பிரபுதேவா யூடியுப் பென்னி லாவா ஆன கதை

பிரபுதேவா - நயன்தாரா திருமணம் என்று பதிவுலகம் களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசைத்துறையில் பரபரப்புடன் வெளிவர ஆரம்பித்த கால கட்டத்தில் அதே பரபரப்புடன் நடன துறையில் வந்தவர் பிரபுதேவா. ஏ. ஆர். ரஹ்மான் இன்று இருக்கும் உயரம் வேறு. ஆனால் பிரபுதேவா இன்று முடங்கியுள்ள இடம் வேறு.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஏ. ஆர் ரஹ்மான் இந்தி திரை, உலக இசை இன்று மாபெரும் நதி போல் தன்னை நிலை நிறுத்தி கொண்டார். ஆனால் பிரபுதேவா தமிழ் சினிமா , மொக்கை படங்கள் என்று தன் நடன திறமையை உலக அளவில் கொண்டு செல்லாமல் சிறு குட்டை போல் தேங்கி விட்டார்.

பிரபு தேவா சினிமா என்று தன்னை சுருக்கி இருக்காமல் நடனத்தில் தனி கவனம் செலுத்தி வருடத்திற்கு ஒன்றிரண்டு ஆல்பம் போட்டு இருக்கலாம்.

பிரபுதேவா உண்மையில் திறமைசாலிதானா? உலக அளவில் புகழ் பெறும் அளவிற்கு அவருக்கு திறமை இருக்கிறதா? வெறும் கை கால்களை அசைப்பது மட்டும் நடனம் ஆகி விடாது. நளினமும், குறும்பு, கோமாளித்தனங்களுடன் செய்யும் அசைவுகளே விருப்பமான நடனமாக மக்களிடம் கொண்டு சென்று இருக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலக அளவிலும் ரசிக்கப்படும் விசயமாகவே இருக்கிறது.

இதற்கு உதாரணமாக ஒரு பாட்டு வீடியோ உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் யூடுப் தளத்தில் மிக பிரபலம் ஆகி உள்ளது. அது 'பெண்ணின் மனதை தொட்டு' படத்தில் பிரபுதேவா ஆட்டத்தில் இடம் பெற்ற 'கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ' பாடல்தான். இன்று வரை 12 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அந்த பாடலை பார்த்து ரசித்து உள்ளனர்.

வீடியோ : 12 கோடிக்கும் மேல பார்வையிடப்பட்டுள்ள வீடியோ


பார்த்து ரசிக்கும் சில வெளிநாட்டவர் "Funny" , "கோமாளி" இன்று பின்னூட்டத்தில் சொன்னாலும் மீண்டும் மீண்டும் அந்த பாடலை பார்த்து ரசிக்கிறார்கள் என்பது உண்மை. அந்த பாடலில் பிரபுதேவாவிடம் உள்ள ஏதோ ஒன்று அவர்களை கவர்ந்து விட்டது என்பது மறுக்க முடியாது. பிரபு தேவா அவர்களால் ரசிக்க பட கூடிய ஒருவராகி விட்டார்.

இதை விட வியப்பான விஷயம் என்னவென்றால் அந்த பாடல் போன்று அவர் நடன அசைவுகளை காப்பி அடித்து ரீமிக்ஸ் வீடியோக்கள் யூடுபில் நூற்று கணக்கில் பட்டையை கிளப்புகின்றன. உதாரணத்திற்கு சில வீடியோக்களை பாருங்கள்.

வீடியோ 1 : கிரேசி இந்தியன் வீடியோ மைமோ ஸ்டைல்வீடியோ 2 : பென்னி லாவா ரீமிக்ஸ்வீடியோ 3 : மெக்கைன் அன்ட் பாலின் கிரேசி இந்தியன் டான்ஸ் பீஸ்ட்
Benny Lava இன்று யூடுபில் தேடி பாருங்கள் . அவருக்கு உள்ள புகழ் உங்களுக்கு தெரியும். யூடுபில் அவர் பெயர் "Benny Lava" . "கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ" பாடலின் "காய்ந்த நிலாவோ" என்ற வார்த்தைகளை எடுத்து கொண்டு பிரபுதேவாவுக்கு பென்னி லாவா என்று பெயர் சூட்டி விட்டார்கள்.

போகிற போக்கில் வெளிநாடுகளில் நீங்கள் எந்த ஊரு இன்று யாரும் கேட்டால் தமிழ் நாடு என்று சொல்லுவதற்கு பதிலாக பென்னி லாவாவோட ஊரு என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்வார்கள் போல.

