒருவன். அந்தவகையில் சமீபத்தில் என்னை கவந்துள்ளன புதிய வோடாபோன் விளம்பரங்கள். ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்களின் விளம்பர இடைவெளிகளில் அவற்றை கண்டேன். வெள்ளை நிறத்தில் புதிய அனிமேஷன் கதாபாத்திரத்தை கொண்டு வடிவமைத்து உள்ளார்கள். அந்த விளம்பரங்களில் மூன்று விளம்பரங்கள் என்னை மிக கவர்ந்தவை.

Beatuy Alerts என்று தன்னை அழகுபடுத்தி கொண்டு படுத்திருக்கும் குடும்ப தலைவனை கண்டு மனைவி, குழந்தைகள் அரண்டு ஓடும் விளம்பரம். ஓடும் போது அவற்றின் முகபாவமும், குரலும் குபீரென்று பார்த்து கொண்டிருந்த அனைவரையும் வாய் விட்டு சிரிக்க வைத்தது உண்மை.

Star of the Month என்ற விளம்பரத்தில் பல்லக்கை புல்லரிப்புடன் தூக்கி செல்லும் ஜீவன்களின் முகபாவங்கள் அருமை.

Cricket Alerts விளம்பரத்தில் "அடுத்தவனுக்கு இடுக்கண் வருங்கால் நகுக!!" என அவர்கள் சிரிக்கும் சிரிப்புகள் கலக்கல் நையாண்டி. அதிலும் கடைசியாக காலை உதைத்து கொண்டு சிரிக்கும் காட்சி அருமை.

இந்த அனிமேசன் கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் என்று இணையத்தில் தேடி பார்த்தேன். "Zoozoo Characters" என்கிறார்கள். பெயர் காரணம் என்னவென்று தெரியவில்லை. எனக்கு அந்த பெயர் பிடிக்கவில்லை. நமது தமிழில் ஒரு பெயர் வைக்கலாம் என்று "வெள்ளான்கள்" என்று பெயர் வைத்து விட்டேன். என்ன பெயர் நல்லா இருக்கா?

அந்த வீடியோக்களை Playlist ஆக தொகுத்து உள்ளேன்.



நீங்களும் பாருங்கள். உங்களுக்கும் பிடித்திருந்தால் புன்னகைத்து விட்டு செல்லுங்கள் :) . பிடிக்கவில்லை என்றால் என்ன கேவலமான ரசனைடா இவனுக்கு... என்று என்னை திட்டி தலையில் அடித்து விட்டு நடையை கட்டுங்க :(.

பிற்சேர்க்கை (4-5-2009)

இந்த வெள்ளான்கள் அனிமேசன் கதாபாத்திரங்கள் அல்ல மனிதர்கள் என தெரிவிக்கிறார்கள். மேலதிக விபரங்களுக்கு இந்த லின்க்கில் படிக்கவும்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

7 comments:

jeevaflora said...

so nice of u and ur taste too

Anonymous said...

Its not an animation

டிவிஎஸ்50 said...

@jeevaflora
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
அனானி நண்பரே....
அவை மனிதர்கள் என்பது தாமதமாக தெரிந்தது .... இறுதியில் அந்த வரியை நேற்றே சேர்த்து விட்டேன்

Tech Shankar said...

அடடே.. ஏன் இப்படி?

//என்ன கேவலமான ரசனைடா இவனுக்கு... என்று என்னை திட்டி தலையில் அடித்து விட்டு நடையை கட்டுங்க :(.

Read more: http://tvs50.blogspot.com/2009/04/vodofone-zoozoo-ad-ipl.html#ixzz0FIQJrYiF&B

டிவிஎஸ்50 said...

@தமிழ்நெஞ்சம்
அது ஒண்ணுமில்லை.... விளம்பரங்கள் வெளியான இரண்டாவது நாளில் இந்த இடுகை எழுதினேன். அனைவருக்கும் பிடிக்குமா என்ற சந்தேகம். அதான் அப்படி போட்டேன் :)

goma said...

நான் என்னை மறந்து சிரித்து மகிழும் விளம்பரம் இது.
அனிமேஷன் இல்லையென்று தெரிந்ததும் இன்னும் அதிகப்படியான சிரிப்பை அள்ளித் தெளிக்கிறது.

Unknown said...

this is very nice add to watch