விண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள்

விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளர்களுக்கு இரண்டு இலவச கருப்பு வண்ண தீம்களை (Theme) தரவிறக்கம் செய்வது தொடர்பான பதிவு இது.

விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளர்கள் பெரும்பாலும் அதனுடன் வரும் நீல வண்ண தீமையே (Theme) உபயோகித்து வருவோம். அது நன்றாகவே இருந்தாலும் என்னை முழுமையாக திருப்தி படுத்தவில்லை. கருப்புதான் எனக்கு ரொம்பவும் புடிச்ச கலரு.
இணையத்தில் தேடி பார்த்ததில் மைக்ரோசாப்ட்காரவுகளே கருப்பு கலருல தீம் வெளியிட்டு இருக்காக. நமக்குத்தான் தெரியாம இருந்திருக்கு. உங்களுக்கும் கருப்பு கலரு புடிக்குமுன்னா இரண்டு கருப்பு கலர் தீம் பத்தி அறிமுகம் தாரேன். உபயோகிச்சு பாருங்க...

1. Royale Noir

இந்த தீமை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். இது இரண்டு வண்ணங்களுடன் வருகிறது. நீல நிறத்திற்கு Royale என்றும், கருப்பு நிறத்திற்கு Royale Noir என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

தரவிறக்கிய ZIP கோப்பை “C:\Windows\Resources\Themes\” போல்டரில் Extract செய்து கொண்டு Royale Noir (”C:\Windows\Resources\Themes\Royale Noir\”) என்ற போல்டரை ஓபன் செய்து கொள்ளுங்கள்


அங்கே “luna.msstyles” என்ற கோப்பை ஓபன் செய்து Appearance --> Color Scheme என்பதில் "Royale Noir" என்பதனை தேர்வு செய்து கொண்டு OK கிளிக் செய்யுங்கள். தீம் செயல்படுத்தபட்டு விடும்.


உங்கள் கணினி கருப்பு வண்ண தீமினால் அலங்கரிக்கப்படும்.


கருப்பு வண்ணத்தில் மற்றுமொரு தீம் பற்றி பார்ப்போம்.

2. Zune

இந்த தீம் , மைக்ரோசாப்ட்டால் "Zune" என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். .msi கோப்பாக இருக்கும். அதை ஓபன் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். அடுத்து தோன்றும் "Display Properties" விண்டோவில் "Apply" செய்து "OK" கிளிக் செய்து கொள்ளவும்.


இந்த
தீமும் அருமையாக இருக்கும். பிடித்திருந்தால் வைத்து கொள்ளுங்கள். பிடிக்கவில்லை எனில் பழைய நீல நிற தீமுக்கு திரும்ப விரும்பினால்

Start --> Control Panel --> Display --> Display Properties --> Themes சென்று உங்களுக்கு வேண்டிய தீமுக்கு மாறி கொள்ளுங்கள்.

ஏதேனும் குழப்பங்களோ, தடங்கல்களோ இருந்தால் பின்னூட்டத்தில் தயங்காது கேட்கவும். நிவர்த்தி செய்ய முயல்கிறேன்.

கணினியில் அதிக அனுபவம் இல்லாதவர்கள் கூட எளிய முறையில் உபயோகிக்கும்படி இருக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன். உங்களுக்கு ஏதேனும் புரியவில்லை என்று சுட்டி காட்டினால் என்னை திருத்தி கொள்ள வசதியாக இருக்கும்.

நன்றி.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

10 comments:

Suresh said...

Machan i am using the same theme ha ha very good sharing machan, zune was the theme which i was using before now its luna.msstyles

A Blog for Edutainment said...

சூப்பர் தல

டிவிஎஸ்50 said...

நன்றி நண்பர்களே...

Anonymous said...

நன்றி நண்பா .............

Anonymous said...

old stuff.....

Senthil said...

expecting more from u

Anonymous said...

thx

senthil

வடுவூர் குமார் said...

அருமையாக இருக்கு.
இப்ப எனக்கும் பிடிச்ச கலர் கருப்பு தான்.
நன்றி.

raja said...

its really good,,,,even my favourite colour is black,,,,,thank u for u a lot.....by TTS....

மாதவன் said...

நன்றி. நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். மனமார்ந்த நன்றிகள்.