கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல்

கோப்புகளை பகிர கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் . உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், கோப்புகள், பாடல்கள் வைத்து உள்ளீர்கள். அவற்றை உங்கள் உறவினர் / நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். கோப்பு பகிரும் தளங்கள் (File Sharing Sites) , பிகாஸா போன்ற புகைப்படம் பகிரும் தளங்கள் மூலம் இணையத்தில் ஏற்றி அவற்றை பகிர விருப்பமில்லை.

உங்கள் முக்கிய கோப்புகளை இல்ல கணினியில் (Home PC) வைத்து உள்ளீர்கள். இல்லத்தில் உள்ள கணினியின் கோப்புகளை உங்கள் அலுவலகத்தில் இருந்து அணுக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஒரு இணைய தளம் உருவாக்கி அதனை HTML கோப்புகளாக உங்கள் கணினியில் வைத்து உள்ளீர்கள். அவற்றை இணையத்தில் ஏற்றி இணையதளமாக அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும் எனில் Web Hosting சேவை காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். அல்லது இலவச சேவைகளை தேடி அலைய வேண்டி வரலாம்.

இது போன்ற தருணங்களில் மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் உங்கள் கணினியையே இணைய வழங்கியாக (Web Server) மாற்றி செய்ய இயலும். இணைய உலாவிகளில் சிறப்பிடம் பிடித்த ஒபேரா (Opera) இதற்கான வசதியை Unite என்ற பெயரில் வழங்குகிறது. இத்தனை உபயோகிக்க ஆழ்ந்த இணையம் சார்ந்த அறிவு தேவை இல்லை.

இதனை இங்கு சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

எப்படி உபயோகிப்பது? என்பதனை இந்த வீடியோ எளிய முறையில் விளக்குகிறது.


மெனு பட்டைக்கு கீழே Panels என்பதனை கிளிக் செய்து மூன்றாவதாக உள்ள Unite கிளிக் செய்து கொள்ளுங்கள். File Sharing, Photo Sharing உள்ளிட்ட சேவைகளை நீங்கள் ஸ்டார்ட் செய்து கொள்ளவும். புதிய உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள்.


எந்த Folder ஐ பகிர வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு ஒரு URL , Password கிடைக்கும். அதனை நீங்கள் பகிர வேண்டியவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் அந்த URL ஐ அணுகுவதன் மூலம் Password அளித்து உங்கள் கோப்புகளை பார்க்க / தரவிறக்கி கொள்ள முடியும். மேலே கொடுத்துள்ள வீடியோவை பாருங்கள் எளிய முறையில் புரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக கோப்புகள் / புகைப்படங்களை பகிரும் போது உங்கள் கணினி இயக்கத்தில், இணைய இணைப்புடன் இருக்க வேண்டும். உங்கள் கோப்புகள் வேறெங்கும் ஏற்ற (Upload) படுவதில்லை. உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக உபயோகப்படுத்த படுகிறது. எனவே உங்கள் கணினி இயக்கத்தில் (ON) இருப்பது முக்கியம்.

நேரமின்மை காரணமாக மிக விரிவாக தற்போது எழுத இயலவில்லை. புரியாதவர்கள் பின்னூட்டங்களில் சுட்டி காட்டுங்கள். இனி வருபவற்றை மிக விரிவாக எழுதுகிறேன். உங்கள் கருத்துகளை கூறினால் தவறுகளை திருத்தி கொள்ள முடியும்.

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

15 comments:

piratheepan said...

நன்றி.

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

Gokul said...

I tried this. it works fine. thanks for sharing

G.R said...

நல்ல தகவல்.. நன்றி..

நிசா ஆட்ஸ் said...

