விண்டோஸ் எக்ஸ்பியிலும் ஊட்டமான தமிழ் எழுத்துக்கள்

தமிழ் இணையதளங்களை இணைய உலாவியில் பார்வையிடும் போது இயங்குதளத்தை பொறுத்து வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்து இருக்கலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் ஏழில் தமிழ் பக்கங்கள் தெளிவாக அழுத்தமாக இருக்கும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்பியில் தமிழ் இணைய தளங்களை காணும் போது அவை தெளிவற்று ஒல்லி குச்சி போன்று தெரியும்.

விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் ஏழு என்று அடுத்தடுத்து புதிய இயங்குதளங்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டு இருந்தாலும் விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் வெற்றிகரமாக இயங்குதளமாகவே திகழ்ந்து வருகிறது.

புதிய இயங்குதளங்களுக்கு மாறமால் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகித்து வருபவர்கள் அதிகம்.
விண்டோஸ் எக்ஸ்பியில் தமிழ் எழுத்துக்கள் 

விண்டோஸ் எக்ஸ்பியை ஒப்பிடும் போது விண்டோஸ் விஸ்டா மற்றும் ஏழில் தமிழ் இணையதளங்களை வாசிப்பது புத்துணர்ச்சியை தரும். விண்டோஸ் எக்ஸ்பியிலும் தமிழ் எழுத்துகளை நன்றாக தோன்ற வைப்பது எப்படி என்று பல முறை முயன்று வெற்றி பெற வில்லை. தமிழ் தொழிநுட்ப வலைப்பதிவுகளில் உலவி கொண்டு இருந்த போது இதற்கு தீர்வாக பதிவர் சூர்யாகண்ணன் எழுதி இருந்த இடுகை கண்ணில் பட்டது. அவர் கொடுத்து இருந்த டிப்ஸ் நன்றாகவே வேலை செய்கிறது.

விண்டோஸ் விஸ்டா, ஏழில் தமிழ் எழுத்துக்கள் 

விண்டோஸ் எக்ஸ்பியில் நல்ல 'ஊட்டமான' தமிழ் எழுத்துருக்களை பெற மைக்ரோசாப்டின் ClearType Tuner என்ற பவர் டாய் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி கொண்டால் போதுமானது. அதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லவும். நிறுவிய பின் உங்கள் கணினியின் கண்ட்ரோல் பேனலில் புதிதாக ClearType Tuning என்று ஒரு ஐகான் தோன்றி இருக்கும். அதனை திறந்து கொள்ளுங்கள்


அதில் Turn On Clear Type என்பதனை தேர்வு செய்து கொண்டு Ok கொடுத்து கொள்ளுங்கள். இனி விண்டோஸ் எக்ஸ்பியில் தமிழ் தளங்களின் எழுத்துகள் விண்டோஸ் விஸ்டா மற்றும் ஏழில் தோன்றுவது போல் தெளிவாக ஊட்டமாக தோன்றும். Start Wizard மூலம் நீங்கள் விரும்புவது போன்று எழுத்துகளின் தோற்றத்தை நீங்கள் மெருகேற்றி கொள்ள முடியும்.


இது சிறிய டிப்ஸாக இருந்தாலும் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ் இணைய தளங்களை வாசிப்பது என்றால் விண்டோஸ் ஏழுக்கு மாறி கொண்டிருந்த நான், இனி விண்டோஸ் எக்ஸ்பியிலும் சோர்வின்றி வாசித்து கொள்ள போகின்றேன்.

நன்றி : சூர்யாகண்ணன்



தொடர்புடைய இடுகைகள்

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

4 comments:

Unknown said...

தமிழ் இனி மெல்ல சாகாது

நல்ல தகவல்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

கிரி said...

//இது சிறிய டிப்ஸாக இருந்தாலும் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு//

கண்டிப்பா..

இது முன்பு எனக்கு பெரிய தொல்லையாக இருந்தது..உங்களிடம் முன்பு இது பற்றி கேட்டு இருந்தேன்..பின் சரி செய்து விட்டேன்.

Pragash said...

இந்த பதிவு தொடர்பில் சூர்யா கண்ணன் பதிவையும் படித்துவிட்டு உடனடியாகவே குறிப்பிட்ட மென்பொருளை தரவிறக்கி நிறுவிவிட்டேன். இப்பொழுது எழுத்துக்கள் அழுத்தமாகவும் அசத்தலாகவும் இருக்கின்றது. நன்றி டிவிஎஸ்


அ.பிரகாஷ்