நான் முன்பு கூறியது போல பிரபு தேவா சினிமா என்று மட்டும் இராமல் நடனத்தில் முழு கவனம் செலுத்தி ஆல்பம் வெளியிட்டால் உலக அளவில் நல்ல இடத்தை சென்றடைய வாய்ப்புண்டு.

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

16 comments:

தமிழ்நெஞ்சம் said...

can u please show the videos in this blog post itself.

Please!

டிவிஎஸ்50 said...

வாங்க தமிழ்நெஞ்சம். ஏன் வீடியோ தெரியலையா? இந்த இடுகையில் youtube embed code மூலம் தெரிய வைத்து உள்ளேன்.

செல்வேந்திரன் said...

பிரபு தேவா சினிமா என்று தன்னை சுருக்கி இருக்காமல் நடனத்தில் தனி கவனம் செலுத்தி வருடத்திற்கு ஒன்றிரண்டு ஆல்பம் போட்டு இருக்கலாம்.

// அட!

டிவிஎஸ்50 said...

வாங்க செல்வேந்திரன் அண்ணா. வருகைக்கு நன்றி.

//அட!//

நானும் கொஞ்சம் கருத்து சொல்லிக்கிறேனே :)

விஷ்ணு. said...

ரொம்பவே இம்பிரஸ் பண்ணிட்டாரு போல

ஆ.முத்துராமலிங்கம் said...

இந்த வாரம் விகடனில் உங்கள் பதிவை பற்றி அறிமுகப்படுத்தி இருந்தாங்க. வாழ்த்துக்கள்,

தமிழ்நெஞ்சம் said...

Hi. Amazing Videos.

our people are always like to watch videos inside the post.

They are not intended to goto youtube site and watch there.

Me too lazy to go there. If all videos are here, like to watch all.

thanks for putting all here. I like it

செந்தழல் ரவி said...

என்னுடன் பணியாற்றும் போர்ச்சுகீசியர் ஒருவருக்கு தெரிந்த ஒரே இந்திய நடிகர், பிரபு தேவா..

ப்ராப்ப்பூ தேவ்வ்வ்வா என்று சொல்லி அந்த பாடலை அவர் ரசிக்கும் அழகே தனி :))

அதிலும் அதில் வரும் ஒரு பார்ஸ்ட் பார்வார்ட் சீனை பார்த்து குலுங்கி சிரிப்பார்...

:)))

டிவிஎஸ்50 said...

சுவாரசியமான தகவலுக்கு நன்றி செந்தழல் ரவி

’டொன்’ லீ said...

:-)

இத பற்றி நான் திரைப்படம் பற்றிய பாடம் எடுக்கும் போது படிப்பித்த வாத்தியார் போட்டு காட்டி சிரிக்க வைத்தவர்.

வெங்கிராஜா said...

பழைய சரக்கு சார்... ஏற்கனவே இதை பத்தி தொடரா பதிவு போடலாம்னு ஆரம்பிச்சேன்... சொதப்பிருச்சு

மதுவதனன் மௌ. said...

எனக்கு இது புதிய தகவல். உங்கட பதிவுக்குப் பிறகு யூடியுப்பில போய்ப் பாத்தன். பிரபுதேவாக்கிருக்குற மவுசு. பென்னி லாவா என்ற பேரில இருக்கிற வீடியோக்கள எல்லாம் நிறையப் பேர் பாத்து பின்னூட்டமும் போட்டிருக்கிறாங்கள்.

Anonymous said...

It is very interesting. Good to know people of other countries like it. But if Prabhu Deva has to make a name for himself as a dancer, he should make videos more professional. Frankly choreographies in our tamil movie songs are more humorous than serious. I have always felt that Prabhu Deva is not selecting the right costumes to highlight his dance moves. Look at Michael Jackson. He sometimes wears some outrageous clothes but they always enhance his dancing. They dont come in the way of the visibility of his movements. If Prabhu Deva doesnt make such right moves, like ARR did in the music industry, he would either be unknown to the outside world or he would simply be known as the clown dancer, not that it is a bad thing but his real talent for dance will be losing due credit.

piratheepan said...

சுவாரசியமான தகவலுக்கு நன்றி

டக்ளஸ்....... said...

விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பூ பற்றீய குறிப்பு வந்துள்ளது.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

ungal ahapakkam patriya thahavalai naan vikatan moolam arinthen mihavum payanullathaha irukirathu mikka nandri tvs50