பிளாக்கின் உள்ளேயே படங்களை திறக்க டிப்ஸ்

பிளாக்கர்தான் வலையுலகில் மிக அதிகமாக உபயோகபடுத்தபட்டு வருகிறது. அதில் மேன்மேலும் பல வசதிகளை உட்செலுத்தி அதனை மேலும் மெருகூட்டுவது சுவையான அனுபவம்தான்.

பிளாக்கரில் ஒரு இடுகையில் இடப்பட்ட படத்தை பெரிதாக காண வேண்டும் என்றால் அந்த படத்தை கிளிக் செய்ய வேண்டும். அந்த படம் புதிய பக்கத்தில் திறக்கும். மீண்டும் இடுகைக்கு திரும்ப இணைய உலாவியில் உள்ள "Back" பட்டனை அழுத்தி மீண்டும் இடுகை பக்கத்துக்கு வரவேண்டும். இடுகை பக்கம் மீண்டும் திறக்க நேரம் எடுக்கும். இது சலிப்பான வேலைதான். இதற்கு பதிலாக நாம் இடுகை பக்கத்தில் இருக்கும் போது அதனுள்ளாகவே படம் திறந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும். பார்வையாளருக்கும் நல்ல அனுபவமாக இருக்கும்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியாதவர்கள் இந்த இடுகையில் இடப்பட்டுள்ள படங்களை கிளிக் செய்து பாருங்கள். வித்தியாசம் தெரியும். இந்த வசதியினை பிளாக்கரில் செய்வது எளிதான வேலைதான். ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் நிரல் இந்த வேலையை செய்யும்.

கீழே உள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் டெம்ப்ளெட்டில் பேஸ்ட் செய்ய வேண்டும்.

1. கீழே உள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்.



2. உங்கள் பிளாக்கரின் Dashboard -ல் Layout --> Edit HTML பக்கத்திற்கு செல்லவும் .
பின்பு அங்கு தோன்றும் Code -ல் என்ற வார்த்தையை தேடவும். அதன் கீழே நீங்கள் காப்பி செய்து வைத்துள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை பேஸ்ட் செய்து விடவும்.
இப்போது SAVE TEMPLATE செய்து விடவும்.
[தெளிவாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும் ]


அவ்வளவுதான். வேறு எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை. இனி உங்கள் இடுகை பக்கத்தை Refresh செய்யவும். அதில் உள்ள படங்களை கிளிக் செய்து பார்க்கவும். இந்த இடுகையில் உள்ளது போன்றே தோன்றும்.

இதை செயல்படுத்துவதில் உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் தயங்காமல் பினூட்டத்தில் கேட்கவும். நிவர்த்தி செய்து வைக்கிறேன்.

நன்றி.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

28 comments:

வடுவூர் குமார் said...

இதே மாதிரி ஜூம் வசதியை இன்னொருவர் கொடுத்திருந்தார் அதில் ஒவ்வொரு படத்தின் கோடையும் மாற்ற வேண்டி வந்தது.இது சுலபமாக இருக்கும் போல் இருக்கு.

வடுவூர் குமார் said...

போட்டு பார்த்தேன்,பட அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் முழு படமும் திரைக்குள் வரமாட்டேன் என்கிறது.

வடுவூர் குமார் said...

முடிந்தால் என்னுடைய இந்த பதிவை பார்க்கவும்.

puduvaisiva said...

HI TVS50

thanks very much it is workes well my blog

Tech Shankar said...

அண்ணே. அது ஜாவா இல்லை. ஜாவாஸ்க்ரிப்ட்

ஜாவா வேற, ஜாவாஸ்க்ரிப்ட் வேற

Java - for server side scripting language
Javascript - for client side script

//1. கீழே உள்ள ஜாவா நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்.

Tech Shankar said...

அண்ணே . ரொம்ப நன்றிங்கண்ணே..

உங்க கோடிங் அற்புதமா வேலை செய்கிறது.

நீங்க 110mb.com ல் ஏற்றினீங்க. நான் அதை web.officelive.com லயும் ஏத்திட்டேன்.

http://rmshankarnarayann.web.officelive.com/Documents/imgload.js'

ரொம்ப நன்றிங்கண்ணே.


என்னுடைய போட்டோ ப்ளாக்கிற்கு ரொம்ப உதவியா இருக்கும்.

டிவிஎஸ்50 said...

@தமிழ்நெஞ்சம்

Script = நிரல் கிடையாதா? தமிழ் தகராறு எனக்கு தொடர்கிறது. திருத்தியதற்கு நன்றி.

உங்கள் தளத்தில் ஸ்கிரிப்ட் வேலை செய்ய வில்லையே... ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா?

//உங்க கோடிங் அற்புதமா வேலை செய்கிறது.//

நன்றி இவருக்குத்தான் சொல்ல வேண்டும்

@வடுவூர் குமார்

நிரலில் சிறிய மாற்றம் செய்துள்ளேன். இப்போது ஓரளவுக்கு உங்கள் பிரச்சினை தீர்ந்து விட்டது. நேரம் கிடைக்கும் போது முழுமையாக சரிசெய்ய முயல்கிறேன்.

@புதுவை சிவா

எழுதும் பதிவு உபயோகபடுவதில் மகிழ்ச்சி

Suresh said...

மிக அருமையான உபயோகமான பதிவுகள் நண்பா :-)

Tech Shankar said...

