FeedBurner Vs தமிழ்மணம் சிக்கல்களுக்கு தீர்வு

பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க என்று Feedburner பற்றி எழுதிய இருந்த இடுகை அதிக வரவேற்பை பெற்றது. பெரும்பாலானோர் உபயோகப்படுத்த ஆரம்பித்தனர்.

ஆனால் பின்னூட்டத்தில் பதிவர்கள் சுரேஷ்கண்ணன், முத்துராமலிங்கம் ஆகியோர் இந்த மாற்றத்தால் தமிழ்மணம் திரட்டியில் இடுகைகளை இணைப்பதில் பிரச்சினைகள் தோன்றுவதாக தெரிவித்தனர். அதனை ஆராய்ந்ததில் பிரச்சினைகளுக்கு காரணம் என்ன? , தீர்வும் கண்டறிய முடிந்தது. அதனை இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

பிரச்சினைகள் என்ன?

வலைப்பதிவின் RSS Feed செயல்பாடுகளை Feedburner க்கு மாற்றி விட்ட பிறகு. தமிழ்மணத்தில் இடுகைகளை இணைப்பதில் பிரச்சினைகள். இடுகை தமிழ்மணத்தில் இணைந்தாலும் இடுகையில் தோன்றும் கருவி பட்டையில் வாக்களிக்கும் வசதி தோன்றாமல் முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தோன்றும். பின்பு எத்தனை முறை "அனுப்பு" என்பதை அழுத்தினாலும் "புதிய இடுகைகள் காணப்பட வில்லை" என்றே வரும்.

தமிழ்மணத்தில் இடுகையின் பின்னூட்டங்கள் திரட்டப்பட மாட்டது. இந்த பிரச்சினை தமிழ்மணம் அழித்து வந்த சிறப்பு சேவைகளில் Feedburner உபயோகிப்பவர்களுக்கு பின்னடைவை தந்தது.


பிரச்சினையின் காரணம் என்ன?

Feedburner -ல் நீங்கள் புதிய feed உருவாக்கும் போது Item Views, Item Link Clicks போன்றவற்றை கண்டறியும் பொருட்டு Feedburner உங்கள் வலைப்பதிவின் இடுகைக்கான URL - ஐ புதிதாக மாற்றி விடுகிறது. தமிழ்மணம் போன்ற திரட்டிகள் உங்கள் RSS Feed போன்றவற்றை அடிப்படையாக வைத்து இயங்குகின்றன. Feedburner உங்கள் இடுகையின் URL-ஐ மாற்றும் போது தவறுகள் நிகழுகின்றன.

உதாரணத்திற்கு பதிவர் ஆ.முத்துராமலிங்கம் அவர்களின் பென்சில் என்ற வலைப்பதிவை எடுத்து கொள்வோம். அவர் உருவாகிய Feedburner RSS Feed URL : http://feeds.feedburner.com/asuda5posts . அந்த RSS Feed -ல் முதல் இடுகை மீன் தொட்டி. >மூன்று கவிதைகள் க்கான URL http://asuda5.blogspot.com/2009/06/blog-post_25.html என்று இருக்க வேண்டும். ஆனால் http://feedproxy.google.com/~r/asuda5posts/~3/DwobOyYKGaM/blog-post_25.html என்று வருகிறது.

உங்கள் இடுகை RSS Feed -ல் எத்தனை முறை கிளிக் (Item Click) செய்யப்பட்டது என்பதை கணக்கிட Feedburner உங்கள் URL ஐ மாற்றி விட்டது. தமிழ்மணத்தில் இந்த URL பகிரப்படும் போது சிக்கல்கள் உண்டாகிறது. பிரச்சினைக்கு இதுதான் காரணம்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன?

Feedburner -ல் உள்ள வசதிகளான Item Views, Item Link Clicks போன்ற வசதிகளை நீக்குவதன் மூலம் சரி செய்ய முடியும்.

