புதிய வசதிகளுடன் கூகுளின் தமிழ் எழுதி

இணையத்தில் தமிழை உபயோகப்படுத்துவோர் பெரும்பாலும் கூகிள் தமிழ் எழுதியை பயன்படுத்தி பார்த்து இருப்பீர்கள். இதன் சிறப்பம்சம், நீங்கள் தமிழில் டைப் செய்து கொண்டிருக்கும் போது தவறாக டைப் செய்தால் சரியான தேர்வுகளை தானாகவே தரும். பிளாக்கரிலும் இடுகை எடிட்டரில் கூகிள் தமிழ் எழுதி ஒருங்கிணைக்க பட்டு உள்ளது.

இணையத்தில் இதனை உபயோகிக்க நீங்கள் இந்த சுட்டிக்கு செல்ல வேண்டும். முன்பு குறைந்தபட்ச வசதிகளுடன் இருந்த இந்த பக்கத்தை தற்போது அதிக வசதிகளுடன் மேம்படுத்தி உள்ளார்கள்.

1. இப்போது வேறு எந்த வோர்ட் பிராசசர் உதவி இல்லாமல், கூகிள் தமிழ் எழுதி மூலம் உங்கள் ஆக்கங்களை வடிவமைத்து கொள்ள முடியும். அதற்கென எழுத்துக்களை பெரிதாகும் வசதி, போல்ட், இட்டாலிக், அண்டர்லைன், அலைன்மென்ட் உள்ளிட்ட பல வசதிகள் அறிமுகப்படுத்த பட்டு உள்ளன.


2. இணைய பக்கங்களுக்கு சுட்டி கொடுக்கும் வசதி, HTML ஆக எடிட் செய்யும் வசதி உள்ளிட்டவற்றால் ஒரு முழு இணைய பக்கத்தையே அங்கே வடிவமைத்து கொள்ள முடியும்.

3. மற்றுமொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம், கூகிள் மொழி மாற்றி (Dictionary) இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. ஆங்கில வார்த்தைகளை தமிழாகவோ, தமிழ் வார்த்தைகளை ஆங்கிலமாகவோ மொழி மாற்றம் செய்து கொள்ள முடிகிறது.



4. அச்செடுக்கும் வசதி மூலம் நீங்கள் டைப் செய்த பக்கங்களை பிரிண்ட் எடுத்து கொள்ள முடியும்.

கூகிள் நம் மொழி சம்பந்தமான புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து அக்கறை காட்டி வருவது இணையத்தில் தமிழ் வளர மேன்மேலும் உதவும். கூகுளுக்கு நன்றி.

ஏற்கனவே எழுதிய எல்லா இணையதளங்களிலும் தமிழில் டைப் செய்வது எப்படி? என்ற இடுகையையும் படித்து பாருங்கள். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

3 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பகிர்வு நண்பரே..

Me said...

எமது கருத்து உம சுட்டியிலிருந்து !!! நன்றி நண்பரே !!

Muruganandan M.K. said...

தகவலுக்கு நன்றி. பயனுள்ள பதிவு.