பெர்லின் விலங்கியல் பூங்காவில் பனிக்கரடிகளால் தாக்கப்பட்ட பெண்மணி உண்மை சம்பவத்தின் வீடியோ வோடு கூடிய பதிவு இது.
சிலர் விலங்கியல் பூங்கா, சுற்றுலா செல்லும் போது கை கால்களை வைத்து கொண்டு சும்மா இருப்பதில்லை. தன் வீர தீர செயல்களை அப்போது தான் காட்டுவார்கள். விலங்குகளை நோண்டுவது, ஆபத்தான இடங்களில் ஏறி 'நாங்களும் ரவுடிதான்!' என்று காட்டுவர்.
மாப்பு! வச்சிட்டண்டா ஆப்பு!! என்பது போன்ற சம்பவம் 32 வயது அம்மணிக்கு பெர்லின் விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது. அம்மணி வீராவேசத்தை காண்பிக்க பனிக்கரடிகள் இருக்கும் குளத்தில் வரப்பின் மேலேறி குளத்தினுள் குதித்துள்ளார். பனிக்கரடிகள் சும்மா இருக்குமா? விளையாடுவதற்கு தான் எதையோ தூக்கி போடுகிறார்கள் என்றெண்ணி அம்மணியை கடித்து விளையாட ஆரம்பித்து விட்டன.
கதறிய அம்மணியை காப்பற்ற கயறு போட்டார்கள் பாதுகாவலர்கள். பாதி மேலே வந்த அம்மணி மீண்டும் நீரினுள் விழுந்து விட்டார். அப்போது ஒரு பனிகரடி அம்மணியின் பின்புறத்தையும் கால்களையும் பதம் பார்த்து விட்டது.
இறுதியில் ஒருவழியாக அம்மணியை காப்பாற்றிவிட்டார்கள். அம்மணி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிகபட்டுள்ளார். பனிக்கரடிகள் அய்யோ வடை போச்சே... என்று வருத்தத்தில் இருக்கின்றன.
வீடியோ
மகிழ்ச்சிக்காக செல்லும் இடங்களில் இது போன்ற அசட்டு தனங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லைன்னா அம்மணி மாதிரி உடம்ப புண்ணாக்கிக்க வேண்டியதுதான்.
7 comments:
idhu thaevaiyyaa ammanee
help ku varavanga easya kappatra koodiya alavuku "slim" ha vavathu erukanum athuvum ella apparam thevaiya entha ammanikku.....
பெயரின்றி பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி
ha ha comedy than nalla padam
நண்பரே, உங்க பதிவுக்கு வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
தென் சென்னை இளைஞர் எம்பி 29 வயது சரத்பாபுவுக்கு வாக்களிங்கள்.
http://sureshstories.blogspot.com/2009/04/29.html
காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html
பனிக்கரடி கிட்ட பகடி பண்ணியிருப்பாங்களோ.....
brother plz help me am used sample template like u used plz help me to remove banner area in the topthat 468*60
@ஆனந்தன்
Layout --> Edit HTML பகுதிக்கு செல்லவும். அங்கு google_ad என்று தேடவும். சம்பந்தப்பட்ட Ad Code இருக்கும். அதனை நீக்கி விடுங்கள். பின்பு SAVE TEMPLATE செய்து விடுங்கள்.
Post a Comment