Youtube-ல் Playlist உருவாக்குவது எப்படி?

யூடுபில் உள்ள ஒன்றிக்கு மேற்பட்ட் வீடியோ க்களை ஒரே யூடுப் பிளேயர்ரில் "Playlist" ஆக தோன்ற செய்வது எப்படி என்பதனை பற்றிய பதிவு இது.


Youtube தளத்தை பற்றி இணையத்தில் அறியாதவர்கள் மிக குறைவுதான். இணையம் என்றால் எப்படி கூகிள் நியாபகத்தில் வருகிறதோ, அது போல் இணையத்தில் வீடியோ என்றால் முதலில் நியாபகத்தில் வருவது யூடுப் தளம் தான். கோடிக்கணக்கானவீடியோக்களை உள்ளடக்கிய இந்த தளத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கில் வீடியோ க்கள் ஏற்ற படுகின்றன.

யூடுபில் உள்ள வீடியோ வை உங்கள் தளம் / பிளாக்கில் Embed செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம். சுருக்கமாக அதை காண்போம்.

உதாரணமாக http://www.youtube.com/watch?v=WEAM6ilnehw இந்த வீடியோ வை உங்கள் பிளாக்கில் தோன்ற செய்ய வேண்டுமெனில் , அந்த வீடியோ பக்கத்தில் "Embed" என்ற பகுதியில் உள்ள நிரலை வெட்டி உங்கள் பதிவில் ஒட்டவும். உங்கள் பதிவை வெளியிட்டவுடன் வீடியோ உங்கள் பதிவில் தோன்றும்.



Embed Code :

தோன்றக்கூடிய வீடியோ




ஒரு வீடியோ என்பதால் பிரச்சினை இல்லை. யூடுபில் பத்து நிமிடத்திற்கு மேற்பட்ட வீடியோ க்களை ஏற்ற முடியாது. வீடியோ பத்து நிமிடத்திற்கு மேற்பட்டதாக இருந்தால் , பத்து பத்து நிமிடங்களாக பிரித்து யூடுபில் ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றப்பட்ட வீடியோ க்களை உங்கள் பிளாக்கில் தோன்ற செய்ய ஒவ்வொரு வீடியோ வின் Embed நிரலையும் வெட்டி ஓட்ட வேண்டும். பார்ப்பவர்கள் ஒவ்வொரு வீடியோ வாக கிளிக் செய்து பார்க்க வேண்டும். இது இடத்தை அடைத்து கொள்ளலாம், பார்ப்பவர்களுக்கு சலிப்பை தரலாம்.

அதற்கு ஒரு தீர்வு தருகிறது யூடுப். ஒரே மாதிரியான ஒன்றிற்கு மேற்பட்ட வீடியோ வை உங்கள் பிளாக்கில் தோன்ற செய்ய விரும்பினால் அவை அனைத்தையும் "Playlist" என்ற பெயரில் ஒன்றாக சேர்த்து ஒரே வீடியோ வாக உங்கள் பிளாக்கில் தோன்ற செய்யலாம்.

அது எப்படி என்று பார்ப்போம். உதாரணத்திற்கு வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் பாடல்களை ஒன்றாக சேர்த்து பிளாக்கில் தோன்ற செய்ய வேண்டும் என்ற வேலையை எடுத்து கொள்ளுவோம்.

1. முதலில் நீங்கள் இணைக்கவிரும்பும் அனைத்து வீடியோ க்களையும் தேடி கண்டுபிடித்து கொள்ளுங்கள். உதாரணமாக வாரணம் ஆயிரம் பாடல்களாக நான் யூடுபில் தேடி பிடித்தவை

http://www.youtube.com/watch?v=QQAKbL4A6zA - நெஞ்சுக்குள் பெய்திடும்
http://www.youtube.com/watch?v=7ViVGDidU1o - அனல் மேலே பனி துளி
http://www.youtube.com/watch?v=AGmC64Iw6wI - என்ன என்ன தேடி வந்த அஞ்சலை
http://www.youtube.com/watch?v=bF5IO9THtHw - அடியே கொல்லுதே
http://www.youtube.com/watch?v=6Q1mn7kCo4k - ஒம் ஷாந்தி ஷாந்தி .
http://www.youtube.com/watch?v=lP_AKp_CVAs - முன்தினம் பார்த்தேனே

இவற்றை ஒரே யூடுப் பிளேயர்ரில் இணைக்க வேண்டும். எளிமையான விசயம்தான்.

