இந்தியாவில் வழங்கப்படும் பிராட்பேண்ட் திட்டங்கள் பெரும்பாலும் பாண்ட்விட்த் கட்டுப்பாடுடன் வருகின்றன. அதிக விலை கொடுத்தாலும் Unlimited திட்டங்கள் என்னை போன்ற இணைய விரும்பிகளுக்கு உபயோகமாக இருந்தாலும் பெரும்பாலானோர் பாண்ட்விட்த் கட்டுப்பாடுடன் உள்ள திட்டங்களை உபயோகபடுத்தி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் தங்களுடைய பாண்ட்விட்த் உபயோகத்தை கணக்கிடுவதில் குழப்பங்கள் இருக்கலாம். பிராட்பேண்ட் வந்த புதிதில் அறியாமல் அளவுக்கு அதிகமாக பாண்ட்விட்த் உபயோகித்து உபரி கட்டணமாக ஏழாயிரம் கட்டிய அனுபவம் எனக்குண்டு.
Bitmeter என்ற இலவச மென்பொருள் கணினியில் இணைய பாண்ட்விட்த் உபயோகத்தை கணக்கிட உதவுகிறது. இதன் மூலம்
1. இணைய இணைப்பின் ஏற்ற (upload) / இறக்க (Download) வேகங்களை கணக்கிட முடியும்.
2. இணைய பாண்ட்விட்த் உபயோகிப்பினை மணி, நாள், மாத அளவில் கணக்கிட்டு கொள்ள முடியும்.
3. பாண்ட்விட்த் கட்டுப்பாடு உள்ளவர்கள் பாண்ட்விட்த் உபயோகம் குறிப்பிட்ட அளவை மீறும் போது அலெர்ட் செய்தி தரும்படி அமைத்து கொள்ளலாம். உதாரணத்திற்கு மாதாந்திர பாண்ட்விட்த் கட்டுப்பாடு அளவு 20 GB என்றால் அதில் 90% உபயோகத்தை மீறும் போது அலெர்ட் தரும்படி அமைத்து கொள்ளலாம்.
மேலும் பல வசதிகள் உள்ளன. விபரங்கள் அறிய இந்த பக்கத்தை http://codebox.no-ip.net/controller?page=bitmeter2 பார்க்கவும். தரவிறக்க இந்த லிங்க்கிற்கு செல்லவும்.
இந்த மென்பொருள் இலவசம். இதன் மூலம் உங்கள் பாண்ட்விட்த் உபயோகத்தை உரிய முறையில் திட்டமிட்டு கட்டுபாட்டுக்குள் வைத்து கொள்ள முடியும்.
8 comments:
hi.. gud post.
They told the scheme was unlimited broadband. But now they are telling this is 15GB max. If I am reaching 15GB, they will reduce the speed to half.
What yaar?
This tool will be very useful for me....
your blog is too good.
keep the good work.
எனக்கு மிகத்தேவையான பதிவு தலைவா.. மிக்க நன்றி!
thank you
//சென்ஷி said...
May 6, 2009 10:41 PM
எனக்கு மிகத்தேவையான பதிவு தலைவா.. மிக்க நன்றி!
//
எனக்கும் தலைவா..ரொம்ப நன்றி :)
உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே.
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததில் மகிழ்ச்சி
நல்ல பயனுள்ள தகவல்- நன்றி.
Thanks dear buddy
Post a Comment