மைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்டிவைரஸ் மொர்ரோ

தனிப்பட்ட உபயோகங்கள், வர்த்தக தேவைகள் என்று கணினியை உபயோகிக்கும் போது அதன் பாதுகாப்பு முக்கியமாகிறது. வைரஸ், டிரோஜன், ஸ்பைவேர் என்று கணினியின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகவே உள்ளது. இயங்குதளங்களுக்கு (Operating System) இருக்கும் தேவைகளை போலவே ஆண்டிவைரஸ் மென்பொருள்களுக்கும் நல்ல தேவை உள்ளது. Symantec, Kaspersky, McAfee என்று பல நிறுவனங்களும் இத்துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.மைக்ரோசாப்ட்டும் வணிக ரீதியில் Windows Live Onecare எனும் ஆண்டிவைரஸ் மென்பொருளை விற்று வருகிறது.

விரைவில் விண்டோஸ் கணினிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் பொறுத்து புதிய இலவச ஆண்டிவைரஸ் மென்பொருளை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து உள்ளது. அதற்கு மொர்ரோ (Morro) என்று பெயரிட்டு உள்ளது.

தற்போது விற்று வரும் Windows Live Onecare விற்பனையை நிறுத்த முடிவு செய்து உள்ளார்கள். புதிய மொர்ரோ ஆண்டிவைரஸ் விண்டோஸ் எக்ஸ்பி , விஸ்டா, விண்டோஸ் 7 போன்றவற்றில் இயங்கும்படி உருவாக்கப்பட்டு உள்ளது. வைரஸ், டிரோஜன், ரூட்கிட், ஸ்பைவேர் உள்ளிட்ட அனைத்து வில்லங்க மென்பொருள்களை நீக்கும் வண்ணம் இது இருக்கும் என்கிறார்கள். இதன் பீட்டா பதிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


தற்போது ஆண்டிவைரஸ் மென்பொருள்களை விலை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதால், அதனை இலவசமாக அளித்தால் தன் நிறுவனத்தின் இயங்குதளங்கள் (OS) விற்பனையை கூட்டலாம் என்று மைக்ரோசாப்ட் கணக்கு போடுகிறது. அது நடக்கலாம். எப்படியோ பயனர்களுக்கு நல்ல இலவச ஆண்டிவைரஸ் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

பில்கேட்ஸ் சார், அப்படியே வணிகரீதியில் செயல்படாத இல்ல பயனர்களுக்கு (Home Users) உங்க இயங்குதளத்தை (Operating System) இலவசமா தந்தா ரொம்ப நல்லா இருக்கும்.

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

5 comments:

தமிழ்நெஞ்சம் said...

s u p e r

//பில்கேட்ஸ் சார், அப்படியே வணிகரீதியில் செயல்படாத இல்ல பயனர்களுக்கு (Home Users) உங்க இயங்குதளத்தை (Operating System) இலவசமா தந்தா ரொம்ப நல்லா இருக்கும்.

Surabhi said...

உங்களுடைய இணைய தளம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது. ஆரம்பக் கல்வியை தமிழில் அனுபவித்துப் பயின்ற நான், பின்பு ஆங்கிலத்தில் பயிலும் போது, ஆனந்தம் காணமல் போய் கல்வி வெறும் கடமையாயிற்று. எளிய தமிழில், பல்வேறு தொழில் நுட்பம் பற்றிய(on various technical topics) உங்களுடைய பதிவுகளை படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுடைய முயற்சிக்கு எனது பாராட்டுகள்.

Anonymous said...

நாந்தன் முதல்

இந்த கட்டுரையை காப்பி அடிச்சிட்டானுங்க.

http://annai-illam2.blogspot.com/2009/06/blog-post_797.html

இதுக்கு பயந்துதான் எழுதறதை குறைச்சிட்டேன்.

அப்புறம் நல்லா தூங்கறீங்களா? எனக்கு தூங்கக் கூட நேரம் கிடைப்பதில்லை.

டிவிஎஸ்50 said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

@தமிழ்நெஞ்சம்
தொடர் வருகைக்கு மிக்க நன்றி

@சுரபி
உங்கள் கருத்து மிகுந்த திருப்தியை தருகிறது.

@shirdi.saidasan@gmail.com

பதிவுகள் அடுத்தவரால் எடுக்கப்படுவது கவலையளிக்கும் விசயம்தான். எழுதுவதை நிறுத்தாதீர்கள். உங்களுக்காக எழுதுங்கள்.

இது தொடர்பாக சொல்ல வேண்டியது நிறைய உள்ளது. தனி இடுகை எழுத முயல்கிறேன்.

Suvaiyaana Suvai said...

its very useful tips
http://susricreations.blogspot.com