Feedburner தளத்துக்கு சென்று Feed ஐ செலக்ட் செய்து கொண்டு அதில் Configure Stats என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

அடுத்து தோன்றும் பக்கத்தில் Item Views, Item Link Clicks , Item enclosure downloads போன்ற ஆப்சன்கள் செலக்ட் ஆகி இருந்தால் அவற்றை எடுத்து விட்டு Save செய்து கொள்ளவும். இனி RSS Feed -ல் உங்கள் URL கள் பழைய Default URL களாக மாறி இருக்கும்.

அடுத்து Feedburner RSS Feed URL (உ.தா http://feeds.feedburner.com/asuda5posts) ஐ திறந்து பார்க்கவும். இடுகைகளுக்கான URL http://feedproxy.google.com/~r/ என்று ஆரம்பிக்காது. உங்கள் வலைப்பதிவின் URL லோடு ( உ.தா. http://asuda5.blogspot.com/2009/ ) ஆரம்பிக்கும் . உடனடியாக மாற்றம் தெரியவில்லை என்றால் பொறுத்திருக்கவும். இது அப்டேட் ஆக சில நிமிடங்கள் ஆகலாம்.

அடுத்து பழைய இடுகையில் சொல்லி இருந்தபடி இதனை உங்கள் வலைப்பதிவின் நிரந்தரமான RSS Feed URL ஆக மாற்ற வேண்டும். இதற்கு உங்கள் பிளாக்கர் Dashboard -ல் Settings --> Site Feed --> Post Feed Direct URL என்பதில் உங்கள் புதிய Feedburner RSS Feed Url அளித்து சேமிக்கவும். இனி உங்கள் வலைப்பதிவுக்கான RSS Feeds வசதியை FeedBurner கவனித்து கொள்ளும்.


இப்போது மீண்டும் உங்கள் இடுகைகளை தமிழ்மணத்தில் இணைத்து பாருங்கள். சிக்கல் இல்லாமல் இணையும். பின்னூட்டங்கள் திரட்டப்படும். இதனால் உங்கள் RSS Feed Readers கணக்கிடுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.

இத்தனை செயல்படுத்தி பார்க்கவும். மேலும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் தயங்காமல் கூறவும் தீர்வு தர முயல்கிறேன். பிரச்சினைகள் இருப்போர் உங்கள் Feedburner RSS Feed உரல் ஐ பின்னூட்டத்தில் தரும்படி கேட்டு கொள்கிறேன்.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

38 comments:

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி நண்பரே, முயற்சி செய்து பார்க்கிறேன்.

Menaga Sathia said...

என்னாலையும் தமிழ்மணம் பட்டையை அனுப்பமுடியல.உங்களின் இந்த பதிவைப் படித்து மாற்றம் செய்தும் அனுப்பமுடியல..என்ன காரணம்?என் ப்ளாக்கின் முகவரி
http://sashiga.blogspot.com

Anonymous said...

நன்றி

அன்புடன் அருணா said...

எனக்கும் பிரசினை உள்ளது....இந்த முறையை முயன்று பார்க்கிறேன்...நன்றி..

டிவிஎஸ்50 said...

@Mrs.Menagasathia

இப்போது தமிழ்மணம் முகப்பில் சென்று பாருங்கள் . உங்கள் இடுகை தெரிகிறது. இணைத்து விட்டேன்.

உங்கள் Feedburner feed url பின்னூட்டத்தில் அளியுங்கள். நான் சோதிக்கிறேன்.

அடுத்து புதிய இடுகை போட்டு சில நிமிடங்கள் தாமதித்து இணைத்து பாருங்கள்.

பட்டை மூலம் இணைக்க முடியவில்லை எனில் , தமிழ்மணம் முகப்பு பக்கம் சென்று அங்குள்ள "இடுகைகளைப் புதுப்பிக்க" பெட்டியில் உங்கள் வலைப்பதிவு URL http://sashiga.blogspot.com கொடுத்து "அளி" கிளிக் செய்யவும்.

இடுகைகள் இணைகிறதா என்று பாருங்கள். பிழை வந்தால் என்ன வருகிறது என்று தாருங்கள். மற்றவர்களுக்கு உதவ உபயோகமாய் இருக்கும்.

Menaga Sathia said...

