எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்

இணையத்தில் தமிழில் டைப் செய்வது என்பது இன்னும் முழுமை பெறாத விசயமாகவே இருக்கிறது. பெரும்பான்மையான வலைப்பதிவர்கள் NHM Writer உபயோகித்து தமிழில் டைப் செய்து வருகிறார்கள். NHM Writer உபயோகித்து எங்கு வேண்டுமானாலும் தமிழில் டைப் செய்யலாம்.

எளிமை காரணமாக அதிகமானோர் Google Transliteration மூலம் தமிழில் டைப் செய்து காப்பி செய்து வேண்டுமென்ற இடத்தில் பேஸ்ட் செய்வார்கள். பின்னூட்டம் இடும் போதோ, சாட் (Chat) செய்யும் போதோ இப்படி காப்பி பேஸ்ட் செய்வது கடின வேலையாக இருக்கும். தட்ஸ்தமிழ், தமிழிஷ், நக்கீரன் போன்ற தளங்கள் தங்கள் பின்னூட்ட பெட்டியில் Google Transileration ஒருங்கிணைத்து உள்ளார்கள். அங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நேரடியாக அங்கே தமிழில் நம் கருத்துகளை வெளிப்படுத்தலாம்.

ஆனால் பிளாக்கர், வோர்ட்பிரஸ் வலைப்பூக்கள், தினமலர், ஜிமெயில் சாட்டிங் போன்ற தளங்களில் நேரடியா தமிழில் டைப் செய்ய இயலாது. எனது இந்த பிளாக்கின் "தேடுங்கள்" பகுதியில் கூட நீங்கள் தமிழில் நேரடியாக டைப் செய்து தேட முடியாது. இது போன்ற தருணங்களில் வேறு எங்காவது தமிழில் டைப் செய்து பேஸ்ட் செய்ய வேண்டி இருக்கும்.

இந்த சிக்கலை போக்க Google எந்த தளத்திலும் தமிழில் டைப் செய்வதற்காக ஒரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஒரு சிறிய ஜாவாஸ்கிரிப்ட் நிரலை உங்கள் இணைய உலாவியின் Bookmark டூல்பாரிலோ, Favorites லோ இணைத்து கொள்ள வேண்டும். வேண்டுமென்ற போது அதனை கிளிக் செய்து எல்லா இணையத்தளங்களிலும் தமிழில் டைப் செய்யலாம்.



இத்தனை எப்படி நிறுவது என்பதை பற்றி அறிய கூகுளின் இந்த உதவி பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கே படங்களுடன் மிகவும் எளிமையாக விளக்கி உள்ளார்கள். பெரும்பாலான இணைய உலாவிகளில் எப்படி நிறுவுவது என்பது பற்றிய விளக்கம் அங்கு உண்டு.


அதனை நிறுவி கொள்ளுங்கள். நீங்கள் ஒரு இணைய பக்கத்தில் இருக்கும் போது அங்கு தமிழில் டைப் செய்ய விரும்பினால் நீங்கள் நிறுவிய [அ Type in Tamil] பட்டையை கிளிக் செய்து Transliteration Enable செய்து கொள்ளுங்கள். வேண்டுமென்ற இடங்களில் தமிழில் டைப் செய்து கலக்குங்கள். இனிமேல் நீங்கள் கூகிள் ஜிமெயில் சாட்டிங்கில் தமிழில் அடுத்தவருடன் எளிதாக தமிழில் டைப் செய்து உரையாடலாம்.

குறிப்பு : இந்த முறை பிளாக்கர் இடுகைகளுக்கு கீழே இடம் பெறும் பின்னூட்ட பெட்டிகளில் வேலை செய்வதில்லை. தனிப்பக்கத்தில் திறக்கும் பின்னூட்ட பக்கங்களில் வேலை செய்கிறது.

இந்த வசதி குறித்து பதிவர் பொன்மலர் எழுதிய இந்த இடுகையையும் பாருங்கள் .

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

20 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள இடுகை
nhm போல எளிமையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
கூகுளில் தமிங்கில முறைதான் உள்ளது.
தமிழ்த் தட்டச்சு தெரிந்தவர்கள் இந்த முறையை விரைவாகப் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.ஏனென்றால் தமிழ்த்தட்டச்சு தெரிந்தவர்கள் சிலருக்கு தமிங்கில முறை கடினமாகவே உள்ளது.

Raju said...

உபயூகமான தகவலுக்கு நன்றி..
நீங்கள் சொன்ன முறையில்தான்
ippo பின்னூட்டம் இடுகின்றீன்.

dsfs said...

see it also

http://ponmalars.blogspot.com/2009/05/blog-post_29.html

Karthik said...

