
இணையத்தை பொறுத்தவரை நாம் அதிகம் உபயோகப்படுத்துவது இணைய உலாவிகளைத்தான். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ் , குரோம் என்று ஒவ்வொன்றும் அதற்குரிய பிரத்தியேக டிசைன்களில் வருகிறது. பயர்பாக்சை பொறுத்தவரை அதற்குரிய வடிவமைப்புகளை (Themes) மாற்றி கொள்ள முடியும்.
புதிய வடிவமைப்புகளை பெற இந்த லின்க்கில் சென்று இலவசமாக பெற்று கொள்ளவும். பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் Personas எனும் தளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார். அதனையும் உபயோகித்து பாருங்கள்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் புதிய பதிப்பாக வைத்துள்ள IE8 உடைய டிசைன் கவரும் வகையில் அமைந்துள்ளது. அதே வடிவமைப்பை உங்கள் பயபாக்சிற்கு கொடுக்க நீங்கள் விரும்பினால் இந்த லின்க்கில் சென்று Ie8Fox தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.

இவ்வாறு நீங்கள் நிறுவி உள்ள பயர்பாக்ஸ் தீம்களை (Themes) Tools மெனுவில் Add-ons --> Themes சென்று நீக்கி / மாற்றி கொள்ளுங்கள்.

பலர் பின்னூட்டங்களில் வாழ்த்துக்கள், தகவல்கள், சந்தேகங்கள், கேள்விகள் எழுப்பி உள்ளீர்கள். நன்றி. நேரமின்மை காரணமாக அவற்றிற்கு உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை :( . ஒரு வாரத்தில் என்னால் முடிந்த அளவு அவற்றிற்கு பதில் அளிக்க முயலுகிறேன்.
3 comments:
Hai this one very good than themes,try it out
http://www.getpersonas.com/
hi
it is very useful info
Hi....
Superb boss.....
Post a Comment