நன்றி சகோதரரே!! இடுகையை தமிழ்மணத்தில் இனைத்தற்க்கு.என் feedberner feed url http://feeds.feedburner.com/Sashiga

அடுத்த புதிய இடுகை தமிழ்மணத்தில் நீங்க சொல்லியவாறு செய்கிறேன்.என்னவென்று பின்னூட்டத்தில் கூறுகிறேன்.மிக்க நன்றி உங்களின் அனைத்து இடுகைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

sarathy said...

நன்றி தலைவரே...

நான் செயல்படுத்தி விட்டேன்..

பயனுள்ள பதிவு மட்டுமல்ல. எளிதில் புரிந்துகொள்ளும்படியாக உங்கள் விளக்கம் அருமை...

ஆ.சுதா said...

முதலில் நன்றி. பிரச்சனையை கூரிய உடன் அதற்கான விளக்கம் தந்து பதிவிட்டதற்கு.

நீங்கள் சொல்லியது போல் செய்துவிட்டேன். மீண்டும் ஏதேனும் பிரச்சனை எனில் பிண்ணூட்டத்தில் தெரிவிக்கின்றேன்.


மிக்க நன்றி, உங்கள் சேவை மிகவும் உதவிகரமானது.

மதிபாலா said...

அன்பு நண்பருக்கு...

உங்கள் பதிவினைக் கண்டுதான் நான் feedburner ல் இணைந்தேன்...

அதற்கு நன்றி..

இதே பிரச்சினை எனக்கும் இருக்கிறது. நீங்கள் கூறிய முறையை செய்து பார்க்கிறேன்.

உங்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது...

உங்கள் உடனடி திருத்தமும் மிக மெச்சத்தக்கது.

நன்றி நன்றி நன்றி...

Suresh Kumar said...

நன்றி நண்பரே நல்ல தகவல் முயற்சிக்கிறேன்

Menaga Sathia said...

சகோதரரே என்னுடைய சில பதிவுகளை ஆட்டோமட்டிக் போஸ்ட் செய்தால் போஸ்ட் ஆகமாட்டேங்குது.என் டைம் செட்டிங் பாரிஸ் டைம்ல வைத்திருக்கேன்.நான் போஸ்ட் செய்தால் தான் போஸ்ட் ஆகுது,அதுமட்டுமில்லாமல் ரிடர்ஸ் லிஸ்ட்ல படமும் வரல.என்ன காரணம்,ஆட்டோமெட்டிக்காக எப்படி போஸ்ட் செய்வதுன்னு சொல்லுங்க?

Subash said...

நல்ல பதிவு நண்பா.
தமிழ்மணம் அட்மினுக்கு மெயில் ஒன்று தட்டிவிட்டால் அவர்களே விரைவில் தளத்திற்கான புதிய feedburner url ஐ அப்டேட் பண்ணிவிடுவார்கள். நான் அப்படித்தான் செய்துள்ளேன்.

கிரி said...

தமிழ்மணத்தில் feed மாற்றிய பிறகு எனது பெயர் தெரிவதில்லை அதற்க்கு என்ன காரணம் என்று கூற முடியுமா? இது சரி ஆகவில்லை என்றால் feed ஐ எடுப்பதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை :-(

KABEER ANBAN said...

உபயோகமான பதிவு.

என்னுடைய பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்குமா பார்த்து சொல்லுங்கள்.

http://nirmal-kabir.blogspot.com/2009/04/google-and-feed-burner.html

நன்றி

மணிவர்மா said...

பல முறை முயன்றும் தமிழ் மணத்தில் இணைய முடியவில்லை. பெரும் பிரச்சனையுள்ளது.

மணிவர்மா said...

நண்பரே, பலமுறை முயர்ச்சித்தேன்.
http://feeds.feedburner.com/komani
இது தான் என் பீடர் முகவ்ரி.
வலையிதழ் முகவரி:
http://komanivarma.blogspot.com/
நான் சோர்ந்து போய்விட்டேன். உதவி செய்யவும்.
மணிவர்மா

Anonymous said...

