IZArc இலவச மென்பொருள் : கோப்புகளை சுருக்குதல் & துண்டாக்குதல்

IZArc இலவச மென்பொருள் மூலம் கோப்புகளை சுருக்குவது எப்படி? மற்றும் மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை பல்வேறு சிறிய துண்டுகளாக்குவது எப்படி? என்பது பற்றிய பதிவு இது.

கணினிக்கு புதியவரான நண்பர் ஒருவர் சந்தேகத்துடன் தொலை பேசியில் அழைத்து இருந்தார். அவருடைய கேள்வி இதுதான்.
பிறந்தநாள் விழாவின் போது எடுக்கப்பட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை உறவினர்களுக்கு மெயில் மூலம் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு படமாக மெயில் மூலம் Attachment ஆக அனுப்புவது கடினமாக உள்ளது. 300 படங்களை அனுப்ப இரண்டு நாட்கள் தேவை படும் போலுள்ளது. ஏதேனும் எளிதான வழி இருந்தால் கூறுங்கள்.அவருக்கு நான் கூறிய வழிமுறைகளை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

இது போன்று அதிகமான எண்ணிக்கையில் உள்ள கோப்புகளை அனுப்புவதற்கு முன்பு அவற்றை ஒரே கோப்பாக மூட்டை கட்டி கொள்ளலாம். Zip செய்தல் என்ற வாசகம் அனைவரும் கேள்வி பட்டு இருப்போம். அதைத்தான் இப்போது பார்க்க போகிறோம்.

கோப்புகளை ZIP செய்வது எப்படி?

கோப்புகளை zip செய்வதற்கு ஏராளமான மென்பொருள்கள் உள்ளன. பிரபலமானவை WINRAR, WINZIP முதலான மென்பொருள்கள். ஆனால் அவற்றை உபயோகிக்க நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். முப்பது டாலர்கள் வசூலிக்கிறார்கள். சிலர் இந்த மென்பொருள்களின் Crack மென்பொருள் உபயோகிக்கிறேன் என்று வைரஸ் போன்றவற்றை பெற்று அவதியுறுகிறார்கள்.

பிரபலமான மென்பொருள்களில் உள்ள அனைத்து வசதிகளையும் உள்ள மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கும் போது ஏன் காசு செலவழிக்க வேண்டும். Crack போன்றவற்றால் ஏன் அவதியுற வேண்டும்.

IZArc கோப்பு சுருக்குவான்

ZIP செய்வது தொடர்பாக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி உள்ள இலவச மென்பொருள்தான் IZArc. இந்த மென்பொருளை 7-ZIP, A, ACE, ARC, ARJ, B64, BH, BIN, BZ2, BZA, C2D, CAB, CDI, CPIO, DEB, ENC, GCA, GZ, GZA, HA, IMG, ISO, JAR, LHA, LIB, LZH, MDF, MBF, MIM, NRG, PAK, PDI, PK3, RAR, RPM, TAR, TAZ, TBZ, TGZ, TZ, UUE, WAR, XXE, YZ1, Z, ZIP, ZOO முதலான கோப்புகளை விரிக்க உபயோக படுத்தலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

ISO, BIN, CDI, NRG முதலான CD இமேஜ் கோப்புகளை திறக்கவும் உபயோகபடுத்தலாம். இதன் மூலம் CD இமேஜ் கோப்புகளை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு (BIN to ISO, NRG to ISO) மாற்றவும் முடியும்.

IZArc மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளவும் http://www.izarc.org/download.html

நேரடியாக இந்த லிங்க்கை கிளிக் செய்வதன் மூலமும் தரவிறக்கலாம்.

தரவிறக்கப்பட்ட மென்பொருளை உங்கள் கம்பியுடரில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இப்போது IZArc உபயோகத்திற்கு தயார்.

இப்போது நாம் எடுத்து கொண்ட வேலைக்கு வருவோம். நண்பரின் முன்னூறுக்கு மேற்பட்ட புகைப்படங்கள் "Birthday Photos" என்ற போல்டரில் உள்ளது. அதனை சுருக்கி ஒரே கோப்பாக மற்ற வேண்டும்.

1. "Birthday Photos" போல்டரில் மௌசை வலது கிளிக் செய்து கொள்ளவும். தோன்றும் தேர்வுகளில் "IZArc ---> Add to Birthday Photos.zip" என்பதனை கிளிக் செய்யவும். இப்போது Birthday Photos.zip என்ற பெயரில் அனைத்து புகைப்படங்களும் சுருக்கப்பட்டு ஒரே கோப்பாக இருக்கும்.


2. நீங்கள் உருவாக்கும் ZIP கோப்புகளை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாத்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு. பாஸ்வோர்ட் தெரியாத நபர்களால் ZIP கோப்பினுள் உள்ள புகைப்படங்களை பார்க்கவோ, திறக்கவோ முடியாது. பாஸ்வோர்ட் கொடுக்க விரும்பினால் ZIP கோப்பு உருவாக்கும் போது , "Birthday Photos" போல்டரில் மௌசை வலது கிளிக் செய்து கொள்ளவும். தோன்றும் தேர்வுகளில் "IZArc ---> Add to Archieve File..." என்பதனை கிளிக் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் கீழ்கண்டவற்றை நிரப்பவும்.