நன்றிகள் கோடி அண்ணா, நான் கணினி வடிமைப்பாளன் பல வருட அனுபவங்கள் எனக்குண்டு. அதன் மூலம் வடிமைப்புத் துறையில் பல நுட்பங்களையயும், புதிய உத்திகளையும் அறிந்துள்ளதாக உணர்கின்றேன். அடிப்படையில் நான் ஒரு ஓவியனும் கூட. எனக்குத் தெரிந்தவற்றை வடிவமைப்புத் துறையில் ஆர்வமுள்ளோருடன் பகிர்ந்து கொள்ளவிரும்பி ஒரு Blog இனை வடிமைத்தும் வருகின்றேன். எனினும் அதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றேன். (வடிமைப்புத்துறையில் இருந்தாலும் வன்பொருள் மற்றும் இணைய வடிவமைப்புத் துறையில் போதிய அனுபம் எனக்குக் குறைவாக இருப்பதாகவே எண்ணுகின்றேன்), குறிப்பாக Blog இன் அடிப்படை அமைப்பை மாற்றியமைக்க விரும்புகின்றேன். மேலும் பதிவிடும் போது படங்களை ஏற்றும்போது அதிக நேரத்தினையும் உரிய இடத்தில் செருகுவதற்கும் சிரமமாக இருக்கின்றது, மேலும் Blog இன் மேற்பகுதியில் Home, Business, News, Sofware, Designs etc... இப்படிப் பல லிங்குகளை இணைக்க விரும்புகின்றேன். உங்களது பதிவுகள் மிகவும் அருமையாகவும் பயன் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன, அவற்றிலிருந்து பல விடயங்களை தற்போது நான் பயன்படுத்துகின்றேன். உ-ம் Downloard manager, Hard disk Partician, OCR etc... இப்படிப்பல பல பல,,, தொடர்ந்து சிறந்த பதிவுகளையும் எனது கேள்ிவிக்கான பதிலையும் எதிர்பார்க்கின்றேன். எனது மெயில் nisaads@yahoo.com முடிந்தால் எனது மெயிலுக்கோ அல்லது உங்களது பதிவின் மூலமாகவோ என்னைத் தெளிவுபடுத்துவீர்கள் என எண்ணுகின்றேன்.
நன்றி

நிசா

ஷாகுல் said...

மிக்க நண்றி.

இது வரை Catalouges எல்லாம் USB பரிமாறி கொண்டிருந்தோம். வைரஸ் தொல்லை வேறு. இப்போ கவலை இல்லை.

இதில் அனுமதிக்கப்பட்ட file size எவ்வள்வு?

வடுவூர் குமார் said...

அட! நன்றாக இருக்கும் போல் இருக்கே!நன்றி.

thiruthiru said...

என் முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி
இந்த வசதியை ஏற்கனவே www.filesovermiles.com வழங்கிவிட்டது. நீங்கள் எந்த ப்ரவுசரையும் பயன்படுத்த அது அனுமதிக்கும். ஆனாலும் இவையெல்லாம் பாண்ட்வித் கணக்கு பார்த்து இணையத்தில் உலாவும் சாமானியருக்கு அதிகம் பயன்படாது.

Anonymous said...

மிகவும் உபயோகமான பதிவு. நன்றி.
ஜெய்

ரெட்மகி said...

மிக நன்று .... நன்றாக எழுதுகிறிர்கள்

உங்கள் blog தான் என்னையும் blog எழுத தூண்டியது.
நான் blog ஆரம்பித்துவிட்டேன் ,சில பதிவுகளும் எழுதிவிட்டேன்.
ஆனால், இப்போது ஒரு சின்ன சிக்கல் , feedburner பற்றி கொஞ்சம்
எழுதுங்களேன் என்னை போன்ற புதியவர்களுக்கு அது மிகவும்
பயன்படும் .

enia said...

ஹாய் நன்றாக இருக்கிறது நன்றி நன்றி

டிவிஎஸ்50 said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. ரெட்மகி மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் feedburner பற்றி எழுதுகிறேன்

piratheepan said...

நல்ல தகவல் நன்றி.

All in All said...

அண்ணா வணக்கம் ,நான் பிளாக்கர் உருவாக்க உங்களுடிய உதவி வேண்டும் அண்ணா.

All in All said...

உங்கள் blog தான் என்னையும் blog எழுத தூண்டியது.
நான் blog ஆரம்பித்துவிட்டேன் ,சில பதிவுகளும் எழுதிவிட்டேன்.
ஆனால், இப்போது ஒரு சின்ன சிக்கல் , feedburner பற்றி கொஞ்சம்
எழுதுங்களேன் என்னை போன்ற புதியவர்களுக்கு அது மிகவும்
பயன்படும் .