இடுகையில் லிங்க்குகள் கொடுக்க/புதிய பக்கத்தில் திறக்க

சென்ற பதிவில் ஆர். வடிவேலன் அவர்கள் ஒருசந்தேகம் கேட்டு இருந்தார்.

"எனக்கு ஒரு சந்தேகம் என்னுடைய எப்பொழுது சுட்டி கொடுத்தாலும் புதிய விண்டோவில் திறக்கும் படி செய்யவேண்டும் முடியுமா? எப்படி செய்ய வேண்டும்?"

இது எளிதான காரியம்தான். உங்கள் இடுகையில் லிங்க் கொடுக்கும் பொது அதன் HTML நிரலில் <a href= வார்த்தையை தேடுங்கள் அதன் அருகில் target="_blank" என்று கொடுத்து விடுங்கள். இனி நீங்கள் லிங்க் கொடுத்த பக்கங்கள் புதிய விண்டோவில் திறக்கும்.

சற்று விரிவாக சொல்ல வேண்டுமெனில்

நீங்கள் இடுகையை உருவாக்கும் போது முதலில் லிங்க் கொடுக்க விரும்பும் வார்த்தைகளை செலக்ட் செய்து கொள்ளுங்கள். பின்பு "Link" பட்டனை கிளிக் செய்து லிங்க் கொடுக்க வேண்டிய URL கொடுத்து கொள்ளுங்கள். கீழே உள்ள உதாரணத்தில் நான் "கூகிள் இணையதளம்" என்ற வார்த்தைகளை செலக்ட் செய்து http://www.google.com URL -க்கு லிங்க் கொடுத்து உள்ளேன்.

உதாரணம் : கூகிள் இணையதளம் [கிளிக் செய்து பாருங்கள் இதே பக்கத்தில் திறக்கும்]
நிரல் : <a href="http://www.google.com/">கூகிள் இணையதளம்</a>இதனை புதிய பக்கத்தில் திறக்க வைக்க "Edit Html" செய்யவும். தோன்றும் நிரலில் நாம் லிங்க் கொடுத்துள்ள வார்த்தைகளுக்கான வரிகளை தேடுங்கள். <a href= என்று ஆரம்பிக்கும். அதில் target="_blank" என்பதனை சேர்த்து விடுங்கள். இனி அந்த லிங்க் புதிய பக்கத்தில் திறக்கும்

உதாரணம் : கூகிள் இணையதளம் [கிளிக் செய்து பாருங்கள் புதிய பக்கத்தில் திறக்கும்]
நிரல் : <a target="_blank" href="http://www.google.com/">கூகிள் இணையதளம்</a>இது போன்று நீங்கள் இணைக்கும் ஒவ்வொரு லிங்க்குக்கும் target="_blank" என்பதனை சேர்த்து கொண்டால் அனைத்து லிங்குகளும் புதிய பக்கத்தில் திறக்கும்.

-----------------------------[ அல்லது]------------------------------

JAVASCRIPT வழிமுறை :

ஒவ்வொரு முறையும் Edit செய்வது சலிப்பாக இருந்தால் எளிய javascript மூலம் இந்த வேலையை செய்ய வைக்கலாம். இந்த நிரல் நீங்கள் அடுத்தவர் பக்கங்களுக்கு கொடுத்துள்ள லிங்க்குகள் (External Links) மட்டும் புதிய பக்கத்தில் திறக்கும்.

அந்த javascript நிரலை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி திறந்து கொள்ளுங்கள். அல்லது கீழே உள்ள நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்.


இதில் முக்கியமாக நீங்கள் YOUR-BLOG-NAME.blogspot.com என்ற இடத்தில் உங்கள் பிளாக்கினுடைய பெயரை கொடுக்க வேண்டும்.

அடுத்து உங்கள் பிளாக்கரின் Dashboard -ல் Layout --> Edit HTML பக்கத்திற்கு செல்லவும் . பின்பு அங்கு தோன்றும் Code -ல் என்ற வார்த்தையை தேடவும். அதன் கீழே நீங்கள் காப்பி செய்து வைத்துள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை பேஸ்ட் செய்து விடவும்.


இப்போது SAVE TEMPLATE செய்து விடவும்.

அவ்வளவுதான். வேறேதும் மாற்றம் செய்ய தேவை இல்லை.
இனி உங்கள் இடுகை பக்கத்தை Refresh செய்யவும். உங்கள் பிளாக்கின் லிங்குகள் அதே பக்கத்தில் திறக்கும். அடுத்தவர் தளங்களுக்கு நீங்கள் கொடுத்துள்ள லிங்க்குகள் (External Links) புதிய பக்கத்தில் திறக்கும்.

இதை செயல்படுத்துவதில் உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் தயங்காமல் பின்னூட்டத்தில் கேட்கவும். நிவர்த்தி செய்து வைக்கிறேன்.

நன்றி.

Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

16 comments:

கடைக்குட்டி said...

சூப்பர் தலைவா!!!!

டிவிஎஸ்50 said...