பிளாக்கர் இனி comment section இலும் தமிழை தந்தால் நன்றாக இருக்கும்.

RAMANAN NATARAJAN said...

ROMBA INTERESTING ERUKKU INDA BLOG USE PANNA.KATTAYAM AENODA PHOTOS DEVAIYA?NAMMA INDIA NALLA MENURIGONDUTHAN IRRUKU,BUT YOUNG GENERATIONS MORALITY VERY VERY POOR.AVANGA YOGA,SPORTS,MILITARY DISCIPLINE KATHUKANNUM COMPULSORY-RAMANAN

Suresh Kumar said...

நல்ல தகவல் இனி வெட்டி ஓட்ட வேண்டிய அவசியமில்லை

dsfs said...

நல்ல விரிவாட இடுகை பொன்மலர். உங்கள் இந்த இடுகைக்கு என் இடுகையில் இருந்து லிங்க் கொடுத்து உள்ளேன். தொடரட்டும் உங்கள் பணி.

-- thanks --

வெற்றி-[க்]-கதிரவன் said...

நன்றி மக்கா

அன்புடன் அருணா said...

இவ்வ்ளோ கஷ்டப் படத் தேவையே இல்லை..அழகியை டௌன்லோட் ஒருதடவை செய்து வைத்துக் கொண்டால் ஜஸ்ட் ஒரு பட்டன் க்ளிக்கில் (F10)எங்கே வேண்டுமானாலும் தமிழ் டைப் அடிக்கலாமே!!! டௌன்லோட் இலவசம்!!!!
visit: www.azhagi.com/

அன்புடன் அருணா said...

// எனது இந்த பிளாக்கின் "தேடுங்கள்" பகுதியில் கூட நீங்கள் தமிழில் நேரடியாக டைப் செய்து தேட முடியாது. //


Well, you can try typing in the 'தேடுங்கள்' box using Azhagi and you will get it in Tamil. I am able to type using Azhagi and more importantly Azhagi is 100% free .Using Azhagi one can type directly in ALL Windows applications and also make use of unique and very useful tools like 'Reverse Transliterator', 'Auto Transliterator' etc. for more details visit:
http://tamilsoftwares.blogspot.com

கிரி said...

முயற்சித்து பார்க்கிறேன்

VISARA said...

ரொம்ப நல்ல முயற்சி திரு டிவீஎஸ் ...பீ கே பி இன அடுத்த வாரிசாக வளர்கிறீர்கள் ..வாழ்த்துக்கள் .எனக்கு என்னைப்போன்றவர்களுக்கு கணினி சம்பத்தப்பட்ட தகவல்களை தந்து எங்களையும் வளர்த்தி நீங்களும் வளர வாழ்த்துக்கள்

டிவிஎஸ்50 said...

அன்புடன் அருணா நீங்கள் கூறி உள்ளது புதிய தகவல். உபயோகித்து பார்க்கிறேன் . மிக்க நன்றி.

டிவிஎஸ்50 said...

@கார்த்திக்

நீங்கள் கூறி உள்ள படி ப்ளாக்கரே அந்த வசதியை அளித்தால் மிக நல்லது.

டிவிஎஸ்50 said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

Joe said...

நல்ல உபயோகமான பதிவு.

குணசீலன் சொல்வது தமிழில் தட்டச்சு கற்றவர்களுக்கு மட்டுமே பயன்படும். என்னைப் போன்றவர்களுக்கு இந்த முறையே எளிதாக இருக்கிறது.

NHM பயன்படுத்தும்போது எனக்கு நிறைய எழுத்துப் பிழைகள் வருகின்றன.

இரண்டாவது தமிழில் தட்டச்சு கற்றவர்கள் மிகக் குறைவு. தமிழை கற்றவர்களே குறைந்து கொண்டிருக்கும் காலத்தில் ....

Sankar Navaneetha Krishnan said...

ரொம்ப அசத்தலான கட்டுரை நண்பரே..!
இவ்வளவு நேர்த்தியான ஒரு டெக்னிகல் பகுதி... அதுவும் நம்ம தமிழ்ல...
நெறைய விஷயங்கள்...
தொடர்க...

ஒரு சின்ன வேண்டுகோள்,
தயவு செய்து சினிமா சம்பந்தமான விசயங்களை தவிர்க்கலாமே..

Asalamsmt said...

இந்த கருத்தும் nhm மூலம்தான் டைப் அடித்து அனுப்பி உள்ளேன்.

Anonymous said...

தமிழ்99 விசைப்பலகை முறையில் தட்டச்சிட http://wk.w3tamil.com இனை பயன்படுத்தலாம்.

Anonymous said...

நன்றி அன்பரே ...