மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.

முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.

புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

இது எனக்கு எவ்வித தடை இன்றி வேலை செய்தது. வேறேதும் வழிமுறைகள் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.

எனது இந்த பிளாக்கை நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து கீழ்க்கண்ட முகவரிகளில் எளிதாக வாசிக்கலாம்.

http://bit.ly/tvs50 OR http://www.google.com/reader/m/view/feed/http://feeds2.feedburner.com/tvs50 OR http://feeds2.feedburner.com/tvs50 OR http://tamilnutpam.mofuse.mobi/

உபயோகித்து பாருங்கள். குறைகள் ஏதேனும் இருந்தால் சுட்டி காட்டுங்கள். என்னை திருத்திக்கொள்ள உதவியாய் இருக்கும்.

நன்றி : டாக்டர். புருனோ, மின்னுது மின்னல் , hot50cool50

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

32 comments:

மின்னுது மின்னல் said...

thanks !!

chatty said...

அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும்

Please change opern:config
to opera:config

Anyway thanks.

டிவிஎஸ்50 said...

தவறை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி chatty. மாற்றி விட்டேன்.

கடைக்குட்டி said...

ரொம்ப நாளா கேக்கனும்னு நெனச்சது..

கலக்குங்க.. :-)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

Thanks.

thiruthiru said...

நன்றி. ரொம்ப உபயோகமான தகவல். எனக்கு வரும் மெயில்களில் பாதிக்கும் மேல் தமிழில். இனி நான் போகிறபோக்கில் எங்கேயும் எப்போதும் மொபைலில் தமிழ் படிக்க வசதிக்கான வழி காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி. சாதாரண மனிதன் அதனால் உடனே அடுத்த பேராசை. மொபைலில் தமிழில் உள்ளீடு செய்ய வழி உண்டோ?

டிவிஎஸ்50 said...

பினூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

@thiruthiru
//சாதாரண மனிதன் அதனால் உடனே அடுத்த பேராசை. மொபைலில் தமிழில் உள்ளீடு செய்ய வழி உண்டோ?//

மனிதனின் பேராசைகள்தான் மாபெரும் கண்டுபிடிப்புகள் உருவாக காரணமாக இருந்துள்ளது :)

எனக்கு தெரிந்து செல்லிடபேசியில் தமிழில் உள்ளீடு செய்ய மென்பொருள் இல்லை. தெரிய வந்தால் கண்டிப்பாக எழுதுகிறேன்

Anonymous said...

thank you dear

தமிழ்நெஞ்சம் said...

thanks buddy.
இஸ்மாயில் கனி was commenting in my blog about Tamil fonts in N95.

I gave this link in my comment for him.

Thanks dear buddy.


// புதுப்பாலம் said...

நோக்கியா மொபைல் போன் N95 8gb யில் இணைய உலாவி மூலம் தமிழ் (யுனிகோடு) பக்கங்கள் (செய்தி தாள், பிளாக், ஈமெயில்) எல்லாம் திறந்தால் எழுத்துக்கள் எல்லாம் கட்டம் கட்டமாக காட்சி தருகிறது. தமிழ் எழுத்துக்கள் சரி வர தெரிய செய்ய அதில் நிறுவதற்கு software ஏதும் கிடைக்கிறதா. அறிய தரவும்

அன்புடன்
இஸ்மாயில் கனி

June 14, 2009 5:57 AM

Karthik said...

Waiting for a long time for this solution. Thanks a lot

Anonymous said...

Can this be installed to an Iphone 3G?

டிவிஎஸ்50 said...

Can this be installed to an Iphone 3G?

நான் ஐபோன் உபயோகித்து பார்த்ததில்லை. ஆனால் நான் பதிவில் கூறி உள்ள வழி முறைகள் இணைய உலாவி பற்றியதுதான்.

ஒபேரா மினி அனைத்து மொபைல் களுக்கும் ஏற்ற்றதாக வடிவமைக்க பட்டு உள்ளது . எனவே இது ஐபோன்னிலும் வேலை செய்யும் என்று நம்புகிறேன்.