@கடைக்குட்டி
உங்களுக்கென்றே மிகவும் எளிதான ஜாவா ஸ்கிரிப்ட் முறை ஒன்றை புதிதாக போட்டு உள்ளேன். பார்க்கவும்

Suresh said...

நண்பா உங்களது வலைபூவை பற்றி நேற்று என நண்பர்களிடம் கூட பேசிக்கொண்டு இருந்தேன்...

பொதுவா நமக்கு தெரிந்த விஷியத்தை தான் மக்கள் பதிவுலக பகிர்ந்துபாங்க ஏனா நம்ம அதே பீல்ட் ஆனா
உங்க ஒரு ஒரு பதிவு ரொம்ப புதுசா இருக்கு, புது விஷியங்கள் அத விட முக்கியமா ரொம்ப உபயோகமா இருக்கு

தொடர்ங்கள் உங்கள் பணியை விரைவில் நீங்கள் மிக உயரிய இடத்துக்கு வருவது உறுதி

உங்கள் பதிவுகள் அனைத்தும் என் மெயிலில் Subscribe செஞ்சிட்டேன்

Sharepoint the Great said...

அருமைங்க.. பின்னி பெடல் எடுக்கிறீங்க. நன்றி

முனைவர்.இரா.குணசீலன் said...

நீண்ட நாள் ஐயம் தீர்ந்தது
மகிழ்ச்சி.

வடுவூர் குமார் said...

இப்படி ஸ்கிரிப்ட் எழுதியே ஓட்டிடலாம் போல இருக்கே!!
படிச்சா நச் என்று புரிகிற மாதிரி இருக்காதா ஸ்கிரிப்ட்!

வடுவூர் குமார் said...

சரியாக வேலை செய்கிறது,நன்றி.

வடிவேலன் ஆர். said...

தல எனக்கு வேலை செய்யல உதவுங்கள் எப்படி

இரத்தினபுகழேந்தி said...

நன்றி ந்ண்பரே நன்றி

டிவிஎஸ்50 said...

@வடிவேலன் ஆர். .

உங்கள் பிளாக்கின் டேம்பலேட்டை மொத்தமாக டவுன்லோட் செய்து ungaltvs50 அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள்.
சரி செய்து அனுப்புகிறேன்

டிவிஎஸ்50 said...

@suresh
உங்கள் வார்த்தைகள் விட்டமின் மாத்திரை போல் உள்ளது. நன்றி

KRICONS said...

இதை எளிய முறையில் ஜாவா ஸ்கிரிப்ட் இல்லாமல் செய்யலாம். விபரங்களுக்கு http://kricons.blogspot.com/2009/05/3.html

டிவிஎஸ்50 said...

@kricons

//நீங்கள் பதிவில் படங்களை வைத்திருப்பீர்கள் அதை கிளிக்கி பெரிதாகிபார்க்க உங்கள் வாசகன் ஆசைபடுவான். அதை கிளிக்கினால் உங்கள் பிளாக் முகவரியில் இருந்து வெளியேறி படத்தின் முகவரிக்கு சென்று படத்தை காட்டும்.//

எளிய தமிழில் அழகாக தெளிவாக புரியும்படி விளக்குகிறீர்கள்.

////அதற்கு base target='main' இந்த Codeயை Layoutல் Edit Justify FullHTML பகுதியில் சென்று head கீழே ஒட்டவும். அவ்வளவுதான் இனி உங்கள் பதிவில் உள்ள ஒவ்வொரு லின்கும் இனிமேல் தனி Windowவில் தான் திறக்கும்.//

உங்கள் எளிதான முறையையும் என்னுடைய இந்த இடுகையில் விரைவில் சேர்த்து விடுகிறேன்.

எளிதான வழிமுறைதான். ஆனால் உங்கள் பிளாக்கின் சொந்த லிங்க்குகளும் (Internal Links) புதிய பக்கத்தில் திறக்கும். உதாரணத்திற்கு உங்கள் வலது side bar -ல் உள்ள உங்கள் இடுகை பட்டியலில் உள்ள உங்கள் லிங்க்குகளை கிளிக் செய்து பாருங்கள்.

நான் அளித்திருந்த javascript உங்கள் பிளாக்கின் சொந்த லிங்க்குகளை (Internal Links) அதே பக்கத்தில் திறக்கும். வெளி லிங்க்குகளை (External Links) புதிய புதிய பக்கத்தில் திறக்கும்.

உங்கள் பதிவில் இதே பினூட்டத்தை போட்டேன். வந்து சேர்ந்ததா என்று தெரியவில்லை.

Subash said...

இலகுவான விளக்கம். நன்றிகள்

Wordpress ல் இந்த சிக்கல்கள் இல்லை. லிங்க் தரும்போதெ செட் பண்ணிவிடலாம். ( விட்டுக்கொடுக்க மாட்டோமே!!!! )

sangawww said...

சித்தப்பு என் ராசா மகராசனா இருப்ப
நன்றி மிகவும் பயன் உள்ள பதிவு என்னை போல புதியவர்களுக்கு

sangawww said...

சித்தப்பு என் ராசா மகராசனா இருப்ப
நன்றி மிகவும் பயன் உள்ள பதிவு என்னை போல புதியவர்களுக்கு