இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பிளாக்கர் பிழை

பதிவுகளை வாசித்து கொண்டிருந்த போது பிளாக் எழுதுபவர்களுக்கு என்று பதிவர் சுமஜ்லாவின் பதிவு கண்ணில் பட்டது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இடுகைகள் தோன்றுவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்து இருந்தார். நான் பெரும்பாலும் பயர்பாக்ஸ் உபயோகிப்பது வழக்கம். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் எனது இந்த பிளாக் எப்படி தெரிகிறது என திறந்து பார்த்தேன். பிளக்கின் முகப்பு பக்கம் தெரிவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இடுகை பக்கங்களை தனியே திறந்து பார்க்கும் போது பக்கத்தில் தவறு இருப்பதாக அதே பிழை செய்தி வந்தது. அடுத்து "Page not found" என்று இடுகை பக்கம் மூடப்பட்டு விடுகிறது.

எதனால் இந்த பிழை வருகிறது என்று கூகிள் ஆண்டவரை கேட்டேன். அவர் "கவலை படாதே! பக்தா!! இது உனக்கு மட்டுமல்ல! பெரும்பாலான மக்களுக்கு நேர்ந்துள்ளது!" என்று இந்த பிளாக்கர் பக்கத்தை சென்று பார்க்க சொன்னார்.

பிளாக்கர் நிர்வாகம் இந்த பிழை வருவதை இன்னும் தீர்க்காத பிரச்சினையாக ஒப்பு கொண்டுள்ளது. பிளாக்கில் "Followers" gadget நிறுவி இருப்பதால் தான் இந்த பிரச்சினை வருகிறது என்று தெரிவித்து உள்ளார்கள். இத்தனை சரி செய்ய
பிளாக்கரின் Dashboard சென்று Layout --> Page Elements செல்லவும். "Follower" gadget ஐ நீக்கி விடவும். அல்லது உங்கள் சைடு பாரில் இறுதிக்கு கொண்டு சென்று நிறுவி விடவும் (இப்படித்தான் இந்த பிளாக்கில் செய்து உள்ளேன்) .


இப்போது பிரச்சினை தீர்ந்து விட்டது. பிளாக்கர் நிரந்தர தீர்வு தரும் வரை இதனை கடை பிடிப்போம்.

எனவே பிளாக்கில் "Follower" Gadget நிறுவி உள்ளவர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் உங்கள் இடுகை பக்கங்கள் சரியாக தெரிகிறதா? என்று சோதிக்கவும். பிழை வந்தால் சரி செய்யவும். இல்லையெனில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலம் உங்கள் இடுகையை பார்வையிடும் பார்வையாளரை நீங்கள் இழக்க நேரிடும். இன்னும் பெரும்பாலான இணைய பார்வையாளர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.

குறிப்பு : நான் சோதித்து பார்த்தது Internet Explorer 8.0 . இந்த பிழையை அறியச்செய்த பதிவர் சுமஜ்லாவிற்கு மிக்க நன்றி.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

17 comments:

Suresh said...

எதனால் இந்த பிழை வருகிறது என்று கூகிள் ஆண்டவரை கேட்டேன். அவர் "கவலை படாதே! பக்தா!! இது உனக்கு மட்டுமல்ல! பெரும்பாலான மக்களுக்கு நேர்ந்துள்ளது!" என்று இந்த பிளாக்கர் பக்கத்தை சென்று பார்க்க சொன்னார்.

TVS க்கு நகைச்சுவையும் வருது ;) அவ் சூப்பர்

Suresh said...

நேத்து தான் கடைசியில் இருந்து முன்னாடி வைத்தேன் இப்போ மறுபடி கடைசியா :-)

SUMAZLA/சுமஜ்லா said...

என் ப்ளாக் பற்றி லிங்க் கொடுத்து குறிப்பிட்டமைக்கு நன்றிங்க!
ஆனா, comments embeded below post ஆப்ஷன் கொடுக்க முடியவில்லை. இதை செக் பண்ணி பாருங்க! நானும் ஃபாலோவர்ஸை, கீழே இறக்கி முயல்கிறேன்!

