Microsoft Frontpage -இன் புதிய வடிவமான Microsoft Sharepoint Designer 2007 இலவசமாக பெறுவது தொடர்பான பதிவு இது.
இணைய பக்கங்களை வடிவமைப்பதற்கு Microsoft Frontpage உபயோகித்து பார்த்திராதவர்கள் மிக குறைவாகவே இருப்பர். மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 வெளியீட்டின் போது அதனை Frontpage ஐ மேம்படுத்தி Sharepoint Designer 2007 என்று வெளியிட்டார்கள். அது ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இருநூறு டாலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. இப்போது Microsoft Sharepoint 2007 இலவசமாக மைக்ரோசாப்ட் வழங்குகிறது. நல்ல விஷயம்தான்.
அதனை தரவிறக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். தோன்றுகின்ற பக்கத்தில் "Registration Required for This Download" என்று உங்களை பதிவு செய்ய சொல்லும்.
பதிவு செய்து கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஆகலாம். நீங்கள் அளிக்கும் மின்னஞ்சல் முவரிக்கு Verfication மின்னஞ்சல் அனுப்புவார்கள். அந்த மின்னஞ்சலில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து சென்றால் நீங்கள் தரவிறக்கம் செய்வதற்கான பக்கம் தோன்றும்.
தரவிறக்கம் செய்து கொள்ளவும். தரவிறக்கம் செய்த கோப்பு SharePointDesigner.exe என்ற பெயரில் 295.89 MB என்ற அளவில் இருக்கும். அதனை இன்ஸ்டால் செய்து உபயோகப்படுத்தி பாருங்கள்.
இந்த மென்பொருள் இணைய வடிவமைப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். Microsoft Sharepoint குழுவினருக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.
6 comments:
இந்த டிசைனர் டூல் மட்டும்தான் இலவசம்.
மற்றபடி ஷேர்பாய்ண்டிற்கான சர்வர் - அதை கமர்சியலாக காசுகொடுத்து வாங்க வேண்டும்.
தகவலுக்கு நன்றி தல.
@தமிழ்நெஞ்சம்
ஷேர்பாயிண்ட் எனக்கு புதிது தான். நேற்று தான் தரவிறக்கினேன். உபயோகப்படுத்தி பார்க்க வேண்டும். உங்கள் கருத்துரைக்கு நன்றி .
மன்னிக்கவும். தலைப்பில் 'டிசைனர்' என்ற வார்த்தையை சேர்க்காமல் விட்டு விட்டேன். திருத்தி விட்டேன்.
நன்றி தல. நான் ஒரு வழியாகப் பல டெம்ப்ளேட்டுகளை அப்ளை பண்ணி பார்த்து வெறுத்துப்போகி - இப்போ இதை வைச்சுருக்கேன்
பார்த்துக் கருத்துச் சொலவும்.
http://www.tamilnenjam.org
http://amazingphotos4all.blogspot.com
http://sfintamil.blogspot.com
எல்லாத்துக்கும் ஒரே டெம்ப்ளேட் போட்டுருக்கேன்.
இன்னும் என்ன சேஞ்சஸ் செய்யலாம்னு ஒரு ஐடியா கொடுங்க தல.
@தமிழ்நெஞ்சம்
நண்பரே... உங்கள் டெம்ப்ளட் நன்றாக உள்ளது.
இந்த டெம்ப்ளட் வேலைகளில் எனக்கொன்றும் மிகப்பெரிய அனுபவம் கிடையாது. எனக்கு தெரிந்த சில யோசனைகளை தருகிறேன்.
உங்கள் டெம்ப்ளட் Header picture மிகவும் பெரிதாக உள்ளது. சிறிதாக்கினால் நன்றாக இருக்கும்.
ஆங்கில டெம்ப்ளட் களை தமிழ் வலைப்பூக்களுக்கு உபயோகிக்கும் போது எழுத்துரு அளவு சரியாயாக வருவதில்லை. நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுத்துரு அளவை மாற்றி கொள்ளுங்கள்.
content எழுத்துரு அளவை 12 க்கு மாற்றுங்கள். Post Title எழுத்துரு அளவை இன்னும் கொஞ்சம் பெரிதாக்குங்கள்.
Side Bar மிகவும் அகலமாக உள்ள டெம்ப்ளட் களை உபயோகிப்பது எனக்கு பிடிக்கும். அங்கு நமக்கு தேவையான தகவல்களை வரிகள் உடையாமல் போட முடியும்.
நான் இங்கு இட்டுள்ள 'அண்மைய பதிவகள்' போன்று ஐந்துக்கு மேற்பட்ட பதிவு தலைப்புகளை Feedburner -இல் உள்ள Buzzpost என்ற சேவையை உபயோகிக்கலாம்.
http://www.bloganol.com/2008/09/blogger-templates-page.html இந்த பக்கத்தில் உள்ள அனைத்து டெம்ப்ளட் களும் என்னை கவர்ந்தவை. அதில் உள்ள Revolution Church என்ற டெம்ப்ளட் தான் பல மாறுதல்களுடன் உபயோகித்து வருகிறேன்.
நீங்களும் ஏதேனும் ஒரு டெம்ப்ளட் எடுத்து முயன்று பார்க்கவும். வண்ணம், எழுத்துரு அளவுகளை மாற்றி உங்களுக்க ஏற்றார் போல வடிவமைத்து கொள்ளுங்கள்.
வண்ணம் தேர்வு செய்வது பற்றி குழப்பமாக இருதால், deisgn இல் உங்களை மிகவும் கவந்த ஏதனும் ஒரு தளத்தை தேர்ந்தெடுத்து அதிl உள்ள வண்ணக் கலவை களை உங்கள் பிளாக்கில் செயல் படுத்தி பாருங்கள் . நமது இசை அமைப்பாளர்கள் ஆங்கில பாடல்களை உருவுகிரார்கள அல்லவா? அது மாதிரிதான்.
இதை விட முக்கிய குறிப்பாக நான் கருதுவது, பதிவுகள் இடும் போது அதிக படங்களை ஒழுங்குபடுத்தி இடுங்கள் . அவை படிப்பவர்களுக்கு எளிய வாசிப்பை தருவதோடு, உங்கள் பிளாக்கை மேலும் அழகுபடுத்தும்.
தற்போதைக்கு இவ்வளவுதான் தோன்றியது.
நீங்க இரண்டு நாளைக்கு முன்னாடி, என் டெம்ப்ளட் நல்லா இருக்குன்னு பாராட்டிடீங்க... ஒரே குஷியா போச்சு. நேத்து நைட் ஆறு மணி நேரத்திற்கு மேல் செலவழித்து டெம்ப்ளட் டை நோண்டினேன். :) ... அளவுக்கு அதிகமானதால் இது ஒரு வியாதி மாத்ரி ஆகிடும் போல இருக்கு.
நல்ல நீண்ட விளக்கம். நன்றி தலைவா
Post a Comment