Rapidshare, Zshare, Megaupload, DepositFiles , DivShare உள்ளிட்ட தரவிறக்க தளங்களில் பல கிளிக்குகளை தவிர்த்து பக்கங்களை தாண்டி நேரடியாக தரவிறக்க லிங்க் பெறுவது எப்படி என்பதை விளக்கும் பதிவு இது .
இணையதள பாவனையாளர்கள் மத்தியில் தரவிறக்க தளங்கள் மிக பிரபலமாக உள்ளன. சினிமா, மென்பொருள் உள்ளிட்ட எந்தவகையான கோப்பு என்றாலும் அவற்றில் ஏற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதே அவற்றின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இவற்றில் Rapidshare, Zshare, Megaupload, DepositFiles , DivShare போன்றவை முக்கியமானவை. இந்த தளங்கள் கட்டுப்படுத்தப்பட்ட இலவச சேவையையும், பல மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் கட்டண சேவைகளையும் அளிக்கின்றன.
இலவச சேவையை உபயோகிப்போருக்கு பல எரிச்சலூட்டும் விஷயங்கள் அந்த தளங்களில் இருக்கும். பல கேள்விகள் கேட்டு பல கிளிக்க்குகள் மூலம் விளம்பரங்கள் தெரிய செய்வதற்காக அதிக பக்கங்களை திறப்பார்கள். இறுதியில் Coutdown மூலம் தரவிறக்க லிங்க் பெறுவதற்கு குறைந்தபட்சம் முப்பது வினாடிகளாவது காத்திருக்க வேண்டி இருக்கும். அந்த வினாடிகள் ஓடும் போது வேறு வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வேறு பக்கங்களை பார்த்து கொண்டிருப்போம். மறந்து சில நிமிடங்கள் தாமதித்தால் "Download Link Expired" என்று பிழை செய்தியும் தோன்றும். தரவிறக்கும் ஆசையே போய் தளத்தை மூடிவிட்டு வந்து விடுவோம்.
விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறவும், எரிச்சலடைபவர்களை கட்டண சேவைக்கு மாற்றவும் இந்த உத்திகளை செய்கிறார்கள்.
இந்த இம்சைகளில் இருந்து விடுபட Skipscreen என்ற பயர்பாக்ஸ் நீட்சி (Extension) உதவுகிறது. இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த நீட்சியை தரவிறக்கம் செய்து உங்கள் பயர்பாக்ஸ் இணைய உலாவியில் நிறுவி கொள்ளுங்கள். இனி உங்கள் தரவிர்றக்க லிங்க்குகளை பயர்பாக்சில் திறங்கள். நீங்கள் மேற்கொண்டு எந்தவித கிளிக்குகளும் செய்யாமல் இந்த Skipscreen பயர்பாக்ஸ் நீட்சியானது உங்கள் தரவிறக்க லிங்க்கை கொண்டுவந்து தந்து விடும்.
இதுபற்றி மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் இந்த வீடியோவை பார்க்கவும்.
குறிப்பு : அடுத்தடுத்த தரவிறக்கங்களுக்கு இடையில் சில மணிநேரங்கள் கால இடைவெளி கட்டுபாடுகளை சில தரவிறக்க தளங்கள் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து தப்பிக்க / தவிர்க்க இந்த நீட்சி உதவாது.
7 comments:
உங்கள் கணினியின் இணைய இணைப்பானது dynamic IP வகையைச் சேர்ந்ததாக இருந்தால் ஒரு முறை ரூட்டர் / மோடம் - இந்தக் கருவியை அணைத்துவிட்டு, உங்கள் உலவியின் குக்கீஸை நீக்கிவிட்டு மீண்டும் ரூட்டர் - மோடம் கருவையை ON செய்தால் - கணினிக்கு வேறு ஒரு மாற்று IP கிடைக்கும். அதன் மூலம் நேரக்கட்டுப்பாட்டைத் தகர்க்கலாம்.
ஆனால் Static IP ஆக இருப்பின் TVS50 கூறியதை வழிமொழிகிறேன்.
@தமிழ்நெஞ்சம்
நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டிருகிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் பதிவில் கூறி உள்ள வழிமுறை அடுத்தடுத்த தரவிறக்கங்களுக்கு இடையில் சில மணிநேரங்கள் கால இடைவெளி பிரச்சினைக்கான தீர்வு இல்லை. இலவச முறை மூலம் செய்யும் போது பல பக்கங்களை கடக்க வேண்டி இருக்கும். அதனை தவிர்ப்பதற்கான வழிமுறை. அடுத்தடுத்த தரவிறக்கங்களுக்கு இடையில் சில மணிநேரங்கள் கால இடைவெளி பிரச்சினைக்கு உங்கள் வழிமுறை மிகச்சிறந்த தீர்வு. பகிர்தலுக்கு மிக்க நன்றி
அந்தப் பின்னூட்டம் உங்கள் பதிவின் கீழே உள்ள குறிப்பிற்கானது.
நான் உங்கள் பதிவின் கீழே குறிப்பிட்டுள்ள குறிப்பு: அதற்கான ஒரு ஐடியாவைத்தான் குறிப்பிட்டேன்.
அந்தக் குறிப்பின் சாட்சியைக் காப்பி செய்து பின்னூட்டத்தில் போடமுடியவில்லை. அதனாலே ஏற்பட்ட பிரச்சினை இது. நன்றி. ஓட்டு போட்டுட்டேன். நீங்கள் காப்பி செய்வதைத் தடைசெய்வதற்கு ஒரு ஸ்க்ரிப்ட்டை சேர்த்திருக்கிறீர்கள். குட். ஆனால் அதுவே எனது பின்னூட்டத்தில் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது.
நன்றியுடன் நானே
ஓஓஒ.... அப்ப குழம்பியது நான்தான்... :)
வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து குழம்பிய குட்டையிலும் மீன் பிடிப்போம்.
இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. :)
பயனுள்ள தகவல்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
I really need this kind of one and was waiting for this. Thanks for the very good post.
Post a Comment