அன்புடன் TVS50 உங்களுடைய பிளாக்கர் டெம்பிளேட்டை எங்கிருந்து தரவிறக்கம் செய்தீர்கள். அதன் முகவரி தரமுடியுமா?

மேலும் ஒவ்வொரு இடுகையின் கீழே "மேலும் வாசிக்க" என்று அமைப்பது எப்படி என்ற சந்தேகத்தையும் தீர்த்துவைக்க வேண்டுகிறேன்.


நன்றி,
அன்புடன்,
சக்திவேல்

கிரி said...

// ☼ வெயிலான் said...
கிரி,

ரொம்ப ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க :)//

;-)

=======================================================

// குறை ஒன்றும் இல்லை !!! said...
என்ன ராஜ்னே கூப்புடுங்கண்ணே!!!//

கூப்பிட்டு விடுவோம் :-)

கிரி said...

போன பின்னூட்டம் தவறுதலாக போட்டு விட்டேன், இக்னோர் செய்து விடவும் :-)

Tech Shankar said...

Hi. Good Post.

For Me I am doing the following procedure every time - if my posts are not updated in Tamilmanam.net

here is the steps.

http://feedburner.google.com/fb/a/myfeeds

then
select your feed

click on Troubleshoot

Click on : pinging FeedBurner

Type Web site / blog url in the textbox

Press : Ping Feedburner.

For me, If my post is not updating in Tamilmanam, I am doing this procedure.
After doing this, Again I need to submit my site in Tamilmanam. Immediately it will be added to Tamilmanam.

மதிபாலா said...

எனது பீடுபர்னரில் நீங்கள் சொன்ன item clicks வகையறாக்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை

நண்பரே.

ரெட்மகி said...

உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது

நீங்கள் கூறியதை பின்பற்றி feedburner-ல் மாற்றம்
செய்து விட்டேன் .இப்போது தமிழ்மணம் கருவிப்பட்டை
மூலம் என்னால் பதிவுகளை இணைக்க முடிகின்றது,
ரொம்ப நன்றி ஆனால்,
கருவிபட்டையில் உள்ள மற்ற பொத்தான்கள் (Pdf,woed,voting),வேலை
செய்யவில்லை ,இதற்கு என்ன காரணமாக இருக்கும் ?
நான் தேடிக் கொண்டேயிருக்கிறேன் ஆனால் பதில்
தான் இல்லை .....

SUMAZLA/சுமஜ்லா said...

நீங்கள் கூறிய இந்த முறையை முயன்றும் தமிழ்மணத்தில் இணைய முடியவில்லை.

என்னுடைய feed url:http://feeds.feedburner.com/sumazla.

என்னுடைய செட்டிங்ஸில், feed redirect url ல் ஒன்றும் கொடுக்காமல் விட்டால் இணைகிறது. கொடுத்தால், இணைவதில்லை. அதனால், இப்போ ஒன்றும் கொடுக்கவில்லை. இதனால் பாதிக்குமா?

நேற்று, 61 readers என்று இருந்தது. இன்று 2 என்று மாறி விட்டது. என்ன காரணம்? ஒரே நாளில் அவ்வளவு குறையுமா?

ஷாகுல் said...

நீங்கள் சொன்னது போல் செய்துவிட்டேன் ஆனால் என்னுடைய பின்னூட்டங்கள் திரட்டப்படுவதில்லை. தமிழ்மன முகப்பில் பதிவின் கீழ் என்னுடய பெயரும் வருவதில்லை. உதவமுடியுமா? நண்றி

Post Feed Redirect URL :
http://kointha.blogspot.com/feeds/posts/default?alt=rss

மு.இரா said...

அய்யா, வணக்கம் feed burner-ல் என்னை இணைத்து விட்டேன். தமிழ்மணத்தில் அனுப்ப பிரச்சனை வந்தது. மீண்டும் நீங்கள் கூறியது போலவே feed burner-யை edit செய்து அனுப்பினேன். வேலை செய்த்து. ஆனால் தமிழ்மணத்தில் என் இடுகையில் எனது பெயர் வரவில்லை. இப்போது இடுகையையே ஏற்று கொள்ள மாட்டேன்குது. நீங்கள் சொன்ன அனைத்து வழியையும் செய்துபார்த்து விட்டேன். வேறு வழி சொல்லுங்களேன். எனது வலைபூ: www.tamizhpadai.blogspot.com
Post Feed Redirect URL: http://feeds.feedburner.com/tamizhpadai

மு.இரா said...

அப்புறம் அய்யா... Google Ads பற்றி நீங்கள் அறிவீர்களா? நான் கடந்த ஒரு வருடமாக பல்வேறு வித்த்தில் முயற்சி செய்து விட்டேன். கிடைக்கவில்லை. ஒரு வேளை Blogspot -க்கு தர மாட்டார்களோ? இல்லையே... நிறைய blogspot-ல் google ad-யை கண்டு இருக்கிறேன். இதை பற்றி தெரிந்தால் அனைவருக்கும் வருமானம் ரீதியாக, சப்போர்ட் கிடைக்கும். வலைபூ பதிவர்களும் அதிகரிப்பார்கள். இணையத்தில் அதிக தமிழ் நண்பர்கள் அதிகரித்தால் நன்றுதானே...

தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ளவும்.

சண்ட கோழி said...

Hai,

Do You want Goggle Adsense For Your Website or Blog?Just Visit Here.

http://www.ennainambalam.blogspot.com

Venkatesh Kumaravel said...

http://tamilmanam.net/todays_posts.php?pageno=16
இங்கே என் இடுகை இருக்கிறது. கார்க்கியின் இடுகைக்கு முந்தைய இடுகை: விக்கி க்றிஸ்டினா பார்சலோனா. ஆனால், இந்த பதிவரின் பிற பதிவுகள் காணப்படவில்லை என்று வருகிறது... என்ன செய்யலாம்?

Anonymous said...

www.tamil.com.nu


Very nice

www.tamil.com.nu

தினேஷ் said...

மிக்க நன்றி..

Santhosh said...

தகவலுக்கு நன்றி நன்றி நன்றி..இந்த விவரம் தெரியாம ரொம்ப நாளா டரியலாகிகொண்டு இருந்தேன்..நொம்ப நன்றி...

கேதாரன் said...

என்ன தோழரே ரொம்ப நாளா காணவில்லை

Anonymous said...

தமிழ் " ஐஸ்வரியா " font -ஐ எங்கு டவுன்லோடு செய்ய முடியும். உதவ முடியுமா?

marutharasan said...

hi friend, i need one help.
I need to recover my files.i have formatted two days before. Is there any software availble recover some files.Kindly help me.

தமிழ் சிகரம் said...

வணக்கம்!! "தமிழால் இணைவோம் தமிழராய் உயர்வோம்" நண்பரே ரிவிஸ்50 இன்றுதான் தங்களின் வலைப்ப+வனை பார்த்தேன் அற்புதம் பாராட்டுக்கள் எனக்கு தங்களின் உதவி தேவைப்படுகின்றது எனது வலைப்ப+வினை மேம்படுத்த தங்கள் உதவி புரிவீர்கள் என்று நம்புகின்றேன்.தங்களினை தொடர்புகொள்ளும் வழிமுறையினை அறியத்தாருங்கள் ப்ளீஸ் என் இணைய முகவரி, வலைப்ப+வின் முகவரி
mullaikathir.blogspot.com
prabaraj81@gmail.com
prabaraj81@hotmail.com
prabaraj81@yahoo.com

Unknown said...

Sir, Ur website is giving very useful information & links to me. many small files i am using. So 1)Please indicate the website links which is giving Nero latest version freely or indicate equivalent CD/DVD writer tool better that Nero. 2) Also mention the link for the tool to cut & attach video clips.

Thank you sir.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

பயனுள்ள குறிப்புகள். தமிழ்மணத்தின் சார்பாக நன்றி. இதுகுறித்து நுட்ப உதவி கேட்டுப் பல மடல்கள் வருகின்றன. அவர்களிடம் உங்களின் இந்த இடுகையைப் படிக்கச் சொல்கிறேன்.

டிவிஎஸ்50 said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வராஜ்