"ஆண்டி வைரஸ் போட்டதற்கு பிறகு சிஸ்டம் ஸ்லோ ஆகிருச்சி"
உணமைதான். ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் குறிப்பிடத்தகுந்த அளவு மெமரியையும், CPU உபயோகத்தையும் எடுத்து கொள்ளுகின்றன. அதனால் தான் ஆண்டிவைரஸ் நிறுவிய பிறகு கணினியில் வேகத்தின் வேறுபாடை உணருவீர்கள்.
இதனை கருத்தில் கொண்டு பாண்டா நிறுவனம் "பாண்டா க்ளவுட் ஆண்டிவைரஸ்" எனும் புதிய வைரஸ் எதிர்ப்பான் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மென்பொருளை கணினியில் நிறுவினால் அது உங்கள் கணினியை பாண்டா நிறுவனத்தில் செர்வருடன் இணைத்து விடும். வைரசுக்கு எதிரான Scanning, Monitoring போன்ற வேலைகளை பாண்டா நிறுவனத்தில் ஸெர்வரெ கவனித்து கொள்ளும். உங்கள் கணினியின் வேலைப்பளு குறையும். இது மற்ற ஆண்டிவைரஸ்களோடு ஒப்பிடும் போது கணினியில் மெமரி, CPU ஆக்ரமிப்புகள் சராசரியாக 50% குறைவாகவே இருக்கும்.
உங்கள் கணினியின் இணைய இணைப்பு நிலையானதாக இருந்தால் மட்டுமே இதனை உபயோக படுத்துங்கள். இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் Cache- ல் உள்ள ஆண்டிவைரஸ் கணினியை பாதுகாக்கும் என்று பாண்டா நிறுவனத்தினர் உறுதி அளிக்கிறார்கள். அனால் அது மற்ற நிரந்தரமாக கணினியில் நிறுவுகிற ஆண்டிவைரஸ் மென்பொருள் போன்று நிலையான பாதுகாப்பாக இருக்குமா? என்று தெரியவில்லை.
இந்த ஆண்டிவைரஸ் மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த லின்க்கில் சென்று இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.
ஆண்டிவைரஸ் துறையில் இது புதிய தொழில்நுட்பம் என்று அறிவித்துள்ளார்கள். பாண்டா நிறுவனத்தை தொடர்ந்து பல ஆண்டிவைரஸ் நிறுவனங்களும் இது போன்ற தொகுப்புகளை வெளியிடலாம்.
6 comments:
நன்றி.
Very Helpful
மிக்க நன்றிகள்
நல்ல முயற்சிதான்
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பர்களே.
இந்தலின்க் கிடைக்க வில்லை
இது ட்ரையல் வெர்ஷனா???
alwaysarafath@gmail.com க்கு பதில் சொல்லுங்க..
i donloaded it.. sys performance is better.. thts y asking u :-)
reply ASAP ...
Post a Comment