பள்ளி வாழ்க்கையில் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்று மாடுகள் + சிங்கங்கள் கதை எல்லோரும் படித்து இருப்போம்.
ஐந்து மாடுகள் ஒற்றுமையாக வசித்து வந்தன. சிங்கம் அவற்றை வேட்டையாட வந்த போது ஒன்று சேந்து சிங்கத்தை விரட்டின. பின்பு மாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து விட்டன. பின்பு எளிதாக அந்த சிங்கம் ஒவ்வொரு மாட்டையும் எளிதாக வேட்டையாடி அளித்தது . இதுதான் அந்த கதை சுருக்கம்.
இதையொத்த ஒரு உண்மை சம்பவம் ஒன்றை யூடுப் தளத்தில் பார்க்க நேர்ந்தது. சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.
காட்டில் ஆற்றோரமாக எருமை மாடுகள் மேய்ந்து கொண்டு இருக்கின்றன. அவற்றில் இரண்டு மாடுகள் தன் கன்றுடன் தனியே வருகின்றன. பதுங்கி இருக்கும் சிங்கங்கள் அவற்றின் வருகையை எதிர்பார்த்து அவற்றின் மீது பாய்கின்றன. எருமைகள் சிதறி ஓடுகின்றன. பாவம் எருமைக்கன்று மட்டும் சிங்கங்களிடம் சிக்கி விடுகிறது. சிங்கங்கின் துரத்தலில் அந்த குட்டி ஆற்றில் விழுந்து விடுகிறது. சிங்கங்கள் அதனை கவ்வியபடியே ஆற்றிலிருந்து வெளியே இழுக்கிறது. மாற்று மொரு அவலம் ஆற்றின் உள்ளே உள்ள முதலை ஒன்று அந்த எருமை குட்டியை ஆற்றின் உள்ளே இழுக்கிறது. எருமைக்கன்றின் கதறல்!. இறுதியில் சிங்கங்கள் எருமை குட்டியை வெளியே தரையில் இழுத்து போட்டு விடுகின்றன. அனைத்து சிங்கங்களும் எருமைக்கன்றை கவ்வியபடி இருக்கின்றன.
இங்கேதான் ஒரு திருப்பம். தப்பி சென்ற இரண்டு பெரிய எருமைகளும் தன் கூட்டத்தை திரட்டி வந்து விடுகின்றன. முதலில் சிங்கங்கள் பயப்படாது போல் இருந்தாலும், எருமைகளின் தாக்குதலில் தூக்கி வீச படுகின்றன. சிங்கங்கள் சிதறி ஓடுகின்றன.
என்னதான் பலசாலியாக இருந்தாலும், ஒற்றுமையுடன் கூடிய எதிர்ப்பின் முன் நிற்க முடியாது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ.
எட்டு நிமிடம் ஓடக்கூடிய வீடியோ. கண்டிப்பாக பாருங்கள். உண்மை சம்பவம் . பார்க்க சுவாரசியமாக இருக்கும்.
இந்த வீடியோ தென் ஆப்ரிக்க காட்டில் எடுக்கப்பட்டது. யூடுப் தளத்தில் நான்கு கோடிக்கும் மேலான பேர் இந்த வீடியோ வை பார்த்துள்ளனர். யூடுபில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ க்கள் வரிசையில் இது 35 வது இடத்தில் உள்ளது இந்த வீடியோ.
7 comments:
உங்களின் வருகைக்காக நெல்லைத்தமிழ் புக்மார்க் தளம் காத்திருக்கிறது...
தளமுகவரி...
nellaitamil
ஒரு சிறு ........... .திருத்தம் ......எருமையின் குட்டியை , கன்று என்று சொல்வார்கள்.எருமைக்கன்று .என்பதே சரி.
//ஒரு சிறு ........... .திருத்தம் ......எருமையின் குட்டியை , கன்று என்று சொல்வார்கள்.எருமைக்கன்று .என்பதே சரி.//
தமிழில் எழுதியே ஆக வேண்டும் என்று கட்டாய படுத்தி கொண்டுதான் இந்த வலைப்பூவை எழுதி வருகிறேன். என் தமிழை திருத்திய உங்களை வணங்குகிறேன். உங்களை போன்றோர் வழிகாட்டுதல் என்னை மேலும் செம்மை படுத்தி கொள்ள உதவும். மிக்க நன்றி.
நல்ல படிப்பினை ..பகிர்வுக்கு நன்றி !!
ஜுர்கேன் க்ருகேர் உங்கள் கருத்துக்கு நன்றி
சாதுமிரண்டால் காடு கொள்ளாது.என்பதை சரியா சொல்லீட்டீங்க. (பழமொழிக்கும் மேட்டருக்கும் சம்பந்தம் இல்லையோ..)சரி ஆராயாம அனுபவிச்சுடுங்க.
enjoyed the video. thanks for sharing
Post a Comment