கூகிள் லேப்ஸ் பட தேடலில் ஒரேமாதிரி படங்கள் (Similar Images) சேவையை அறிமுக படுத்தி உள்ளது.
கூகிள் பட தேடல் என்னதான் சிறந்த சேவையை வழங்கினாலும், அதில் நாம் விரும்பிய படத்தை துல்லியமாக தேடி கண்டு பிடிப்பது சற்றே கடினமான் காரியம்தான். இதனை மேம்படுத்த வந்துள்ள புதிய சேவை இணைப்புதான் "Similar Images".
அதற்கான லிங்க் http://similar-images.googlelabs.com/
உதாரணத்திற்கு "apple" என்று ஆப்பிள் பழத்திற்கான படத்தை தேடுவோம். ஆனால் Apple நிறுவனத்தின் லோகோ, ஐபோன், கம்ப்யூட்டர் போன்ற படங்களும் தோன்றும்.

ஆனால் நமக்கு ஆப்பிள் பழம் பற்றி மட்டும் மேலும் படங்கள் தேவை என்றால் தோன்றும் ஆப்பிள் படத்தின் கீழே உள்ள "Similar images" என்ற லிங்க்கை கிளிக் செய்தால் அந்த படம் மாதிரியான பிற படங்கள் தோன்றும்.

இந்த சேவை தொடர்பாக கூகிள் வெள்யிட்டுள்ள வீடியோ
6 comments:
பயனுள்ள செய்தி....
வாழ்த்துக்கள்
மிகப்பயனுள்ள தகவல். பதிவுகளில் குறிச்சொற்கள் போட்டு படங்கள் தேடுவதற்குள் படாதபாடு பட வேண்டியுள்ளது. தகவலுக்கு நன்றி!!!!!
நல்ல பயனுள்ள தகவல்
Thanx For ur This Informative message...
ஆடிப்பாவை, சென்ஷி , Suresh, டக்ளஸ்
பினூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
படங்களை தேடி தேடியே நேரத்தை தொலைக்கும் எனக்கு மிக மிக பயனுள்ள தகவல் இது.
வாழ்த்துக்கள் பல.....
அன்புடன்
கொல்வின்
Post a Comment