Script = நிரல் அது சரிதான்.

ஜாவா என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
அது ஜாவா இல்லை. ஜாவாஸ்கிரிப்ட் தல.
2ம் வேற வேற பாஸ்.

டிவிஎஸ்50 said...

@தமிழ்நெஞ்சம்

புரிஞ்சிடுத்து .... நன்றி....

Suresh said...

Thalaiva i pasted as above but after saving it and viewing the blog, still i see the only the picture have to press back :-( help me give ur mail id i ll send screen shot

கடைக்குட்டி said...

நான் use பண்ணிட்டேன்.. நல்லா இருக்கு... நன்றி தல

டிவிஎஸ்50 said...

நீங்கள் இறுதி பதிவுகளில் நீங்கள் படங்களை இணைத்த முறையில் ஏதேனும் குறைபாடு இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த பதிவுகளில் வேலை செய்கிறது பாருங்கள்
http://sureshstories.blogspot.com/2009/02/blog-post.htmlhttp://sureshstories.blogspot.com/2009/04/blog-post.html http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_06.html http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_12.html

கடைக்குட்டி said...

நான் உங்கள follow பண்ண ஆரம்பிச்சுட்டேன்.. இந்தப் ப்திவு மாதிரி நோகாம நோம்பு கும்புடுற வேல இருந்தா சொல்லுங்க தல...

Tech Shankar said...

Firefox தவிற மற்றதில் வேலை செய்தது. - web.officelive.com ல இருந்ததை எடுத்துட்டு. உங்க கோடிங்கை அப்படியே பேஸ்ட்டிட்டேன். FFலயும் வேலை செய்யுது

எல்லாம் அந்த மைக்ரோசாப்ட்டுக்கே வெளிச்சம்.

நன்றி.

Tech Shankar said...

மாற்றியதற்கு நன்றி தல.

இப்போ எனக்காக இப்படி போஸ்ட்டில் கைவைச்சு மாத்தி கீறிங்களே.. நன்றி நன்றி நன்றி.
// கீழே உள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்

Subankan said...

நன்றாக வேலை செந்கிறது. ஆனால் Blogger Draft இனைப் பயன்படுத்தி post செய்த இடுகைகளுக்கு வேலை செய்யவி்ல்லை. கொஞ்சம் கவனிக்கவும்.

டிவிஎஸ்50 said...

@சுபாங்கன்

அந்த பிரச்சினையை பார்வைக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. அந்த பிழையை சரி செய்து விட்டேன். உங்கள் பதிவிலும், சுரேஷ் அவர்கள் பதிவிலும் படங்கள் சரியான முறையில் தோன்றுவதாக நம்புகிறேன். சரி பார்க்கவும் நன்றி

@தமிழ்நெஞ்சம்

இதெல்லாம் பெரிய விசயமா? தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

@கடைக்குட்டி
நன்றி. நோகாம நோம்பு கும்புடுற மாதரியான எளிதான பதிவுகளை தர முயல்கிறேன்.

Subankan said...

வேலை செய்கிறது. மிக்க நன்றி.

Amal Raso said...

ello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India

110CC said...

Its not Working in my BLOG.

http://110cc.blogspot.com

டிவிஎஸ்50 said...

110CC நீங்கள் வழக்கமான் Default முறையில் படத்தை இணைக்கவில்லை என்று நினைக்கிறேன். முயன்று பார்க்கவும். Copy and Paste முறையில் படத்தை இணைத்து இருந்தால் இது வேலை செய்யாது

Vadielan R said...

தல செம மேட்டர் உங்கள் உதவி மிகவும் பயனுள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் நாம் கொடுக்கும் லிங்குகள் தனியே ஒரு விண்டோவில் தோன்ற ஏதாவது வழி உள்ளதா????

Tech Shankar said...

a href="link" target="_blank" போடுங்க

/தல செம மேட்டர் உங்கள் உதவி மிகவும் பயனுள்ளது. அத்துடன் ஒவ்வொரு முறையும் நாம் கொடுக்கும் லிங்குகள் தனியே ஒரு விண்டோவில் தோன்ற ஏதாவது வழி உள்ளதா????

டிவிஎஸ்50 said...

@தமிழ்நெஞ்சம்
மிக்க நன்றி.

இதனை புதிய இடுகையாகவே போட்டு விட்டேன்.

@வடிவேலன்
புதிய இடுகை போட்டு விட்டேன் பாருங்கள்

சித்து said...

நண்பரே மேலே சொன்ன மாதிரியே செய்தேன் ஆனால் வேலை செய்ய வில்லை. என்ன செய்வது? www.nee-kelen.blogspot.com/

டிவிஎஸ்50 said...

@சித்து
நீங்கள் சில இடுகைகளில் படத்தை இணைத்தது சரியில்லை என்று நினைக்கிறேன். இந்த இடுகைகளில் வேலை செய்கிறது பாருங்கள் .
http://nee-kelen.blogspot.com/2009/04/blog-post_3928.htmlhttp://nee-kelen.blogspot.com/2009/05/blog-post.html

சித்து said...

நான் பதியும் பதிவுகள் அனைத்தும் சரியாக வேலை செய்கிறது, ஆனால் என் நண்பர் செய்யும் பதிவுகள் தான் வேலை செய்யவில்லை. இந்த Code-i Layout-il சேர்த்தது நான் தான் அதனால் தான் இப்படியோ??