சென்ஷி said...

தகவலுக்கு நன்றி தல.. ஆனால் என் மடிக்கணிணியில் சில நேரங்களில் ஒரே ஒரு பதிவரின் பதிவு மாத்திரம் நெருப்பு நரி உலாவியிலும் திறப்பதற்கு சிரமமாய் உள்ளது. :-(

கிரி said...

எனக்கும் இந்த பிழை உண்டு..உதவிக்கு நன்றி

VANJOOR said...

எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது..

உங்கள் தகவலுக்கு நன்றி ..

பழமைபேசி said...

நெருப்பு நரியிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது நண்பா!

கபிலன் said...

எனக்கும் இதே போல பிரச்சினை வந்தது. Followersa நீக்கிட்டேன். இருந்தும் பிரச்சினை வந்தது. என்னடான்னு பார்த்தா...Live Traffic Feeds...நான் உபயோகித்தது FEEDJIT. அதை நீக்கியவுடன் சரியாகிவிட்டது.

LOSHAN said...

நன்றி.. எனக்கும் இதே பிரச்சினை இன்னும் இருக்கு.. நான் என்னவோ எதோ என்று explorer பக்கம் போவதே இல்லை..

நாங்க Chrome ஆரம்பித்ததில் இருந்து chrome பக்கம் தான்..

The Rebel said...

Useful one..
Not a Big fan of I.E. though..

டிவிஎஸ்50 said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. பெரும்பாலானோர் நான் IE உபயோகிப்பதில்லை, அதனால் எனக்கு பிரச்சினை இல்லை என்று சொல்லி உள்ளீர்கள். :)

ஆனால் பெரும்பாலான இணைய மக்கள் இன்னும் IE உபயோகித்து வருகிறார்கள். அவர்கள் உங்கள் பிளாக் பார்வையாளராகவும் இருக்கலாம். இதனால் இழப்பு உங்கள் பிளாக்குக்கே

//சென்ஷி said...

தகவலுக்கு நன்றி தல.. ஆனால் என் மடிக்கணிணியில் சில நேரங்களில் ஒரே ஒரு பதிவரின் பதிவு மாத்திரம் நெருப்பு நரி உலாவியிலும் திறப்பதற்கு சிரமமாய் உள்ளது. :-(//

யார் அந்த பதிவர். இதில் ஏதும் உள்குத்து உள்ளதா?

// SUMAZLA/சுமஜ்லா said...

என் ப்ளாக் பற்றி லிங்க் கொடுத்து குறிப்பிட்டமைக்கு நன்றிங்க!
ஆனா, comments embeded below post ஆப்ஷன் கொடுக்க முடியவில்லை. இதை செக் பண்ணி பாருங்க! நானும் ஃபாலோவர்ஸை, கீழே இறக்கி முயல்கிறேன்!//

சுமஜ்லா, comments embeded below option கொடுத்து பார்த்தேன். ஆனால் கமெண்ட் பாக்ஸ் Alignment பிரச்சினை வருகிறது. இதனால் இல்லை. அது என் டெம்ப்லெட் பிரச்சினை.

// பழமைபேசி said...

நெருப்பு நரியிலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது நண்பா!//

பழமைபேசி தகவலுக்கு நன்றி. எனக்கு இந்த பிரச்சினை ஏற்படவில்லை. எப்படி சரி செய்தீர்கள்.

கபிலன், லோஷன், The rebel, Suresh, கிரி உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

கிரி said...

