முழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில் - Not Illegal

அதிகாரபூர்வமாக திரைப்படங்களை யூடுப் தளம் , இணையத்தில் வெளியிடுவது பற்றிய பதிவு இது.
முழுநீள திரைப்படங்களையும், வீடியோ க்களையும் யூடுப் பார்வையாளர்கள் தளத்தில் ஏற்றுவதும் பின்பு காப்புரிமை பிரச்சினை என்று யூடுப் தளம் அவற்றை அழிப்பது என்று கண்ணாமூச்சி நடந்து கொண்டு இருக்கும்.

இணையமும் திரைப்பட துறையும் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளன. இணையம் என்றாலே திருட்டு சினிமா, MP3 என்பதுதான் பலருக்கு நியாபகம் வரும். இனி சினிமாக்களை நேர்மையான முறையில் இணையத்தில் காணலாம். முழுநீள திரைப்படங்களை வழங்க யூடுப் தளம் வழி செய்துள்ளது.

யூடுப் தற்போது அதிகாரபூர்வமாக முழுநீள திரைப்படங்களை தளத்தில் காட்ட அனுமதி பெற்றுள்ளது. இது தொடர்பாக யூடுப் தளம், சோனி நிறுவனத்துடன் சோனியின் திரைப்படங்கள், டிவி ஷோக்களை காட்ட ஒப்பந்தம் இட்டுள்ளது. இது போன்று பல்வேறு பெரிய நிறுவனங்களுடன் அவற்றின் திரைப்படங்களை காட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

Casino Royale (1967), Toy Soldiers, Cliffhanger உள்ளிட்ட பல ஆங்கில திரைப்படங்களும், Sarkar, Dhaai Akshar Prem Ke, Deewana , Hera Pheri, Hulchul உள்ளிட்ட பல ஹிந்தி திரைப்படங்களும் யூடுப்பில் உள்ளன. மேலும் பல திரைப்படங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.
திரைப்படங்களுக்கான லிங்க் - Youtube Movies
டிவி ஷோக்களுக்கான லிங்க் - YouTube TV Shows

சில ஹிந்தி திரைப்படங்களுக்கான லிங்க்
  1. Sarkar
  2. Dhaai Akshar Prem Ke
  3. Deewana
  4. Hera Pheri
  5. Hulchul
தமிழ் திரைப்படங்கள் இது போன்று எப்போது காண்பிக்கப்படும்? என்று தெரியவில்லை. விரைவில் வரும் என்று நம்புவோம்.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

7 comments:

டக்ளஸ்....... said...

Thanx For ur Informative message...

பட்டாம்பூச்சி said...

நல்ல தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி.

டிவிஎஸ்50 said...

டக்ளஸ், பட்டாம்பூச்சி

பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததில் மகிழ்ச்சி .

Anonymous said...

வணக்கம் நண்பர்களே.. கூகுல் (AdSense) மூலம் பணம் சம்பாதிக்க ஆசை யாருக்குதான் இருக்காது. இதை பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். http://adsensechennai.blogspot.com/2009/05/adsense.html

டிவிஎஸ்50 said...

அனானி நண்பரே.... புதிய வலைபூவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பூவை tamilish.com, tamilmanam.net போன்ற தளங்களில் பகிருங்கள். அதிகம் பேரை சென்றடையும்.

Anonymous said...

Excellent Service. Your service is a great help to the entire society.

Guru said...

Ungal saevai thamizhargulukku oru varaprasaatham. nanri