இணையத்தில் நாம் பல்வேறு மொழியிலுள்ள பக்கங்களை காண நேரிடும். எழுத்துக்களை கொண்டு அது எந்த மொழியை சேர்ந்தது என்பதனை மொழியறிவு இன்றி கண்டுபிடிப்பது இயலாத காரியம். எழுத்து பிங்கர் சிப்ஸ் மாதிரி குறுக்கும் நெடுக்கும் கோடாக இருந்தால் சீன மொழி என்றும், ஜிலேபியை பிரித்து தொங்க விட்டமாதிரி இருந்தால் தெலுங்கு அல்லது கன்னடம் என்றும் அளந்து விடலாம் .
உண்மையில், எழுத்தை வைத்து அது என்ன மொழி என்பதனை கண்டறிய இணைய தளங்கள் உள்ளன.
1. கூகுளின் மொழி கண்டறியும் பக்கம் : மொழி கண்டறிய வேண்டிய சில வார்த்தைகளை தேடல் கட்டத்தில் பேஸ்ட் செய்து Detect Language கிளிக் செய்யுங்கள். மொழியை கண்டறியலாம். அதிகமான வார்த்தைகளை பேஸ்ட் செய்யும் போது முடிவு துல்லியமாக கிடைக்கும்.
2. What Language is this? : இந்த இணையதளமும் மேலே சொன்ன வேலையை செய்யும்.
இவை இரண்டு தளங்களும் நமது தமிழ் மொழியை மிக எளிதாக கண்டுபிடித்து விட்டன.
0 comments:
Post a Comment