2. யூடுபில் உங்கள் கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். மேலே உங்கள் உறுப்பினர் பெயரில் மேல் மௌசை கொண்டு சென்று "Playlist" கிளிக் செய்து கொள்ளுங்கள்.


3. தோன்றுகின்ற பக்கத்தில் "New" வை கிளிக் செய்து "Playlist" என்பதை தேர்வு செய்யும் போது "New Playlist Title" கொடுக்க சொல்லி கேட்கும். அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் தலைப்பை கொடுத்து "Create" கிளிக் செய்யவும்.
4. அடுத்து தோன்றும் பக்கத்தில் playlist பற்றி விளக்கம் (Description) அளித்து விட்டு "Save Changes" கிளிக் செய்து கொள்ளவும்.


5. அடுத்து இந்த செய்முறையின் முதல் பகுதியில் தேர்ந்தெடுத்த வீடியோ பக்கங்களை பார்வை இடவும். அந்த வீடியோ க்களுக்கு கீழே "Playlist" என்ற ஆப்சனை நீங்கள் காணலாம். அதை கிளிக் செய்து அந்த வீடியோ வை நீங்கள் தயார் செய்து வைத்து உள்ள Playlist இல் சேர்த்து கொள்ளவும்.

இது போன்று ஒவ்வொரு வீடியோ பக்கமாக தேர்வு செய்து, Playlist இல் சேர்த்து கொள்ளவும்.

6. இப்போது மீண்டும் "Playlist" பக்கத்திற்கு வரவும். அதில் நீங்க சேர்த்த வீடியோ க்கள் அனைத்தும் தெரியும் "Play All" என்பதனை கிளிக் செய்து அனைத்து வீடியோ க்களையும் பார்க்கலாம். அதனை உங்கள் தளம்/ பிளாக்கில் எப்படி இணைப்பது என்று பார்ப்போம்.




7. "Edit Playlist Info" என்பதனை கிளிக் செய்து கொள்ளவும். அதில் உள்ள "Embed" நிரலை வெட்டி உங்கள் பிளாக் அல்லது தளத்தில் பதிவு உருவாக்கும் போது ஒட்டவும்.



8. மேலே நாம் உருவாக்கிய "Playlist" இப்படித்தான் தோன்றும். அனைத்து வீடியோ க்களும் ஒன்றன் பின் ஒன்றாக Play ஆகும். வேண்டுமென்கிற வீடியோ வுக்கு நீங்கள் மாறியும் கொள்ளலாம். மேலே நாம் உருவாக்கிய வீடியோ வை இயக்கி பாருங்கள்.



இது போன்று உங்கள் விருப்பங்களை பொறுத்து "Playlist" களை உருவாக்கி உங்கள் பதிவுகளில் இணைத்து கொள்ளலாம். தனி தனியாக வீடியோ களை பதிவில் இடுவதை ஒப்பிடும் போது உங்கள் பதிவில் நிறைய இடம் மிச்சமாகும்.

உங்கள் "Playlist" களை யூடுபில் மற்றவருடன் பகிர்ந்தும் கொள்ளலாம்.

இந்த பதிவு தங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். முடிந்தவரை உதவி செய்கிறேன். Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

2 comments:

டிவிஎஸ்50 said...

பாராட்டுக்கு நன்றி மனமதகுஞ்சு

Chandru said...

super