Anonymous said...

thanks friend yesterday i read ur articale immediatly i download opera mini to mobile and changed setting its surprise showing tamil website through my sony mobile ,how long i am feeling unable to see my mother language throuh mobile now its solve iam so happy

புதுப்பாலம் said...

நான் எனது மொபைலில் (N95 8gb)opera mini இன்ஸ்டால் செய்து, அதை திறந்து அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுத்தால்

"Error
Invalid address opera:config"

என்கிற message வருகிறது.

is any other setting required? pls. explain.

அன்புடன்
இஸ்மாயில் கனி

டிவிஎஸ்50 said...

தமிழ்நெஞ்சம் மிக்க நன்றி.

டிவிஎஸ்50 said...

@புதுப்பாலம்

வேறேதும் மாற்ற வேண்டியதில்லை.

Opera Mini யை நீக்கி விட்டு மீண்டும் நிறுவவும். மொபைலை Restart செய்து கொள்ளவும்.

இப்போது மீண்டும் Opera Mini திறந்து opera:config கொடுத்து பார்க்கவும்.

தமிழ் பிரியன் said...

எனது N70 செல் பேசியில் அழகாக தமிழ் எழுத்துக்கள் தெரிகின்றன.. மிக்க நன்றி நண்பரே!

ஆனந்த் சதீஷ் said...

மிக்க நன்றி நண்பரே, இதற்கு பல நாட்கள் இணையத்தில் உதவி தேடிக்கொண்டு இருந்தேன்.

புதுப்பாலம் said...

Check this another mobile web-browser.Just download and install.
Tamil webpages, you tube, mails etc are shown very nicely. No special setup is required to view tamil pages.

Link:
http://get.skyfire.com/

regards
Ismail Kani

அக்னி said...

மிக்க நன்றி...

Anonymous said...

பாஸ் ரொம்ம நன்றி. சூப்பர் எங்கிருந்துப்பா! இது எல்லாம் எடுக்கிற முடியல

டிவிஎஸ்50 said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. முகப்பில் இணைப்பு கொடுத்து அதிக பார்வையாளர்களை அனுப்பிய Tamilnaatham இணையதளத்திற்கு நன்றி

மதுவதனன் மௌ. said...

மிக மிக மிக மிக நன்றி... நான் இப்படி நன்றி சொல்லவேண்டிய கட்டாயம் உளது. தமிழ் எழுத்துக்களை வாசிக்க பயன்படும் மொபைல் உலாவியான ஸ்கைபயர் இன்னும் எனது நோக்கியா 5800 இற்கு வரவில்லையே என கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.

ஆனால் இப்போது எனக்கு அது தேவையே இல்லை. ஒபேரா மினியில் மிகத்தெளிவாகத் தெரிகின்றது.

நன்றி டிவிஎஸ்.

mariselvam said...

ippo opera mini use pannaama directta mobile address paril ethavathu tamil address type pannuna? tamil la open aguma? athukku ethavathu irukka?

Iqbal said...

இந்த இணைய தளத்தில் மிகவும் பயனுள்ள விஷயங்கள் இருக்கின்றன. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி
இக்பால்

யாழ்.பாஸ்கரன் said...

சைனா மொபைலில்[M.REN] தமிழ் எழுத்துகளை படிக்க [தமிழ் sms] opera min யை எவ்வாறு Data Cable install செய்வது விளக்கி உதவுங்கள்.

Anonymous said...

I am using nokia 3110c.
i am use opera mini4.2 ,some time this is not work at a same time error message "application access set to not allowed" next restart mobile again again then next switched off.
where is solved this problem
pls help me
my E-mail ID:msujavudeen@ymail.com

Thameem said...

Could you please explain how to install the tamil font in NOKIA5800

senthilnagu said...

ரொம்ப நல்லயிருக்கு, ரொம்ப நன்றி

senthilnagu said...

ரொம்ப நல்லாயிருக்குது,ரொம்ப நன்றி.

suvaiyaana suvai said...

how to watch in tamil movie in i-phone

Seenivasan said...

மிக நன்றி அண்ணா. எனக்கு மிகவும் உபயோகமான தகவல் . எல்லோருக்கும் பயன்படும் என நான் நம்புகிறேன் .