//பெரும்பாலான இணைய மக்கள் இன்னும் IE உபயோகித்து வருகிறார்கள். அவர்கள் உங்கள் பிளாக் பார்வையாளராகவும் இருக்கலாம். இதனால் இழப்பு உங்கள் பிளாக்குக்கே//

நீங்கள் கூறுவதை முற்றிலும் வழிமொழிகிறேன்

நாம் வேண்டும் என்றால் க்ரோம் பயன்படுத்தி இதில் இருந்து தப்பிக்கலாம்..ஆனால் நம் பதிவிற்கு வருபவர்களும் இதே போல நமக்காக மாற்றி கொள்வார்களா என்பது என் சந்தேகம் தான்

எனக்கு ஒரு சந்தேகம்

எனக்கு பயன்படுத்த க்ரோம் எளிதாக இருந்தாலும் IE ல இருப்பது போல ஃபான்ட் Bold ஆக ( Bold தேர்வு செய்யாமலே) இருப்பதில்லை.. மிக மெல்லிதாக உள்ளது இதனால் படிக்க கடுப்பாக உள்ளது. நானும் அனைத்து ஃபான்ட் ம் மாற்றி பார்த்து விட்டேன்,இதில் Bold எழுத்தாக மாற்றினால் ரொம்ப கொடுமையாக உள்ளது..

இதற்க்கு ஏதாவது வழி உண்டா! சரி செய்ய

டிவிஎஸ்50 said...

@கிரி

நீங்கள் எந்த இயங்குதளம் (Operating System) உபயோகித்து வருகிறீர்கள். நீங்கள் சொன்ன அதே பிரச்சினை நான் Windows XP யில் சந்தித்து இருக்கிறேன். Windows 7 இல் அந்த பிரச்சினை இல்லை. விண்டோஸ் விஸ்டாவிலும் அந்த பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன்.

தீர்வு என்று எதையும் முயன்றதில்லை. கண்டறிந்தால் சொல்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

நான் என்னுடைய http://hajvilakkam.blogspot.com ப்ளாகில் ஃபாலோவர்ஸை கடைசியாக வைத்தேன். ஒரு நாள் மட்டும் சரியாக இருந்தது. மீண்டும் பிரச்சினை தான். அதில் feedjit ம் இல்லை. மீண்டும், என் மெத்தடை பின்பற்ற ஓக்கே ஆகி விட்டது.

அன்புடன் அருணா said...

அச்சோ....எனக்கும் இப்படிப் பிரச்னை உள்ளதே!!! ரொம்ப நன்றிங்க!!

கிரி said...

//நீங்கள் எந்த இயங்குதளம் (Operating System) உபயோகித்து வருகிறீர்கள். நீங்கள் சொன்ன அதே பிரச்சினை நான் Windows XP யில் சந்தித்து இருக்கிறேன். Windows 7 இல் அந்த பிரச்சினை இல்லை. விண்டோஸ் விஸ்டாவிலும் அந்த பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். //

நான் புது ஃப்ரோபைல் உருவாக்கி (new user name) அதில் சென்றால் இந்த பிரச்சனை இல்லை. எழுத்துக்கள் நன்றாக தெரிகிறது.

இதை நான் இங்கு கூற காரணம் என்னை போல யாருக்கேனும் பிரச்சனை இருந்தால் இதை முயற்சித்து பார்க்கலாம் என்றே.

நன்றி

//SUMAZLA/சுமஜ்லா said...
June 3, 2009 7:37 AM

நான் என்னுடைய http://hajvilakkam.blogspot.com ப்ளாகில் ஃபாலோவர்ஸை கடைசியாக வைத்தேன். ஒரு நாள் மட்டும் சரியாக இருந்தது. மீண்டும் பிரச்சினை தான். அதில் feedjit ம் இல்லை. மீண்டும், என் மெத்தடை பின்பற்ற ஓக்கே ஆகி விட்டது//

எனக்கும் :-)

Anonymous said...

நான் பிளவேர் அமைப்பதற்கு முன்பிருந்தே இந்தப்பிரச்சனை உள்ளது
அதற்க்கு என்னவழி என்று எந்த ஆண்டவனாவது சொல்லுங்கோ
-முதல்மனிதன்-
www.muthalmanithan.com
mail: aha_haah@yahoo.com