விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 வெளியீடு

மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் (Operating System) விண்டோஸ் விஸ்டா குறிப்பிடத்தக்கது. பல பிரச்சினைகளுக்கு இடையில் வெளிவந்தது. மைக்ரோசாப்ட் தனது அடுத்த இயங்கு தள பதிப்பான விண்டோஸ் 7 விரைவில் வெளியிட போகிறது. இந்நேரத்தில் விண்டோஸ் விஸ்டாவை மேம்படுத்தும் நோக்கில் சர்வீஸ் பேக் 2 மைக்ரோசாப்ட் வெளியிட்டு உள்ளது.

சர்வீஸ் பேக்குகள் வெளியிடப்படும் போது அவற்றை நிறுவி உங்கள் இயங்குதளத்தை மேம்படுத்தி கொள்வது முக்கியமாகும். அது உங்கள் கணினிக்கு பாதுகாப்பையும் சிறந்த செயல்பாட்டையும் அளிக்கும்.

விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 நீங்கள் கீழ் கண்ட முறைகளில் பெறலாம்.

EXE இன்ஸ்டாலர் பேக்கேஜாக விரும்புவோர் இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : Windows6.0-KB948465-X86.exe . கோப்பின் அளவு : 348.3 MB

ISO இமேஜாக விரும்புவோர் இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி DVD யில் எழுதி பின்பு உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : 6002.18005.090410-1830_iso_update_sp_wave0-RTMSP2.0_DVD.iso . கோப்பின் அளவு : 1376.8 MB
முக்கியமாக இதை நீங்கள் நிறுவும் முன்பு உங்கள் விஸ்டாவில் சர்வீஸ் பேக் 1 நிறுவி இருக்க வேண்டும். விஸ்டா சர்வீஸ் பேக் 1 வேண்டுவோர் இந்தலின்க்கில் சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பின்பு சர்வீஸ் பேக் 2 நிறுவி கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : Windows6.0-KB936330-X86-wave0.exe . கோப்பின் அளவு : 434.5 MB .

விண்டோஸ் விஸ்டா உபயோகிப்பாளர்கள் தவறாது செய்யவும்.

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

2 comments:

Tech Shankar said...

இன்னைக்கு மழை பொழிஞ்சிட்டீங்க தல. குட்

Suresh said...

ரொம்ப யூஸ் புல் தலை