ஜிடாக்கில் பல்மொழி அகராதி

ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்றால் நாம் செய்யக்கூடிய விஷயங்கள் : அகராதி புத்தகத்தை புரட்டுவது, அகராதி மென்பொருள் மூலம் தேடுவது, இணையத்தில் கூகிள், விக்கிபீடியா, விக்சனரி மூலம் தேடுவது. இப்போது இன்னொன்றையும் சேர்த்து கொள்ளுங்கள். ஜிடாக்கில் Lookup Bot -டிடம் கேட்பது.

இப்போது ஜிடாக்கில் ஆர்வலர்களால் தானியங்கி Bot கள் அறிமுகபடுத்தபட்டு வருகின்றன. ஏற்க்கனவே இது பற்றி "ஜிடாக்கில் கேள்வி கேளுங்கள் பதில்பெறுங்கள் " இடுகையில் சொல்லியிருந்தேன். அந்த வகையில் techie-buzz.com , Dictionary Bot ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இதனை உபயோகப்படுத்த உங்கள் ஜிடாக்கில் lookup@bot.im என்ற முகவரியை இணைத்து கொள்ளுங்கள். இது உடனே ஆன்லைனுக்கு வந்துவிடும். அடுத்து நீங்கள் அர்த்தம் வேண்டும் வார்த்தைகளை அதனிடம் கேட்க வேண்டும்.

'dict வார்த்தை' கொடுத்தால் போதுமானது.உதாரணத்திற்கு 'Internet' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேட 'dict internet' என்று கொடுக்க வேண்டும். விரிவான விடை கிடைக்கும்.

துரதிஷ்டவசமாக தமிழில் அதிக வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லை :( . இந்த Bot அர்த்தங்களை கண்டுபிடிக்க விக்சனரியை உபயோகபடுத்துவதால் அங்கு தமிழ் வார்த்தைகள் அதிகம் சேர சேர இதுவும் மேம்படும் என்று நம்பலாம்.
Print this post

பதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.
புதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.

11 comments:

சென்ஷி said...

வாவ்.. !!

கலக்குறீங்க தலைவரே. உங்கள் சேவை தமிழ்மணத்திற்கு தேவை :)

அதுவும் அந்த காதல், அம்மா அருஞ்சொற்பொருள் விளக்கம் தேட சொன்னத எடுத்துக்காட்டியிருக்குறது கலக்கல் :-)

அன்புடன் அருணா said...

wow fantastic...thanx
anbudan aruna

கடைக்குட்டி said...

சூப்பருங்க!!!

கடைக்குட்டி said...

இனிமே எவ(ளு)னும் நம்மள இங்கிலிபீசுல கலாய்க்க முடியாது.. நன்றி :0

அப்பாவி தமிழன் said...

ஒட்டு போட்டாச்சு தல , உக்கார்ந்து சம்பாதிகறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html

r.selvakkumar said...

Good post! Thanx

டிவிஎஸ்50 said...

இந்த பதிவிற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. உங்களுக்கெல்லாம் உபயோகமாக இருந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி

@சென்ஷி, அன்புடன் அருணா, கடைக்குட்டி, அப்பாவி தமிழன், r.selvakkumar

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களிடம் என் பிளாக்கை பற்றி சொல்லுங்கள்

colvin said...

மிக....மிக..... பயனுள்ள குறிப்பு நண்பரே!.

தொடர்ந்து பயனுள்ள குறிப்புகள் பலவற்றை தருகின்றமைக்காக கோடி வாழ்த்துக்கள் உங்களுக்கு

தமிழிலும் சேவை விரிவுபடுத்தப்படும் என்பதை நம்புவோம்
அன்புடன்
கொல்வின்

piratheepan said...

நன்றி உபயோகமான தகவல்

Anonymous said...

அன்பு டிவிஎஸ் 50,

பல தொழில்நுட்பத்தகவல்களை தந்திருக்கிறீர்கள். பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வளவு நாட்களாக உங்கள் தளம் எனக்கு தெரியாமலேயே இருந்துவிட்டது.

எனக்கு ஆங்கிலப் புலமை குறைவு, ஆனால் ஆங்கிலத்தில் இருக்கும் பல்வேறு தகவல்களை படித்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துத்தரும் மென்பொருட்கள் இலவசமாகவோ விலைக்கோ கிடைக்குமா? இதுகுறித்த தகவல்களை அறியத்தந்தால் மகிழ்வேன் அல்லது எங்கு இது போன்ற தகவல்களை பெற‌லாம் என்றாவது தெரிவியுங்கள்.

மிக்க நன்றியுடன்
செல்வா

yasheeranwaariyya said...

I NEED THE EXPLANATION OF TAMIL WORDS WITH SOME EXAMPLE.IF U HAVE ANY SOFTWARE PLS SEND ME