சென்னையில் பிஎஸ்என்எல் IPTV அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னையில் தனது IPTV( Internet Protocol Television) எனும் தொலைகாட்சி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. மைவே பிஎஸ்என்எல் (MyWayBSNL) என்ற பெயரில் ஸ்மார்ட் டிஜிவிசன் நிறுவனத்துடன் இணைந்து இது வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் இணையதளம் http://www.myway.in/

கேபிள் டிவி தொந்தரவுகளில் இருந்து டிஷ் டிவி DTH மூலம் தரமான சேவை தொலைக்காட்சி ஒளிபரப்பில் வழங்கப்பட்டு வந்தது. அதில் அடுத்தகட்டமான IPTV ல் பல மேம்படுத்தப்பட்ட சேவைகள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள். IPTV என்பது உங்கள் Broadband இணைப்பு மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

DVD யை விட உயர்தர வீடியோ, ஈமெயில் , வீடியோ சாட், டிக்கெட் புக்கிங், பேரண்டல் கன்ட்ரோல் என்று மேலும் பல வியப்படைய வைக்கும் சேவைகளை அறிமுகம் செய்கிறார்கள். DTH உடன் IPTV ஒப்பீடு அட்டவணையை இங்கே பாருங்கள்.


கட்டணங்களும் மிக அதிகமாக இருப்பதாக தெரியவில்லை. 100 ரூபாயில் ஆரம்பித்து 280 ருபாய் வரை கட்டணம் நிர்ணயித்து உள்ளார்கள். ஆரம்ப கட்டம் என்பதால் சன் டிவி உள்பட பல தொலைக்காட்சி சானல்கள் இதில் இல்லை. இது மிகவும் பின்னடைவான விஷயம்.

விரைவில் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் இந்த துறையில் தனது திட்டங்களை தமிழகத்தில் அறிமுகபடுத்தலாம். அப்போது சேவைகள் அதிகரிக்க / கட்டணம் குறைய வாய்ப்பு உண்டு. IPTV தொலைக்காட்சி துறையில் ஒரு புதிய புரட்சியை உண்டு பண்ணலாம்.

இந்த சேவை தொடர்பாக Airtel நிறுவனத்தின் இணையத்தளம். http://www.airtel.in/interactive/index.html

இந்த சேவையை உபயோகித்தவர் யாராவது இருந்தால் உங்கள் அனுபவத்தை கூறுங்களேன்.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

4 comments:

Subash said...

its really good one
இங்கு 6 மாதம் முன்னர் அறிமுகப்படுத்தினார்கள்.
பிடித்த விடயம் ஒரு நிகழ்ச்சியை தவறவிட்டுவிட்டால் ஆறுதலாக றீவைன் பண்ணிபார்த்துவிடலாம்.

HD ல் வருவதால் இன்னும் சிறப்பு

டிவிஎஸ்50 said...

HD வருகிறதா? அருமை. கருத்துக்கு நன்றி சுபாஷ்

கடைக்குட்டி said...

எங்க இருந்துங்க புடிக்கிறீங்க இதெல்லாம்?? ஆனலும் நெம்பதான் டெக்னாலஜிங்க நீங்க...

Subash said...

//டிவிஎஸ்50 said...
April 28, 2009 10:28 AM

HD வருகிறதா? அருமை//

ஆமாம். அதனால்தான் இதற்கு இங்கு மதிப்பு
இல்லாவிட்டால் யார் பார்க்கப்பொகிறார்கள்

ஆனால் எந்த தமிழ் சானலும் இல்லை
:(