'அப்புறமா படிக்க' பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சி

இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் போது காணும் பக்கங்களை உடனுக்குடன் அனைத்தையும் படிப்பது இயலாத காரியம். சில முக்கிய பக்கங்களை பின்பு படிக்கலாம் என்று குறித்து வைக்கலாம். இது போன்ற தருணங்களில் பயர்பாக்சில் புக்மார்க்ஸ் உபயோகிப்பதுண்டு.

இதில் என்ன பிரச்சினை என்றால் படித்து முடித்தவற்றை உடனே நீக்காவிடில் நாளடைவில் புக்மார்க்ஸ் நிரம்பி வழிந்து விடும். பின்பு மொத்தமாக நீக்க முயலும் போது தேவையானவை / தேவையற்றவை போன்றவற்றை பிரித்து நீக்குவது கடினமாக இருக்கும்.

இதனை எளிதாக்க பயர்பாக்சில் ஒரு நீட்சி (Extension) உள்ளது. Read It Later என்பதுதான் அது. இந்த நீட்சியை இங்கு சென்று தரவிறக்கி உங்கள் பயர்பாக்சில் நிறுவி கொள்ளுங்கள்.

பயர்பாக்சின் அட்ரஸ் பாரில் புதிய Tick ஐகான் பார்க்க முடியம். வலது ஓரத்தில் மற்றுமொரு புதிய Read It Later ஐகான் இருக்கும். இணைய பக்கங்களை காணும் போது டிக் ஐகானை கிளிக் செய்து அந்த பக்கத்தை பின்பு படிக்க குறித்து வைத்து கொள்ளலாம். குறித்து வைத்த பக்கங்களை படித்து முடித்த பின்பு இதே டிக் ஐகானை கிளிக் செய்து பட்டியலில் இருந்து நீக்கி விடலாம்.


ஒரு இணையபக்கத்தில் உள்ள லிங்க்குகளை வரிசையாக ஒவ்வொன்றாக குறித்து வைத்து கொள்ள Alt + M கீகளை அழுத்தி Save Mode Active செய்து கொள்ளுங்கள். இனி நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு பக்கமும் குறித்து வைக்கப்பட்டு விடும்.


வலது ஓரத்தில் உள்ள Read It Later ஐகானை கிளிக் செய்தால் நாம் குறித்து வைத்துள்ள பக்கங்களை பார்க்கலாம். வரிசைப்படுத்தி கொள்ளும் வசதியும் அங்குண்டு.


இன்னொரு முக்கிய வசதியும் இதில் உண்டு. Read Offline. நீங்கள் குறித்து வைத்துள்ள பக்கங்களை பயணிக்கும் போதோ / இணைய இணைப்பு இல்லாத போது படிக்க முடியும். Read Offline கிளிக் செய்து கொள்ளுங்கள். நீங்கள் குறித்து வைத்துள்ள பக்கங்கள் எல்லாம் கணினியில் சேமிக்கப்பட்டு விடும்.


பின்பு இணைய இணைப்பு இல்லாத போது, பயர்பாக்சில் File மெனுவில் Work Offline கிளிக் செய்து கொள்ளவும். பின்பு நீங்கள் குறித்து வைத்துள்ள பக்கங்களை படிக்கவும்.

இந்த வீடியோவில் எளிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த நீட்சியை உபயோகித்து பாருங்கள். அப்புறமா படிக்க வேண்டியவற்றை குறித்து வைத்து கொண்டு, படித்து விட்டு நீக்கி விடுங்கள்.

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

0 comments: