பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க

பிற்சேர்கை (18-01-2010) : இந்த இடுகை தமிழ்மணம் திரட்டியின் 2009 -ம் ஆண்டிற்கான சிறந்த இடுகை என்று முதல் பரிசை 'தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்' என்ற பிரிவின் கீழ் பெற்றுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்ளுகிறேன். வாக்களித்த, ஆதரித்த அனைவருக்கும் எனது நன்றிகள். விருதினை வழங்கி ஊக்குவிக்கும் தமிழ்மணம் குழுமத்திற்கு நன்றி.

பதிவுலகில் வலைப்பதிவு எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனி காரணம் உண்டு. சிலர் பொழுதுபோக்கிற்காக எழுதுவோர். சிலர் தன் வாழ்வின் தடயங்களை பதிய எழுதுகின்றனர். சமூகம் குறித்தும், திரைத்துறை குறித்தும் தங்கள் பார்வையை பதிவிடுகிறார்கள். என் போன்று சில பதிவர்கள் கற்று கொண்ட விசயங்களை மற்றவர்களுடன் பகிர்வதற்காக வலைப்பதிவை உபயோகித்து வருகிறோம்.

ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் அவரவர் விருப்பம் சார்ந்து வாசகர் வட்டம் உண்டு. தொடர்ந்து அந்த வலைப்பதிவை வாசித்து வருவார்கள். நமது வலைப்பதிவுக்கு தினசரி புது வாசகர்கள் திரட்டிகள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ வருகிறார்கள். வருபவர்கள் தொடர்ச்சியாக நம் வலைப்பதிவுக்கு மீண்டும் வருவார்கள் என்று உறுதி கூற முடியாது.

தமிழ் வலைப்பதிவுகளில் வருமானத்திற்கு வழி குறைவு என்பதால் வலைப்பதிவு எழுதுவதை யாரும் முழு நேர தொழிலாக செய்வதில்லை. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறார்கள். வலைப்பதிவை வாசிக்க வாசகர்கள் தினசரி வரும் போது புது பதிவு இல்லை என்றால் வருபவர்கள் அதிருப்தி கொள்கின்றனர். மீண்டும் அந்த வலைப்பதிவுக்கு வருவதை குறைத்து கொள்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். மீண்டும் திரட்டிகளில் கண்ணில் தென்பட்டால்தான் வருகிறார்கள்.

தினமும் பதிவு எழுதுவது இயலாத காரியம்தான். இந்த சூழ்நிலையில் நம் வலைப்பதிவுக்கு வரும் வாசகர்களை தக்க வைத்து கொள்வது முக்கியம். அதற்கு சில வசதிகள் உள்ளன. RSS Feeds , Follower என்ற வசதிகள் அவை.Follower வசதி வலைப்பதிவு வைத்து உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது குறித்து மற்றொரு இடுகையில் விரிவாக பார்க்கலாம்.

இப்போது RSS Feeds பற்றி பார்ப்போம். RSS Feeds பார்வையாளர்களுக்கு எந்த அளவில் உபயோகமாக இருக்கும் என்பதை ஏற்கனவே RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம் என்ற இடுகையில் விரிவாக எழுதி இருந்தேன்.

வலைப்பதிவு வைத்து இருக்கும் நாம், பார்வையாளர்களுக்கு RSS Feeds வசதிகள் அளிப்பது நமக்கு எந்த அளவில் உபயோகப்படும் என்று பார்ப்போம். நான் முன்னர் கூறி உள்ளபடி நமது வலைப்பதிவுக்கு வரும் புதிய வாசகர்களை நம் பதிவின் நிரந்தர வாசகராக மாற்றுவது இருவருக்கும் நன்மை பயக்கும். அதற்கான வசதிதான் RSS Feeds.

நாம் புதிய இடுகைகள் இடும் போது வாசகர் உபயோகிக்கும் Feed Reader ல் நமது புதிய இடுகைகள் புதுப்பிக்கப்பட்டு விடும். அவர் உங்கள் எழுத்துக்களை எளிய முறையில் தொடர்ச்சியாக வாசித்து கொள்வார்.

பிளாகரில் (blogger.com) வலைப்பதிவு வைத்து இருப்பவர்களுக்கு அவர்கள் வலைப்பதிவின் RSS Feeds URL பொதுவாக இப்படி இருக்கும். http://YOURBLOGNAME.blogspot.com/feeds/posts/default/ . இதனை Feed Reader -ல் இணைப்பதன் மூலம் இடுகைகளை வாசித்து கொள்ள முடியும்.

Feed Reader உபயோகிப்பதற்கு ஓரளவாவது இணையம் சார்ந்த அறிவு வேண்டும். அவர்கள் பிளாக்கர் அளிக்கும் இந்த RSS வசதியை உபயோகித்து கொள்வார்கள். ஆனால் புதியவர்கள் சிலர் ஈமெயில் மட்டும் உபயோகிக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு RSS Feed , Reader என்பன குழப்பத்தை தரலாம். அவர்களுக்கும் உங்கள் எழுத்துகளை கொண்டு சென்று சேர்க்க வசதி உள்ளது.

RSS Feeds பொறுத்தவரை FeedBurner.com தளம் மேம்படுத்தப்பட்ட வசதிகளை அளிக்கிறது. பிரபலமான அந்த தளம் கூகிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு மேலும் பிரபலமாகி உள்ளது.

Feedburner.com சென்று கூகிள் கணக்கு மூலம் லாகின் செய்து கொள்ளுங்கள். அங்கு உங்கள் பிளாக்கின் URL கொடுத்து புதிய RSS Feed உருவாக்கி கொள்ளுங்கள்.
அங்கு கேட்கப்படும் தகவல்களை அளிக்கும் போது உங்களுக்கு புதிய RSS Feed முகவரியை அளிக்கும். உதாரணத்திற்கு இப்படி இருக்கும். http://feeds.feedburner.com/tvs50posts .


இதனை உங்கள் வலைப்பதிவின் நிரந்தரமான RSS Feed URL ஆக மாற்ற வேண்டும். இதற்கு உங்கள் பிளாக்கர் Dashboard -ல் Settings --> Site Feed --> Post Feed Direct URL என்பதில் உங்கள் புதிய Feedburner RSS Feed Url அளித்து சேமிக்கவும். இனி உங்கள் வலைப்பதிவுக்கான RSS Feeds வசதியை FeedBurner கவனித்து கொள்ளும்.


இதில் முக்கிய வசதியான ஈமெயில் மூலம் சந்தாதாரர் (Subscribe) பற்றி பார்க்கலாம். மற்ற வசதிகளை பற்றி பின்பு தனி இடுகைகளாக எழுதுகிறேன்.
ஈமெயில் சந்தாதாரர் வசதியை பெற Feedburner சென்று Publicize --> Email Subscriptions கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யவும்.
சந்தாதாரர் வசதி அளிப்பதற்கு Code கொடுப்பார்கள். அதை உங்கள் வலைப்பதிவில் வேண்டுமென்ற இடத்தில் பேஸ்ட் செய்தால் போதுமானது. அல்லது பிளாக்கரில் எளிதாக இணைக்கும் வசதியையும் கொடுத்து உள்ளார்கள். அதனை உபயோக படுத்துங்கள். அங்கே Feed Count என்ற வசதியும் உண்டு. அதன் மூலம் உங்கள் வலைப்பதிவை தினமும் எத்தனை பேர் RSS Feeds மூலம் படிக்கிறார்கள் என்பதனை உங்கள் வலைப்பதிவில் காட்டலாம்.

பிளாக்கரில் Feedburner உபயோகப்படுத்துவது குறித்த இந்த செய்முறை வீடியோ கொஞ்சம் வளா வளா என்று இருந்தாலும் புரியும் படி உள்ளது. பார்க்கவும்.


இனி உங்கள் வலைப்பதிவில் வாசகர்கள் ஈமெயில் மூலமும் சந்தாதாரர் ஆகி கொள்ளலாம். நீங்கள் இடும் புதிய இடுகைகள் சந்தாதாரரை ஈமெயில் மூலம் சென்றடைந்து விடும். அவர் உங்கள் தளத்துக்கு வர தேவை இல்லை. உங்கள் பார்வையாளர்களை RSS Feeds உபயோகிக்க ஊக்கப்படுத்துங்கள். இந்த எளிய முறை மூலம் உங்கள் வாசகர்கள் பெருகி கொண்டு செல்வார்கள்.
இப்போதெல்லாம் வைரஸ் போன்ற பிரச்சினைகளால் வலைப்பதிவுகள் காணாமல் போகின்றன. மேலும் சிலர் பதிவு எழுதுவதை சில காலம் நிறுத்தி விட்டு மீண்டும் துவங்குகிறார்கள். நீங்கள் பதிவு எழுதுவதை நிறுத்தி விட்டு ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுதினாலும் நீங்கள் தக்க வைத்து கொண்டுள்ள வாசகர்களுக்கு உங்கள் படைப்புகளை கொண்டு செல்ல முடியும்.

அல்லது புதிய வலைப்பதிவு எழுதினாலும் Edit Feed Details மூலம் புதிய Feed மாற்றி அளித்து அங்கும் இவர்களுக்கு நம் படைப்புகள் கொண்டு செய்ய வைக்க முடியும். இது போன்ற வசதிகள் நம் வாசகர்களை இழக்காமல் வைத்து கொள்ள உதவும்.

இதன் மூலம் வாசகர்கள் பெருகும் போது நாம் எழுதுவதை நம்மால் எடை போட்டு கொள்ள முடியும். அதிகரித்தால் துணிச்சலாக எழுதலாம் :) . எழுதும் போதும் நம்மை நம்பி சந்தாதாரர் ஆகி உள்ளவர்களுக்காக எழுதுகிறோம் என்று உற்சாகம் பிறக்கும்.

RSS Feed வசதி அளிப்பதால் வாசகர்கள் நம் தளத்திற்கு வர மாட்டார்கள். Feed Reader , ஈமெயில் மூலம் வாசித்து இருந்து விடுவார்கள் என்ற தவறான குற்றசாட்டு உண்டு. தளத்திற்கு வந்து படிப்பவர்களை இது பாதிப்பதில்லை. ஒன்றுமில்லாமல் போவதற்கு பதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாசகர்களையாவது கையில் வைத்து கொள்ளலாமே. Feedburner உங்கள் வாசகர் வட்டத்தை அதிகப்படுத்தும். கண்டிப்பாக உபயோகியுங்கள்.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

64 comments:

Anonymous said...

அருமையான தகவல்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றி நண்பரே..,

Tech Shankar said...

Very Clear Post. Thanks dear buddy

கிரி said...

நன்றி

நான் என்னுடைய feed முகவரியை settings--> site feed ல் கொடுக்காமலே இருந்தேன், இருந்தும் என்னுடைய பதிவுகள் ரீடரில் தெரிந்தது. ஆனால் என்னால் feed count ஐ (எத்தனை subcriber உள்ளனர் என்பது) என்னுடைய தளத்தில் காட்ட முடியவில்லை, காரணம் அதில் 0 subcribers என்றே காட்டியது

ஆனால் webmaster tool சென்று பார்த்தால் என்னுடைய subcribers எவ்வளோ பேர் என்று சரியாக காட்டுகிறது.

இந்த பிரச்சனையால் feed count ஐ என் தளத்தில் காட்ட முடியவில்லை :-(

தற்போது நீங்கள் கூறியபடி என்னுடைய feedburner முகவரியை என் தளத்தில் site feed ல் கொடுத்துள்ளேன், இனி வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

தகவலுக்கு நன்றி, இதில் நான் எதுவும் தவறு செய்து இருந்தால் கூறவும்.

SUMAZLA/சுமஜ்லா said...

ரொம்ப நாளா ஃபீட் பர்னர் குறித்த சந்தேகங்கள் தீர்ந்தது! நன்றி! நானும் இணைத்துக் கொண்டேன்!

ஜீவா said...

very user. thanks. take care friend

டிவிஎஸ்50 said...

//நான் என்னுடைய feed முகவரியை settings--> site feed ல் கொடுக்காமலே இருந்தேன், இருந்தும் என்னுடைய பதிவுகள் ரீடரில் தெரிந்தது. ஆனால் என்னால் feed count ஐ (எத்தனை subcriber உள்ளனர் என்பது) என்னுடைய தளத்தில் காட்ட முடியவில்லை, காரணம் அதில் 0 subcribers என்றே காட்டியது//

@கிரி

Reader -ல் Defaulat blogger rss feed தெரிந்து இருக்கும். feed முகவரியை settings--> site feed ல் கொடுத்தால் மட்டுமே Feedburner rss feed தானாக வேலை செய்யும். அப்பத்தான் counter தெரியும். செயல் படுத்தி விட்டு 24 மணி நேரம் காத்திருங்கள் அப்டேட் ஆகும்.

நான் சொல்லுவது சரிதான் என்று நினைக்கிறேன். Feed Count தெரிந்தால் சொல்லுங்கள். சந்தேகத்தை தேர்த்து கொள்கிறேன்.

டிவிஎஸ்50 said...

thamizhini, suresh, tamilnenjam, sumazla

உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றி.

ரெட்மகி said...

மிக அவசியமான தகவல் ,என்னை போல புதியவர்களுக்கு
ரொம்ப நன்றி தலைவா , என்னையும் மதித்து இந்த பதிவை எழுதியதற்காக

துபாய் ராஜா said...

நல்லதொரு தகவல்.

தொடரட்டும் இதுபோன்ற பகிர்வுகள்.

அன்புடன் அருணா said...

அப்பாடா எனக்கு இந்த Rss பற்றீ ஒன்றுமே தெரியாது.....ரொம்ப அழகாக தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்...நன்றி!

sdc said...

நன்றி பாஸ்

நான் கூட ரொம்ம்ப புதுசு

பிச்சைப்பாத்திரம் said...

The uri you entered was invalid. If the suggestion below is acceptable, press Next again.

The feed was cancelled and not activated.


இது போன்ற பிழைச் செய்தி வருகிறதே? என்ன செய்வது?

கபிலன் said...

Super !

டிவிஎஸ்50 said...

சுரேஷ்கண்ணன் சார். நீங்கள் சொன்ன பிழை எப்போது வருகிறது?

Email Subscription என்றால் நீங்கள் அதனை Feedburner -ல் ஆக்டிவேட் செய்து இருக்க வேண்டும்.

விளக்கமாக கூறினால் தீர்வு கண்டுபிடித்து கூறுகிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

feedburner.com-ல் கூகுள் கணக்கின் மூலம் உள்நுழைந்தேன்.

இரண்டு ஆப்ஷன்கள் வருகிறது.

1) claim your feeds now.

இதை அழுத்தினால் feedburner.com-ன் username, password கேட்கிறது. கூகுள் கணக்கை தந்தால் ஏற்க வில்லை.

சரி அடுத்த ஆப்ஷனுக்கு சென்றேன்.

2) Burn a feed right this instant. Type your blog or feed address here:

இதில் என்னுடைய பிளாக் முகவரியை தந்து அடுத்தது அழுத்தினால்

FeedBurner discovered more than one feed at that address. Please select one to use as your source:

என்று வருகிறது. நான் http://pitchaipathiram.blogspot.com/feeds/posts/default என்பதை தேர்ந்தெடுத்தேன். அடுத்தது என்று அழுத்தினால் feed address கேட்கிறது.

இங்குதான் குழப்பம் நேர்வதாக தோன்றுகிறது. இங்கு என்னுடைய பிளாக்கின் rss முகவரியை தந்தால் ஏற்க மறுக்கிறது.

Thomas Ruban said...

என்னை போல புதியவர்களுக்கு
அருமையான தகவல்.ரொம்ப நன்றி.

டிவிஎஸ்50 said...

சுரேஷ் கண்ணன்,

Feed Address: என்பதில் உங்கள் முழு RSS Feed அட்ரஸ் கொடுக்க தேவை இல்லை. நீங்கள் புதிதாகா உருவாக்க போகும் RSS Feed க்கு புதிய பெயர் கேட்கிறது.

அதில் ஏதேனும் பெயர் கொடுக்கவும். உதாரணத்திற்கு Feed Address: என்பதில் 'pichchaipaaththiram' என்று கொடுத்தால் , உங்கள் புதிய Feed முகவரி http://feeds.feedburner.com/pichchaipaaththiram என்று வந்துவிடும்.

பெயர் மட்டும் கொடுக்கவும் பழைய முழு feed url கொடுக்க வேண்டாம்.

வேலை செய்கிறதா? என்று பார்த்து சொல்லவும்.

மேலும் உதவுகிறேன்.

சூர்யா ௧ண்ணன் said...

நல்ல உபயோகமான தகவல் தலைவா!

நன்றி

டிவிஎஸ்50 said...

சுரேஷ்கண்ணன் , இந்த படத்தை பார்க்கவும்.

http://img132.imageshack.us/img132/8428/37501764.png

வால்பையன் said...

எனக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது!
நீங்கள் கொடுத்துள்ளதை விட அதிக கேள்விகள் கேட்கிறது!

டிவிஎஸ்50 said...

வால்பையன் கொஞ்சம் முயற்சித்து பார்க்கவும். முடியவில்லை என்றால் சொல்லுங்கள். இரவில் அனைத்து படங்களையும் பிடித்து போடுகிறேன்.

டிவிஎஸ்50 said...

வால்பையன் எந்த இடத்தில் சிரமமாக இருக்கிறது என்று சொல்லுங்கள். விளக்குகிறேன்.

Menaga Sathia said...

அருமையான இடுகைக்கு மிக்க நன்றி நண்பரே,இப்போழுது நானும் இணைத்துக்கொண்டேன்.

பிச்சைப்பாத்திரம் said...

//பெயர் மட்டும் கொடுக்கவும் //

நண்பரே,

உங்களின் மதிப்புமிக்க ஆலோசனைக்கு நன்றி. இப்போது சரியாகி விட்டது. ஆனால் எத்தனை பேர் என்கிற கணக்கு தெரியவில்லை. 24 மணி நேரம் ஆகும் என்று கூறியுள்ளது சரிதான் என நினைக்கிறேன். கூகுள் ரீடரில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் இதில் சேர்க்கப்படுமா?

பதி said...

உபயோகமான பதிவு !!!!

தமிழ்மண கருவிப்பட்டையினை பதிவிற்கு கீழே இணைப்பது எப்படி?

கபிலன் said...

நன்றி...என் தளத்தில் உங்கள் தயவில் Email Subscription Configure செய்து விட்டேன். நன்றி!
Feed URL அளிக்கும் போது http://feeds.feedburner.com/localtamilanposts அப்படின்னு கொடுத்து பாத்தேன். Utter Flop...url is not valid nu கடிச்சுடுச்சு...அப்புறமா...வெறும் localtamilan மட்டும் கொடுத்தேன். Success...Sucess...

கிரி said...

//டிவிஎஸ்50 said...
நான் சொல்லுவது சரிதான் என்று நினைக்கிறேன். Feed Count தெரிந்தால் சொல்லுங்கள். சந்தேகத்தை தேர்த்து கொள்கிறேன்.

டிவிஎஸ்50 கலக்கிட்டீங்க ..எனக்கு site feed ல சேர்த்தவுடன் சரி ஆகி விட்டது, நீங்க உறுதி படுத்திக்கலாம். தற்போது subcribe செய்தவர்கள் எத்தனை பேர் என்று சரியாக தெரிகிறது, எனக்கு webmaster tool ல தெரிந்த எண்ணிக்கையை விட இதில் அதிகமாக தெரிகிறது :-) இத்தனை நாளா ரொம்ப குறைவா subcribe இருக்கே என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

ஆனால் reader என்பதற்கு பதிலா listener என்று வருகிறது ஏன் என்று தெரியவில்லை..எதோ வந்தா சரி ;-)

ரொம்ப நன்றிங்க //டிவிஎஸ்50 said...
நான் சொல்லுவது சரிதான் என்று நினைக்கிறேன். Feed Count தெரிந்தால் சொல்லுங்கள். சந்தேகத்தை தேர்த்து கொள்கிறேன்.

டிவிஎஸ்50 கலக்கிட்டீங்க ..எனக்கு site feed ல சேர்த்தவுடன் சரி ஆகி விட்டது, நீங்க உறுதி படுத்திக்கலாம். தற்போது subcribe செய்தவர்கள் எத்தனை பேர் என்று சரியாக தெரிகிறது, எனக்கு webmaster tool ல தெரிந்த எண்ணிக்கையை விட இதில் அதிகமாக தெரிகிறது :-) இத்தனை நாளா ரொம்ப குறைவா subcribe இருக்கே என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

ஆனால் reader என்பதற்கு பதிலா listener என்று வருகிறது ஏன் என்று தெரியவில்லை..எதோ வந்தா சரி ;-)

ரொம்ப நன்றிங்க டிவிஎஸ்50 என் நீண்ட நாள் பிரச்சனை மற்றும் குழப்பம் தீர்ந்தது.

டிவிஎஸ்50 said...

மகிழ்ச்சி கிரி :) . ஈமெயில் மூலம் சந்தாதாரர் ஆகும் வசதியை அளியுங்கள். RSS Feed Reader பற்றி அனைத்து பார்வையாளர்களும் அறிந்து இருப்பார்களா என்பது சந்தேகம். ஈமெயில் வசதி அளிக்கும் போது அதிக பேர் subscribe செய்வார்கள். தினமும் அவர்கள் ஈமெயில் பெட்டியில் உங்கள் பதிவுகள் சென்று சேர்ந்து விடும்.

அளிக்கும் போது அதைப்பற்றி சிறு குறிப்புடன் பார்வையாளர்களுக்கு புரியும்படி அளியுங்கள்.

டிவிஎஸ்50 said...

@கபிலன் உங்களுக்கு உபயோகபட்டத்தில் மகிழ்ச்சி

டிவிஎஸ்50 said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி

Unknown said...

மிக மிக நல்ல தகவல். உங்கள் பதிவில் உள்ள தகவல்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது . ஆனால் குறைவாக எழுதுகிறீர்கள் . அதிகமாக எழுத முயற்சிக்கவும்.

Raj said...

நல்ல தகவல்.புதிதாக இடுக்கையில் நுழைந்த எனக்கு அவசியமாக தேவைப்பட்டது.தொடர வாழ்த்துக்கள்

பிச்சைப்பாத்திரம் said...

டிவிஎஸ்50, உங்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று ஒரு பின்னூட்டம் இட்டேன். ஏதோ அது வரவில்லை. உங்களின் முயற்சிகளுக்கு மிக்க நன்றி.

விரைவிலேயே TVS பல்சர் ஆகவும் அதற்கு மேலே உயரவும் வாழ்த்துகள். :-)

டிவிஎஸ்50 said...

//டிவிஎஸ்50, உங்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று ஒரு பின்னூட்டம் இட்டேன். ஏதோ அது வரவில்லை. //
மன்னிக்கவும் சுரேஷ்கண்ணன் சார். என் கவனகுறைவால் அது எப்படியோ என் கண்ணில் படாமல் போய் விட்டது. இப்போது தேடி கண்டுபிடித்து விட்டேன். :)

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

டிவிஎஸ்50 said...

//ஆனால் எத்தனை பேர் என்கிற கணக்கு தெரியவில்லை. 24 மணி நேரம் ஆகும் என்று கூறியுள்ளது சரிதான் என நினைக்கிறேன். கூகுள் ரீடரில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் இதில் சேர்க்கப்படுமா?//

எத்தனை பேர் என்பதை உங்கள் பிளாக்கில் காட்ட Feedburner -ல் Publicize சென்று வலது புறம் Feedcount என்றொரு ஆப்சன் இருக்கு. அதை கிளிக் செய்து அதில் வழங்கப்படும் Code உங்கள் பிளாக்கில் அளித்தால் போதுமானது .

24 மணி நேரத்திற்கு ஒரு முறை அப்டேட் செய்யப்படும்.

நான் இந்த இடுகையில் கூறி உள்ளபடி

"இதனை உங்கள் வலைப்பதிவின் நிரந்தரமான RSS Feed URL ஆக மாற்ற வேண்டும். இதற்கு உங்கள் பிளாக்கர் Dashboard -ல் Settings --> Site Feed --> Post Feed Direct URL என்பதில் உங்கள் புதிய Feedburner RSS Feed Url அளித்து சேமிக்கவும். இனி உங்கள் வலைப்பதிவுக்கான RSS Feeds வசதியை FeedBurner கவனித்து கொள்ளும்."

மாற்றி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி கூகிள் ரீடரில் உங்கள் பதிவுகளை வாசிப்பவர்களையும் Feed Count சேர்த்து கொள்ளும்.

பிச்சைப்பாத்திரம் said...

//மாற்றி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனி கூகிள் ரீடரில் உங்கள் பதிவுகளை வாசிப்பவர்களையும் Feed Count சேர்த்து கொள்ளும்.//

மாற்றியிருக்கிறேன். இருந்தாலும் எண்ணிக்கை 0 விலேயே இருக்கிறது. எனவே இதை பதிவில் காட்டினால் மானம் போய்விடுமே என்று எடுத்துவிட்டேன். கூகுள் ரீடரில் பார்க்கும் 336 நபர்கள் வாசிக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. ஆனால் இது feed burner விட்ஜெட்டில் பிரதிபலிக்க வில்லை.

சோதனை முயற்சியாக என்னுடைய இன்னொரு மின்னஞ்சலை உபயோகித்து subscribe செய்து பார்த்தேன். அப்போதும் பூஜ்யத்திலேயே நிற்கிறது. 24 மணி நேரம் பூர்த்தியடைந்தபின் நிலைமை மாறுமோ என்னவோ? :-)

டிவிஎஸ்50 said...

@சுரேஷ்கண்ணன்
ஆமாம் சுரேஷ்கண்ணன். நமது இந்திய நேரப்படி மாலை 3 மணி - 4 மணிக்குள் அப்டேட் ஆகிறது.

@கிரி
உங்கள் Feed Count code -ல் listeners என்பதை கண்டுபிடித்து Readers என்று மாற்றி கொள்ளுங்கள். இனி Readers என்று தோன்றும்.

மு.இரா said...

அய்யா, வணக்கம் என்னுடைய URL-யை கொடுத்தவுடன் இப்படி வருகிறது ஏன்?
Your feed filesize is larger than 512K. You need to reduce its size in order for FeedBurner to process it. Tips for controlling feed file size with Blogger can be found in Tech Tips on FeedBurner Forums, our support site.

டிவிஎஸ்50 said...

@மு. இரா

உங்கள் வலைப்பதிவில் எழுத்துருக்கள் வித்தியாசமாக உள்ளன. ஏன் என்று தெரியவில்லை. உங்கள் feed அளவு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

URL கொடுக்கும் போது http://tamizhpadai.blogspot.com/feeds/posts/default?max-results=5 கொடுக்கவும். பிரச்சனை சரியாகும் என்று நினைக்கிறேன்.

மேலும் பிரச்சனை வந்தால் பின்னூட்டவும்.

பிச்சைப்பாத்திரம் said...

//ஆமாம் சுரேஷ்கண்ணன். நமது இந்திய நேரப்படி மாலை 3 மணி - 4 மணிக்குள் அப்டேட் ஆகிறது. //

நண்பரே, இப்போது தளத்தில் எண்ணிக்கை 401-ஆக தெரிகிறது. நன்றி.

shakthi said...

இதை Wordpress ல் இணைப்பது எப்படி என்று விவரிக்க முடியுமா?

கிரி said...

//@கிரி
உங்கள் Feed Count code -ல் listeners என்பதை கண்டுபிடித்து Readers என்று மாற்றி கொள்ளுங்கள். இனி Readers என்று தோன்றும்//

நன்றி மாற்றி விட்டேன் :-)

மின்னஞ்சல் சேவையை கொடுக்கலாமா வேண்டாம் என்று உள்ளேன், இதை கொடுத்தால் என் தளம் பக்கமே வர வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விடும்... அது தான் யோசனையாக இருக்கிறது.

Anonymous said...

how to install in wordpress pls explain

Anonymous said...

How install this future in wordpress pls explain.

thank u

டிவிஎஸ்50 said...

@கிரி

உங்கள் stat counter / google analytics உள்ள தகவல்களை வைத்து ஒரு சோதனை செய்து பாருங்கள். தினமும் நேரடியாக உங்கள் வலைப்பதிவுக்கு எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று பாருங்கள்.

அது குறிப்பிட்ட அளவு அதிகரிக்கிறதா என்று ஆராயுங்கள். அல்லது திரட்டிகளில் இருந்துதான் அதிக டிராபிக் வருகிறதா?

திரட்டிகளில் இருந்து வருபவர்கள் உங்கள் பதிவின் நிரந்தர வாசகராக அடுத்த முறை உங்கள் பதிவை நேரடியாக பார்வை இடுகிறாரா?

ஆறு மாதங்களுக்கு முன் உங்கள் வலைப்பதிவை ஆர்வமாக பார்வை இட்டவர்கள் பெரும்பாலானோர் இன்னும் வந்து கொண்டு உள்ளார்களா?

பார்வையாளர் ஒவ்வொருவரும் அவரவர் பணி , சூழ் நிலைக்கு ஏற்ப பதிவுகளை வாசிப்பதை நாளடைவில் குறைத்து கொள்கிறார்கள். அல்லது நிறுத்தி விடுகிறார்கள்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் புது புது பதிவர்கள். புது புது பார்வையாளர்கள்.

இது போன்ற நேரங்களில் அவர்கள் ஈமெயில் சந்தாதாரராய் இருந்தால் நம் படைப்புகள் குறித்த பட்சம் அவர்களுடைய ஈமெயில் இன்பாக்ஸ் சென்றடைந்து இருக்கும் .

என்றாவது ஒரு நாள் திரட்டிகள் மூலம் எட்டி பார்க்கும் பார்வையாளரை ஈமெயில் மூலம் தொடர்ந்து படிக்க வைத்து விட்டால் நமக்குதானே லாபம்.

இது போன்ற சந்தாதாரர்கள் தான் வலைப்பதிவர்களுக்கு மிகப்பெரிய சொத்து என்று எண்ணுகிறேன்.

கிரி, இவை எல்லாம் அறிவுரையாக கூற வில்லை. ஓவரா பேசுறான்னு நினைக்காதீங்க. நான் உண்மை என்று நம்பி கொண்டு இருப்பவற்றை கூறி இருக்கிறேன். மாற்று கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்தி புதிய 'உண்மை' கண்டு பிடிப்போம். :)

டிவிஎஸ்50 said...

@கிரி
நான் Feedburner Email Subscription க்கு மார்கெட்டிங் எக்ஸ்சீகுடிவ் மாதிரி செயல்பட்டு உங்கள் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது போல் எனக்கே தோன்றுகிறது :) . தப்பா எடுத்துக்காதீங்க . உங்கள் விருப்பப்படி செயல் படுங்கள்

டிவிஎஸ்50 said...

மகிழ்ச்சியான தகவலுக்கு மிக்க நன்றி கலையரசன்

பழமைபேசி said...

me the 100th follower!

ஆ.சுதா said...

நல்ல தகவல். உங்கள் யோசனை படி சொய்தேன். ஆனால் ஒரு சின்ன சந்தேகம். feedburnerல சேர்த்த பின் தமிழ்மனம் திரட்டியில் என் இடுகையில் என் பெயர் வரவில்லை! தமிழ்மணத்திடம் கேட்ட போது feedburnerல இனைத்திருந்தா பெயர் வராது என்று கூரப்பட்டது இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா!

பிச்சைப்பாத்திரம் said...

நண்பரே,

உங்களை அதிகம் தொந்தரவு செய்கிறோனோ என்கிற சங்கடத்துடனே இதைக் கேட்கிறேன். ஆ.முத்துராமலிங்கம் சொன்ன பிரச்சினைதான் எனக்கும். தமிழ்மணம், தமிலிஷ் போன்ற திரட்டிகளில் பதிவுகள் update ஆகப்படுவதில்லை. இதிலிருந்து எப்படி மீள்வது?

டிவிஎஸ்50 said...

@சுரேஷ்கண்ணன்

இதை தொந்தரவாக நினைக்க வில்லை . கேள்விகள் கேட்கும் போதுதான் நான் இட்ட இடுகை வெற்றி பெற்றதாக மகிழ்ச்சி வருகிறது. நீங்கள் கேள்வி கேட்கும் போதுதான் என்னை நானே மெருகேற்றி கொள்ள முடியும். கற்று கொள்ள முடிகிறது. அதற்கு நன்றி.

நீங்கள் , முத்துராமலிங்கம் கூறிய உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து வருகிறேன். இன்னும் சில மணி நேரங்களில் அதற்காக தனி இடுகை எழுதுகிறேன்.

டிவிஎஸ்50 said...

@முத்துராமலிங்கம், @சுரேஷ்கண்ணன்

உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு http://tvs50.blogspot.com/2009/06/feedburner-rss-feeds-vs-tamilmanam.html உள்ளது . பார்க்கவும்.

கிரி said...

//உங்கள் stat counter / google analytics உள்ள தகவல்களை வைத்து ஒரு சோதனை செய்து பாருங்கள்.//

நான் பொதுவாக புதிய வழிமுறைகள் அனைத்தையும் முயற்சித்து பார்த்து விடுவேன், அதில் எனக்கு மிகுந்த ஆர்வம்.எனவே நீங்கள் கூறிய அனைத்தையும் உபயோகித்து வருகிறேன். அதில் தான் இனி கண்காணிக்க போகிறேன்.

//என்றாவது ஒரு நாள் திரட்டிகள் மூலம் எட்டி பார்க்கும் பார்வையாளரை ஈமெயில் மூலம் தொடர்ந்து படிக்க வைத்து விட்டால் நமக்குதானே லாபம். //

நீங்கள் கூறியதை ஏற்று நான் தற்போது இதை செயல்படுத்தி உள்ளேன். இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் பொதுவாக எனக்கு தினமும் forward மெயில் நண்பர்கள் மெயில் என்று குறைந்தது 7 மின்னஞ்சல்களாவது வரும், இதில் பாதியை நேரமின்மையால் படிப்பதில்லை, இதை போல மின்னஞ்சல்களை subcribe செய்தால் எப்படி இதை மற்றவர்கள் சமாளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நடைமுறையில் இத்தனை மின்னஞ்சல்களை பார்ப்பது என்பது சிரமமே, சில சமயங்களில் எரிச்சலாகவும் இருக்கும். ஆனாலும் அதிக பேர் பதிவு செய்து வருகிறார்கள் நீங்கள் கூறியது போல, எப்படி என்று தெரியவில்லை. இதை கொஞ்ச நாள் செயல்படுத்தி பார்க்கலாம் என்று இதை நிறுவி உள்ளேன்.

முத்துராமலிங்கம் மற்றும் சுரேஷ் கண்ணன் அவர்கள் கூறிய பிரச்சனை எனக்கும் இருந்தது, அதாவது என்னால் பதிவை இணைக்க முடிந்தது ஆனால் அனுப்பு பட்டன் enable ஆக இருந்தது இதனால் ஓட்டு போட முடியவில்லை (எனக்கு நானே ஓட்டு போட மாட்டேன் :-))) மறந்து விடுவேன், இருந்தாலும் நண்பர் ஒருவர் கூறிய பிறகே கவனித்தேன். தற்போது நீங்கள் கூறிய வழி முறைகளை செய்த பிறகும் அந்த அனுப்பு பட்டன் disable ஆக வில்லை பிறகு தமிழ்மணம் தளத்தில் சென்று அதில் என் பதிவை கொடுத்து "அளி" பட்டனை அழுத்திய பிறகு சரி ஆகி விட்டது (இதை நீங்களும் கூறி இருந்தீர்கள்)

என்னுடைய கேள்வி..... இனி நான் இதை போல தான் செய்ய வேண்டுமா அல்லது அனுப்பு பட்டனை அளித்தினாலே போதுமா? நான் எப்போதும் இந்த வழிமுறையை தான் பயன்படுத்துகிறேன். அடுத்த பதிவு இணைக்கும் போது தான் தெரியும் என்று நினைக்கிறேன்.

உங்களின் பொறுமையான பதிலுக்கு நன்றி..

இத்தனை திறமையை வைத்துக்கொண்டு இவ்வளவோ நாட்களாக நீங்க பதிவிடாமல் இருந்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது.. லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக கலக்கி இருக்கீங்க.. உங்கள் பலமே தின பிரச்சனை பற்றி பதிவுகள் எழுதுவது தான்

வாழ்த்துக்கள்

//கிரி, இவை எல்லாம் அறிவுரையாக கூற வில்லை. ஓவரா பேசுறான்னு நினைக்காதீங்க. நான் உண்மை என்று நம்பி கொண்டு இருப்பவற்றை கூறி இருக்கிறேன். மாற்று கருத்துகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்தி புதிய 'உண்மை' கண்டு பிடிப்போம். :)

நான் Feedburner Email Subscription க்கு மார்கெட்டிங் எக்ஸ்சீகுடிவ் மாதிரி செயல்பட்டு உங்கள் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது போல் எனக்கே தோன்றுகிறது :) . தப்பா எடுத்துக்காதீங்க . உங்கள் விருப்பப்படி செயல் படுங்கள்//

நீங்க இப்படி கூற வேண்டிய அவசியமே இல்லை, நீங்கள் எங்கள் நல்லதுக்கு தான் சொல்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், அதனாலே தான் இதை பண்ணவே கூடாது என்று இருந்த நான் தற்போது இந்த மின்னஞ்சல் சேவையை வைத்து இருக்கிறேன். நல்லது யார் சொன்னாலும் கேட்டுக்க வேண்டியது தான், முயற்சி செய்யாமலே சரி இல்லைன்னு எப்படி சொல்வது எனவே இதை செய்து விட்டேன் பார்ப்போம்.

உங்கள் உதவிகள் அனைத்திற்கும் நன்றி, சந்தேகம் இருந்தால் மறுபடி கேட்கிறேன்.

மு.இரா said...

நன்றி, ஜயா Account கிடைத்துவிட்டது. arial narrow ms என்ற எழுத்துருதான் பயன்படுத்துகிறேன். இதில் ஏதாவது பிரச்சனையா?
உங்கள் மிகவும் பயனுள்ளது. உங்களை போல நானும் சில முக்கிய மென்பொருட்களை, அனைவரும் கொடுக்க வேண்டும், உபயோகிக்க வேண்டும் என்று நினைத்து http://tamilsoftwaredownload.blogspot.com/
வலைப்பூவை உருவாக்கியுள்ளேன். ஆனால் உங்களை போல தெளிவாக எழுத முடியவில்லை. தயவுசெய்து என் வலைபூவை பார்த்து உங்களை கருத்துக்களை இட கேட்டுகொள்கிறேன். நன்றி, வணக்கம்.

Sakunthala said...

இப்போதெல்லாம் வைரஸ் போன்ற பிரச்சினைகளால் வலைப்பதிவுகள் காணாமல் போகின்றன ....

இதைப் பற்றி கொஞ்சம் விவரமாக எழுத முடியுமா? முக்கியமாக, எப்படி முன்னெச்செரிக்கையாக இருப்பதுன்னு சொன்னீங்கன்னா, ரொம்ம உதவியா இருக்கும்.

dsfs said...

மிக அருமையான பதிவு. நன்றி

jothig said...

உங்களை வணங்குகிறேன், வேறு வார்த்தைகள் தேவையில்லை,


ஜோதிஜி

தேவியர் இல்லம்,

திருப்பூர்

http://texlords.wordpress.com

Dhavappudhalvan said...

Wow! very good. I'll try. now some problem to write in tamil fonts. Please visit my blogs.

http://aambalmalar.blogspot.com/
http://aasaidhan.blogspot.com/

ABDUL said...

thanks for all your fantstic works

நீச்சல்காரன் said...

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்

Mohamed Haneef said...

அருமையாகவும் எவரும் எளிதாய் புரிந்துக்கொள்ளும் விதமாகவும் எழுதியுள்ளீர்கள். உங்கள் தொழில் நுட்பப் பணி தொடர வாழ்த்துக்கள்

நான் Feedblitz பாவிக்கிறேன். ஆனால் அதில் Feed Count இனை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. கூறுவீர்களானால் உதவியாக இருக்கும்.

நன்றி

spiritual ocean said...

வலைப்பூ தொழில்நுட்பத்தின் பல வசதிகளை விளக்கிய தாங்கள் தொடர்ந்து இந்தப்பணியைத் தொடர வேண்டுகிறேன்.இப்படிக்கு www.aanmigakkadal.blogspot.com

imrandeen said...

அன்பு வணக்கம் சகோதரரே .... உங்களின் இந்த அரும்பணி தொடர வாழ்த்துக்கள் ... நன் நீங்கள் மேலே குறிபிட்டது போன்று எல்லாவற்றையும் செய்துblooger லும் பதிந்து விட்டேன் ... ஆனால் இது வரை கிட்டத்தட்ட ஒரு பத்து சகோதரர்கள் அதில் தங்களது மெயில் ஐடி பதிந்து விட்டார்கள் ... ஆனால் 0 readers என்றே வருகிறது .... உதவவேண்டுகிறேன்