Add to Archieve என்பதில் ZIP கோப்புக்கான பெயர் மற்றும், எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Encryption: என்பதில் AES - 128 Bit என்பதனை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து "Password" பட்டனை கிளிக் செய்து பாஸ்வோர்ட் கொடுத்து கொள்ளவும். அடுத்து "Add" பட்டனை கிளிக் செய்து கொள்ளவும்.

அவ்வளவுதான். பாஸ்வோர்ட் பாதுகாப்புடன் கூடிய ZIP கோப்பு தயார்.

ZIP செய்வதற்கு முன்னாள் புகைப்படங்களின் அளவு 390MB இருந்தது. இப்போது ZIP செய்த பின்பு Birthday Photos.zip அளவு 365MB காட்டுகிறது (jpg கோப்புகளின் Compression ratio எப்போதும் குறைவாகவே இருக்கும் ) . 25MB மிச்சம் .

365MB அளவுள்ள Birthday Photos.zip கோப்பை ஒரே மெயில் மூலம் அனுப்ப முடியாது. ஜிமெயில் 20MB அளவுள்ள கோப்புகளை மட்டுமே Attachment ஆக அனுப்ப அனுமதிக்கும்.

நீங்கள் ZIP செய்துள்ள கோப்பு 20MB அளவுக்கு குறைவாக இருந்தால் நீங்கள் ஒரே மெயில் மூலம் அதை அனுப்பி விடலாம்.

அளவு அதிகமாக இருப்பதால் 365MB அளவுள்ள Birthday Photos.zip கோப்பை 20MB அளவிற்கு உட்பட்ட பல துண்டுகளாக உடைத்து கொள்ளவேண்டும். பின்பு அவற்றை தனித்தனியாக அனுப்பி விடலாம். அதை எவ்வாறு செய்வது.

Birthday Photos.zip ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதில் "Tools" மெனுவுக்கு சென்று "Create Multi-Volume Set.." என்பதனை கிளிக் செய்து கொள்ளவும். தோன்றும் விண்டோவில் Spanned Archieve Name என்பதில் நீங்கள் உருவாக்க போகும் துங்குகளுக்கான பெயரை தேர்வு செய்யவும். மற்றும் Volume Size : --> Custom , Other Size --> 19MB தேர்ந்து எடுத்து OK கிளிக் செய்யவும்.


இப்போது Birthday Photos.zip பல்வேறு 19MB அளவுள்ள துண்டுகளாக்க பட்டு விட்டது. இனி இவை ஒவ்வொன்றாக நீங்கள் அடுத்தவருக்கு மெயில் மூலம் அனுப்பலாம்.
இப்போது அனைத்து ZIP கோப்பு துண்டுகளையும் உங்கள் உறவினருக்கு அனுப்பி ஆயிற்று. அவரும் அனைத்து துண்டுகளையும் டவுன்லோட் செய்து விட்டார்.

இப்போது இவற்றை ஒன்றாக இணைத்து புகைப்படங்களை பெறுவது எப்படி?

டவுன்லோட் செய்யப்பட்ட அனைத்து ZIP கோப்பு துண்டுகளையும் ஒரே போல்டரில் போடுங்கள். அவரில் முக்கியமாக ஒரே ஒரு துண்டு மட்டும் .Zip என்ற Extension உடன் இருக்கும். மற்றவை .z01, .z02, .z03 .... வரிசையில் Extension உடன் இருக்கும். .zip என்ற Extension உள்ள கோப்பு துண்டை தேர்வு செய்து வலது கிளிக் செய்யவும். பின்பு தோன்றும் தேர்வுகளில் IZArc --> Extract Here... என்பதனை கிளிக் செய்யவும். நீங்கள் ZIP செய்த அனைத்து புகைப்படங்களும், விரிக்கப்பட்டு கிடைத்து விடும்.


இது இலவச மென்பொருள் IZArc எளிதாக எப்படி உபயோகிப்பது என்பதற்காக எழுதப்பட்ட பதிவு. இதில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். முடிந்தவரை உதவுகிறேன். உங்கள் கருத்துகளையும் தெரிவிக்கவும். தவறுகள் இருப்பின் என்னை திருத்தி கொள்கிறேன்.

நன்றி.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

5 comments:

யூர்கன் க்ருகியர் said...

என் அலுவலகத்தில் இதைதான் உபயோகிக்கிறேன்.
பெரிய கோப்பினை பார்ட் பார்ட்டா பிரித்து அனுப்பும் முறை மிக்க உதவியாய் உள்ளது .பகிர்வுக்கு மிக்க நன்றி

டிவிஎஸ்50 said...

இந்த மென்பொருள் என்னையும் மிகவும் கவர்ந்துள்ளது. பின்னூட்டத்திற்கு நன்றி.

ஆடிப்பாவை said...

நன்று
பயனுள்ள இடுகை

malai arasi said...

thagavalukku nandri. ennai pondra pudhu net usersku payanulla thaaga iruku.

Arunkumar.R said...

Hi,
I'm very happy to see tech things in tamil in your blog. Tech + tamil = tvs50. All the very best for doing Great job. and keep posting like this :-)

Arun